Thottal Thodarum

Dec 19, 2011

கொத்து பரோட்டா –19/12/11


ஆதி+பரிசல்+யுடான்ஸ் பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்கள், இயக்குனர்கள் பத்ரி, நவீன், சிபி ஆகியோர் தங்களது சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள். பத்ரி பதிவர்களிடையே இருக்கும் திறமைகளை கண்டு ரசிப்பதாகவும், அவர்களது திறமைகளுக்கு இன்றைய சினிமா, மற்றும் சீரியல் உலகில் வாய்ப்பிருக்கிறது என்றார். நவீன் தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுவதாகவும், தன்னுடய அடுத்த படத்தில் பதிவுலகில் உள்ள ஆறு கவிஞர்களை பாடலாசிரியராக உயர்த்தப் போவதாய் அறிவித்தார். ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். அண்ணன் சிறுகதைகளைப் பற்றிய விமர்சனஙக்ளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் நச்சென அளித்தார். நிகழ்ச்சியை தொகுத்தளித்த கார்க்கிக்கு இது முதல் மேடை. அந்தவகையில் சிறப்பாகவே செய்தார். முதல் பரிசு பெற்ற ஆர்.வி.எஸ் தான் மைக் நெளிய பேசியதாய் அவரே தன் பேஸ்புக் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். நன்றி சொன்ன பரிசல், ஆதி, ஆகியோரும் தங்கள் பங்குக்கு மாற்றி, மாற்றி நன்றி தெரிவித்தார்கள். பரிசல் தன் புத்தகத்தைப் பற்றி பேசிய சில விஷயங்களை திருத்த வந்து பேசினார் கவிஞர், எழுத்தாளர் ராஜ சுந்தர்ராஜன். அவர் பேசியதற்கான மாற்றுக் கருத்தும் ஃபேஸ்புக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது  இடம் அளித்து, வெற்றியாளர்களுக்கு தன் பங்காய் சிறப்பு பரிசளித்து வாழ்த்திய டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கும் நன்றி. இதில் வழக்கமாய் நிறைய பேசும் நான் தான் ரெண்டு வரியில் வரவேற்று சொதப்பினேன் என்று நினைக்கிறேன். சிலர் அதை வரவேற்று கை தட்டியதிலிருந்து என் பேச்சிலிருந்து அவர்களுக்கு கிடைத்த சந்தோஷம் தெரிந்தது. மற்றபடி விழா இனிதே நடைபெற்றது. வந்திருந்து நடத்திக் கொடுத்த நண்பர்கள், வெற்றியாளர்கள் அனைவருக்கும் யுடான்ஸின் சார்பாக எங்கள் நன்றிகள்.
##########################


இந்த பக்கம் நாங்க அடிக்கவேயில்லை. தமிழர்கள் எல்லாரும் நல்லாத்தான் இருக்காங்க, சபரிமலையில நாங்க பாதுகாப்பு கொடுத்துட்டுத்தான் இருக்கோம். எங்கேயும் ப்ரச்சனையில்லை. அது போல தமிழ் நாட்டில் வாழும் மலையாளிகளை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை என்று கேரள முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ.. அகதியாய் பக்கத்து மாநிலத்திலேர்ந்து குடும்பம் குடும்பமா வந்தவங்க யாரு.. சார்..?
####################################
டிவிட்டரில் இந்தியாவிலேயே சிறந்தவர் யார் என்ற ஓட்டெடுப்பை ஹெட்லைன்ஸ் இண்டியா நடத்தி வருகிறது. அதில் நம் பதிவர், கார்க்கி முதல் நிலையில் உள்ளார். இந்திய அளவில் தமிழில் டிவிட்டர் முதல் நிலையில் உள்ளது சந்தோஷமாய் இருக்கிறது. அவருக்கு உங்கள் ஓட்டுக்களைப் போட்டு வெற்றி பெற வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளும் இந்த இனிய வேளையில், போட்டியில்லாமல் எந்த வெற்றியும் அவருக்கு சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக நானும் போட்டியில் இருக்கிறேன். அதனால் எனக்கும் உங்கள் பொன்னான வாக்கை போட்டு இந்திய அளவில் ஒரு ஓரத்திலாவது இடம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு வாக்களிக்க. அப்படியே ஃபேஸ்புக்குலயேயும் ஒரு ஓட்டை இங்க வந்து குத்தினீங்கன்னா.. நல்லாருக்கும் வாக்களிக்க
################################
கூ
குள் பஸ்ஸை மூடிவிட்டதால் பல பேர் கையொடிந்த நிலையில் இருக்கிறார்கள். பஸ் வந்து நன்றாக எழுதும் பல பதிவர்கள் எழுதுவது குறைந்தது.  சில கூகுள் +ல் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சிலர் பேஸ்புக், டிவிட்டர் என்று மாறியிருந்தாலும் மீண்டும் எழுத வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
############################
சமீபத்தில் பேஸ்புக்கில் ஒரு மெசேஜ். கோலா, பெஸ்சி குடிப்பவர்கள், இனி “பாலை” அருந்துங்கள் என்று இது மறைமுகமாய் ஒரு படத்திற்கான  ப்ரோமோ விஷயம் என்று தெரிந்தது. இதில் காமெடி என்னவென்றால் இந்த தமிழுணர்வு குஞ்சாமணிகள் பலர் படம் பார்க்காமலேயே ஜல்லியடித்துக் கொண்டிருப்பதும், அதைப் பற்றி ஏதும் புரியாமல் உடன் வந்து ஜலிப்பதுமாய் இருப்பவர்களைப் பார்த்தால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
################################
கேரள ப்ரச்சனையால் சபரிமலைக்கு செல்லாமல் பல பேர் ஆங்காங்கே இருக்கும் ஐயப்பன் கோவிலில் பதினெட்டுப் படியேறி தங்கள் விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள். பலருக்கு இது வருத்ததை தந்திருக்கிறது. மாலை போட்டு சபரிமலை ஏறிவரும் அனுபவத்தை இம்முறை இழந்துவிட்டோமே என்றும், அங்கே கிடைக்கும் ஒரு பேரானந்தம் இங்கே எங்கேயும் கிடைக்காது என்று தாங்கள் உறுதியாய் நம்புவதாகவும் சொன்னார்கள். கடவுள் எங்குமிருக்கிறான். எவ்வளவோ செய்யுற கடவுள் இந்த இரண்டு மாநில ப்ரச்சனையை தீர்க்க மாட்டாரா என்ன?
###############################
என் ட்வீட்டரிலிருந்து
என்னைப் பற்றி தன் நண்பர்களிடம் நல்லவிதமாய் நானில்லாத போது சொல்பவன் தான் என்னுடயவன்.


