Thottal Thodarum

Dec 3, 2011

Bejawada

bezawada_movie_new_stills_pics100 (1)
ராம் கோபால் வர்மா தயாரிப்பு. நாக சைதன்யாவின் ஆக்‌ஷன் அவதாரம். நம்ம அமலா பாலின் தெலுங்கு எண்ட்ரி. என்று பில்டப் ஸ்டாராங்காய் இருக்க, இளம்ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த படம். ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.


நம்ம ஊர் பிரபு பெஜவாடாவின் டான் காளி. அவரது ரைட் ஹேண்ட் விஜய் கிருஷ்ணா. பிரபுவின் தம்பி சங்கருக்கு அண்ணனின் இடத்தின் மேல் ஆசை. அவரேஆள் வைத்து அண்ணனை கொல்கிறார். பழியை ரைட் ஹேண்ட் விஜய் கிருஷ்ணாவின் மேல் போட யாரும் நம்ப மாட்டேன் என்கிறார்கள். எல்லோரும் விஜய்யையே மதிக்க, காண்டு ஆன சங்கர் அவனை ஆள் வைத்து  போட்டு விடுகிறார். அண்ணனை போட்ட சங்கரை நம்ம ஹீரோ சைத்தன்யா பழிவாங்குகிறார். ஸ்ப்ப்பா.. முடியலை. 
bezawada_movie_new_stills_pics100 (3)
சமீபத்தில் பார்த்த படு அமெச்சூர்தனமான தெலுங்கு படம் இதுவாய்த்தான் இருக்கும். கொஞ்சம் கூட புத்திசாலித்தனத்தையோ, அல்லது திரைக்கதையைப் பற்றியோ யோசனையில்லாமல் ஆளாளுக்கு மாத்தி மாத்தி கொன்று கொண்டு இவர்களே செண்டிமெண்ட் இருப்பதாய் ஃபீல் செய்து கொண்டு கொல்கிறார்கள். நாக சைதன்யாவின் நடிப்பு படு அமெச்சூர் தனம். அதுவும் அரையிடுக்கில் கட்டி வந்தது போல கால் அகட்டி நடந்தால் டெரர் லுக் வந்துவிடும் என்று சொல்லியிருப்பாரக்ள் போலிருக்கிறது. பாவமாய் இருக்கு. அவர் என்னதான் பெரியதாய் கைநீட்டி, கால்நீட்டி பில்டப் செய்தாலும் எல்.கே.ஜி பையன் செய்யும் மோனோ ஆக்டிங் போல இருக்கிறது. 
bezawada_movie_new_stills_pics100 (2)
அமலா பால் தான் ஹீரோயின். தனியாய் லவ் ட்ராக் எல்லாம் போட்டு கொல்லாமல் ஆஃப் வேயில் காதல் என்று சொல்லிவிட்டு, பாட்டு பாடிவிட்டு போகிறார். படம் முழுக்க அநியாய மேக்கப்பிலிருக்கிறார். அநேகமாய் மைனாவில் கிடைத்த இடத்தை விட்டு விடுவார் போல தோன்றுகிறது. மற்றபடி படத்தில் பிரபுவின் நடிப்பு மட்டும்கொஞ்சமே கொஞ்சம் நிறைவு. கோட்டா, எம்.எஸ்.நாராயணா, ப்ரம்மானந்தம் எல்லாம் படு த்ராபையாய் இருக்கிறார்கள்.
bezawada_movie_new_stills_pics100 (4)
படத்தின் இசையை ஐந்து பேருக்கு மேல் செய்திருக்கிறார்கள் ஒன்னுமே விளங்கலை. எடிட்டிங், ஒளிப்பதிவு எல்லாமே படு இரிட்டேட்டிங். நிறைய நீளமான ஷாட்கள். சில சமயங்களில் கொஞ்சம் எரிச்சலையும், பல சமயங்களில் கொலைவெறியையும் கொடுக்கிறது. எழுதி இயக்கியவர் புதியவரான விவேக் கிருஷ்ணா. படத்தின் ஹீரோவுக்கு பாதி படத்திற்கு மேல் தான் வேலையே. அதிலும் என்ன தைரியத்தில் நடு ரோட்டில் துரத்தி துரத்தி ஆட்களை கொல்லும் அண்ணன் கேரக்டரை கொலை செய்ததற்காக ஹீரோ ரிவெஞ் எடுப்பதை செண்டிமெண்டாய் எடுபடும் என்று நினைத்து மாய்ந்து மாய்ந்து படமெடுத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.

Bejawada –10/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

11 comments:

bandhu said...

பொல்லாதவன் கதையிலிருந்து பாதி உருவியிருக்கிறார்கள் போல இருக்கிறதே..

வவ்வால் said...

தாதா, & தாத குருப் பழி வாங்கிறதுனு ஒரு வரி கேட்டதும் ராம்கோபல்வர்மா அச்சா அச்சானூ தயாரிக்க கிளம்பிட்டார் போல , ரத்த சரித்திரம்னா அவருக்கு இஷ்டம் ஆச்சே!

கொல கார அண்ணனா இருந்தாலும் தம்பி பாசம் இருக்காதா , அவர் என்ன தர்ம பிரபுவா நியாய தர்மம் பார்க்க!

ரியல் லைப்ல இது போல கொலகார ரவுடிக்காக பழி வாங்கிறது உண்டு. சினிமால மாரல் வேல்யூ பார்ப்பாங்க!

