Thottal Thodarum

Dec 31, 2011

மகான் கணக்கு

Mahaan Kanakku 2524
இன்றைய ப்ளாஸ்டிக் உலகில் க்ரெடிட் கார்டு, டெபிட் கார்டு, பர்சனல் லோன் போன்றவைகளிலிருந்து தப்பித்தோ, அல்லது அதில் மூழ்கி போய் எழுந்திருக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டோ இருப்பவர்களை தவிர்க்கவே முடியாது. தானா வர ஸ்ரீதேவிய எவனாவது வேணாம்னு சொல்வானான்னு வாங்கிட்டு பின்னாடி அதுவே மூதேவியாகிப் போன நிஜங்கள் நிறைய. இப்படம் அதைத்தான் சொல்கிறது.ரமணா தன் அக்காவின் ஆதரவில் எம்.பி.ஏ படித்து வருகிறான். அவரின் படிப்பு செலவுக்கும், வெளிநாட்டில் சென்று ட்ரெயினிங் எடுப்பதற்கும் காசு வேண்டியிருப்பதால் காலேஜ் ப்ரொபசரான ரமணாவின் அக்கா புருஷன் ஒ.சி.ஒ.சி.ஐ பேங்கில் இரண்டு லட்சம் பர்சனல் லோன் வாங்குகிறார். நாளடைவில் பணத்தை திரும்பக் கட்டியும் விடுகிறார். ஆனால் வங்கியின் ஆட்களோ, லேட் பீஸ், அது இது என்று மேலும் ஒரு லட்சம் சொச்சத்தை கேட்டு ஆள் விட்டும், இரவு பகலாய் துரத்தியும் டார்சர் கொடுக்க, ஒரு கட்டத்தில் ஊருக்கு நடுவில் அவர்களை அசிங்கப்படுத்துகிறார்கள் பணம் வசூலிக்க வந்தவர்கள். இதனால் அவர்களின் திருமண நாளன்று அக்கா, மாமா, அவர்களின் ஐந்து வயது மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். வங்கிக்காரர்களால் தான் தன் அக்கா குடும்பமே அழிந்து விட்டது என்பதை தெரிந்து கொண்ட ரமணா என்ன செய்கிறார்?. என்பதுதான் கதை.
Mahaan Kanakku Movie Posters ரமணாவுக்கு சரியாக சூட்டாகிற ரோல்.  ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் என்னடா இது என்று யோசிக்க வைத்த நேரத்தில், அக்கா புருஷன் கடன் வாங்க ஆரம்பித்த காட்சியிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போகிறது. காதல் காட்சிகளில் வெளிப்படுத்தும் நடிப்பை விட அக்காள் குடும்பமே அழிந்த பிறகு வரும் காட்சிகளில் சின்னச் சின்னதாய் கண்களில் காட்டும் உருக்கத்திலும், வன்மத்திலும் அட. என்று சொல்ல வைக்கிறார். அக்கா தேவதர்ஷிணிக்கு டைலர் மேட் ரோல். அக்கா பெண்ணாக வரும் சுட்டிப் பெண் க்யூட். ஹீரோயினைவிட கூட வரும் பிகர்கள் அழகாகவும், சுவரஸ்யமாகவும் நடிக்கிறார்கள். என்ன செய்வது சிலருக்குத்தான் வாய்க்கிறது. இரண்டாவது பாதிக்கு மேல் தலைகீழாய் மாறிய கேரக்டரில்வரும் போது கொஞ்சம் சினிமாத்தனமான ரமணா தெரிகிறார். ஆங்காங்கே ஜீவா சந்தானத்தை போல இமிடேட் செய்ய முயற்சிக்கிறார்.
Mahaan Kanakku Stills 988 ஒளிப்பதிவு, இசை எல்லாமே பெரிதாய் பாராட்டும்படியாக இல்லை.  பாடல்கள் படத்தின் வேகத்திற்கு பெரும் இடையூராய் இருக்கிறது. குறையென்று சொல்லப் போனால் நிறைய இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் லோன் கொடுக்கும் முறையில், பின்பு  வெறும் 40 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு காலேஜ் ப்ரொபசர் அல்லாடுவாரா? ரோட்டு பிச்சைக்காரர்களையெல்லாம் வைத்துக் கொண்டு பல கோடி ரூபாய் கடன் வாங்க முடியுமா? வெறும் நாற்பதாயிரம் ரூபாய் கடனுக்கு ரெண்டு லட்சம் லோன் வாங்குவார்களா?  என்பது போன்று சில பல லாஜிக் மற்றும் சினிமாட்டிக் ஓட்டைகள் இருந்தாலும், பாராட்டப் படவேண்டியவர் இயக்குனர் சம்பத் ஆறுமுகம்.எங்கே அக்கா குடும்பமே தற்கொலை செய்து கொண்டபின் பழிவாங்க புறப்பட்டு விடுவாரோ என்று பயந்த வேளையில் வித்யாசமான ஒரு முயற்சியில் இறங்கியதற்காகவும், தனியார் வங்கிகளில் நடக்கும் சில பல அட்டூழியங்களை தைரியமாய் வெளிச்சம் போட்டு காட்டியதற்காகவும், ஆங்காங்கே வரும் பளிச்.. பளிச் வசனங்களுக்காகவும் தான். தேவையில்லாத பாடல் காட்சிகளைத் தவிர, இடைசொருகலாய் காதல் காட்சிகளை காட்டி வெறுப்பேற்றாமல் சொல்ல வந்த விஷயத்தை நீட்டாக சொல்ல முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னும் கொஞ்சம் பட்ஜெட்டும், திரைக்கதையில் நேர்த்தியும் செய்திருந்தாலும் ஒரு பெரிய இம்பாக்டை கொடுத்திருக்க வேண்டிய படம்.
மகான் கணக்கு- Accountable.

சங்
கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

8 comments:

வணங்காமுடி...! said...

Irritating.....

rajamelaiyur said...

அப்ப படம் பார்க்கலாம் ..

rajamelaiyur said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா

இன்று :

பதிவுலகை காக்க வந்த ஆண்டி - வைரஸ்

பிரசன்னா கண்ணன் said...

படம் நல்ல தான் இருந்தது.. குறிப்பா, இரண்டாம் பாதியில் வரும் வசனங்கள் எனக்கு ரொம்பவும் புடிச்சிருந்தது..
ஹீரோவோட அக்காவ அந்த ஏஜென்ட் அவமானப்படுத்தின தால தான் தற்கொலை செஞ்சுக்குறா அப்படின்னு நான் புரிஞ்சுக்கிட்டேன்..

Damodar said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!!!

பொ.முருகன் said...

படம் பேர்அடிக்கவில்லை நன்றாகத்தான் இருக்கிறது,என்ன விஜய் ,அல்லது மாகி நடித்திருந்தால் நன்றாக எடுபட்டிருக்கும்.

ஹாலிவுட்ரசிகன் said...

அப்போ படத்தை நம்பிப் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க. விமர்சனத்திற்கு நன்றி.

//பாடல்கள் படத்தின் வேகத்திற்கு பெரும் இடையூராய் இருக்கிறது//
எனக்கு தமிழ்ப்படங்களில் பிடிக்காத விடயங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தமே இல்லாமல் திடீர் என பார்த்ததும் ஒரு பாடல். சுத்த டைம் வேஸ்ட்.

Unknown said...

சொல்லவந்த விஷயத்தை தெளிவாக சொன்னதிற்கு இயக்குனருக்கு ஒரு சபாஷ் !