ஈகோ என்பது இரண்டு சைட் கத்தி. அதை சொல்வதற்கு முன் நீ எவ்வளவு விட்டுக் கொடுத்திருக்கிறாய் என்று யோசித்துப்பார்.

உடனிருப்பவரால் எந்த வித சந்தோஷமும் இல்லாமல் இருக்கும் போது தனியே இருப்பதே சாலச் சிறந்தது.


அவளுடன் தான் உன் சந்தோஷம் என்று நீ நினைத்தால் அவளுக்காக நீ துக்கமடைவதும் சந்தோஷமே
#################################
ப்ளாஷ்பேக்
இன்னொரு இளையராஜா கிளாசிக். கண்ணதாசனின் வரிகளில், எஸ்.பி.பியின் இழையும் குரலில், தேனான ஒரு பாடல்.  அருமையான தாலாட்டை கேட்ட சுகம் இப்பாடலை கேட்டால் கிடைக்கும். பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலும், இடையே இண்டர்லூடாக வரும் வயலினும் அஹா.. சுகானுபவம்.
##############################
அடல்ட் கார்னர்
A trucker who had driven his fully loaded rig to the top of a steep hill and was just starting down the equally steep other side when he noticed a man and a woman lying in the center road, making love. 

He blew his air horn several times as he was bearing down on them. 

Realizing that they were not about to get out of his way he slammed on his brakes and stopped just inches from them. 

Getting out of the cab, madder than hell, the trucker walked to the front of the cab and looked down at the two, still in the road, and yelled, "What the hell's the matter with you two? 

Didn't you hear me blowing the horn? You could've been killed!" 

The man on the highway, obviously satisfied and not too concerned, looked up and said, "Look, I was coming, she was coming, and you were coming. You were the only one with brakes."
##################################

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

மேவி... said...

anne .sorry vara mudiyala

Paleo God said...

மிகவும் தாமதமாக கொத்து பரோட்டாவை வெளியிட்டதற்கு கடும் கண்டங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

- கேபிள் சங்கர் கொலைவெறிப்படை.

முத்தரசு said...

//கேரள முதலமைச்சர் கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போ.. அகதியாய் பக்கத்து மாநிலத்திலேர்ந்து குடும்பம் குடும்பமா வந்தவங்க யாரு.. சார்..?//


மலையாளிகள் அகதியாக போகலே, போய் இருந்தால் தெரியும்

முத்தரசு said...

அகதியின் வலி என்ன என்று - அரசியல் பண்றாங்களாம் புண்ணாக்கு

Cable சங்கர் said...

100 online.. iam over whelmed..:))

CS. Mohan Kumar said...

விழாவுக்கு வர முடியாததில் வருத்தம். ஈரோடு போய்ட்டேன். நன்கு நடந்தது அறிந்து மகிழ்ச்சி. வா பொன் மயிலே எனக்கும் பிடிச்ச பாட்டு

Anonymous said...

Missed it thala, Sorry!!

கார்க்கிபவா said...

thanks thala

என்றும் இனியவன் said...

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்க வேண்டுமோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே விழா சிறப்பாக நடந்தமைக்கு வாழ்த்துக்கள்...!!!

Hemanth said...

தல,

"Iam" இரண்டு வார்த்தைகள் "overwhelmed" ஒரு வார்த்தை! probably a typo ?

RVS said...

thala மைக் நெளிஞ்சுதா இல்லையா? :-)

ILA (a) இளா said...

நன்றி! இதை ஒரு வார்த்தையில் முடிக்க மிகவும் சங்கடமா இருக்குங்க.

அதுக்காக நநநநநநநநன்ன்ன்ன்ன்றிறிறிறிறிறிறி'ன்னா சொன்ன முடியும்?

மணிஜி said...

/ரமேஷ்வைத்யா இன்னும் கொஞ்சம் பேச மாட்டாரா என்ற அளவிற்கு சிற்றுரை ஆற்றினார். //

ஏன் ? உனக்கு பத்தலையோ?