அமலா பால் பத்தி சொன்னது தான் பகிர்னு இருக்கு... கல்லா கட்டும் வேகத்தில சீக்கிரம் காணாமல் போயிடும் போல.

10/50 ஆஹ் பேலன்ஸ் ஆக்கிடிங்க போல தமிழுக்கும் தெலுங்குக்கும்.கேசினொவிலா/மஹாராணி படம் 50 ரூக்கு டிக்கெட் ன கம்மியா இருக்கு.

Cable சங்கர் said...

வவ்வால்..
//கொல கார அண்ணனா இருந்தாலும் தம்பி பாசம் இருக்காதா , அவர் என்ன தர்ம பிரபுவா நியாய தர்மம் பார்க்க!//

இருக்கலாம் ஆனா அவனுக்காக பழிவாக்குறது ஹீரோன்னா. அவன் யாரு என்னங்கிறதுக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் இருக்கணும்.

நீங்க எல்லாம் எப்படியோ தெரியாது. நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.

Sivakumar said...

// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//

தேங்க்ஸ் சார்.

Jayaprakash said...

படம் இங்க ரிலீஸ் அகல அனா! பார்க்கலாமா வேணாமான்னு வுங்க விமர்சனத்தை படிச்சி தன தேசிடே பண்ணிடுறேன்!
இப்படிக்கு
ஜெயப்ரகாஷ் பெங்களுரே இருந்து

Jayaprakash said...

படம் இங்க ரிலீஸ் அகல அனா! பார்க்கலாமா வேணாமான்னு வுங்க விமர்சனத்தை படிச்சி தன முடிவு பண்ணிடுறேன்!
இப்படிக்கு
ஜெயப்ரகாஷ் பெங்களுரே இருந்து

R. Jagannathan said...

2 வார்த்தைல படம் த்ராபைன்னு போட்டிருக்கலாமே! ரொம்ப கஷ்டப்பட்டு படம் பார்த்து அதை விட கஷ்டப்பட்டு விமர்சனம் எழுதியிருக்கீங்க!

ரௌடிகள் ஸ்வீட்டான ஆட்கள்? அவர்கள் முதலாளிகளுக்கும், நண்பர்களுக்கும் மட்டும் தான்!
-ஜெ.

N.H. Narasimma Prasad said...

விமர்சனம் அருமை. பகிர்வுக்கு நன்றி.

வவ்வால் said...

கேபிள்,

//இருக்கலாம் ஆனா அவனுக்காக பழிவாக்குறது ஹீரோன்னா. அவன் யாரு என்னங்கிறதுக்கு ஒரு ஜஸ்டிபிகேஷன் இருக்கணும்.

நீங்க எல்லாம் எப்படியோ தெரியாது. நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//

இத தான் நானும் சொல்லி இருந்தேன், சினிமாவில மட்டும் தான் ரவுடி ஹீரோவுக்கு ஒரு மாரல் வேல்யூ காட்டுவாங்கனு. ரியல் லைப்ல அப்படி இல்லை.

அண்ணன் படு கொலைக்காரனாக இருந்தாலும் அவனை போட்டுட்டா , தம்பி சபதம் எடுத்து கொலைப்பண்ணதுலாம் உண்டு.

உங்க அளவுக்கு முக்கியமான தல களோட எல்லாம் எனக்கு பழக்கம் இல்லை, ஆனால் லோக்கல் பேட் பாய்ஸ் எல்லாம் நமக்கு தோஸ்துங்க தான், சரக்கடிச்சுட்டு வரும் போது பொறுப்பா கூட வந்து ஆட்டோ ஏத்தி விட்டு எங்க இறக்கி விடும் என எல்லாம் ஆட்டோ டிரைவருக்கு மிரட்டி அனுப்பி வைப்பாங்க. ரொம்ப அக்கரையாக கவனித்துக்கொள்வார்கள் பழகினவங்களை.எச்சில் பற்றிக்கவலை இல்லாமல் மாத்திக்குடிப்பாங்க , என் சரக்க தொட மாட்டாங்க யாராவது தொட்டாக்கூட எடுத்தனவை திட்டி எச்ச பண்ணாத அவன் சரக்க என தனியாக அன்புக்காட்டுவாங்க.

தனிப்பட்ட முறையில நல்லாவே பழகுவாங்க.சுண்டக்கஞ்சி எப்படி இருக்கும் குடிச்சுப்பார்க்கலாமானு கேட்டப்போ , அத எல்லாம் குடிக்காத உடம்பு கெட்டுரும், உனக்கு எதுக்கு கண்ட கன்றாவிலாம் மோந்து பார்த்தாலே வாந்தி எடுப்பனு அன்பா அட்வைஸ்லாம் கொடுப்பாங்க.ஏன் எனில் சுண்ட கஞ்சில கஞ்சா பொட்டலம் கட்டி போட்டு ஊறவைப்பாங்க, இன்னும் சில இடங்களில் போதை வஸ்துகள் போடுவாங்க.

நெல்லை கபே said...

// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//

பிரமிப்பா இருக்கு!

முரளிகண்ணன் said...

கேபிள்ஜி


\\// நான் சில வருடங்கள் சென்னையின் முக்கிய ரவுடிகளோடு சுமார் ரெண்டு வருடம் சுற்றியவன். ஸோ.. ஸ்வீட் ஆட்கள் அவர்கள் பர்சனலாய்.//

அப்போ உங்ககிட்டேயிருந்து புதுப்பேட்டை மாதிரி ஒரு சைதாப்பேட்டையை எதிர் பார்க்கலாமா?