Thottal Thodarum

Dec 30, 2011

Don-2

don2
சாதாரணமாகவே இரண்டாவது பாகம் பெரும்பாலும் சொதப்பும். அது ஆங்கில படங்களுக்கு மட்டுமலல், இந்திய சினிமாக்களுக்கும் பொருந்தும் என்பதை இந்தப் படம் நிருபித்திருக்கிறது.  ஷாருக், ப்ரியங்கா சோப்ரா, லாராதத்தா, குனால் கபூர், போமன் இரானி, ஓம்பூரி, பர்ஹான் அக்தர், மற்றும் பல ஸ்லீக் டெக்னீஷியன்கள் லிஸ்ட் ஏற்படுத்திய பரபரப்பு கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் ஷாருக்கின் ரா 1 படு தோல்விக்கு பிறகு இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகம்.


டான் இம்முறை ஜேம்ஸ்பாண்ட் படம் போல ஒரு பக்கா ஆக்‌ஷன் எபிசோடிலிருந்து ஆரம்பிக்கிறார். கிட்டத்தட்ட பாண்ட் படங்களைப் போன்றே நான்கு துப்பாக்கி முனைகளுக்குள் நின்று ஜோக்கடிக்கிறார். நம்பவே முடியாத வேகத்தில் அத்துனை துப்பாக்கிகளையும் தூக்கி கடாசிவிட்டு சண்டை போடுகிறார். பரபரப்பான ஆரம்பம் தான் ஆனால் அந்த ஒரு காட்சியிலேயே இயக்குனர் நம்மை தயார்படுத்தி விடுகிறார். லாஜிக் என்ற ஒரு வஸ்துவை தேட வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்திய காட்சி அது. அதன் பிறகு நடக்கும் பல விஷயங்கள் ஏதோ படு பயங்கர ப்ளான் போல பில்டப் செய்கிறார்கள்.

இம்முறை டான் பணத்தை கொள்ளையடிக்காமல், அதை ப்ரிண்ட் அடிக்க ஒரிஜினல் ப்ளேட்டையே சுடுகிறார். அதற்காக ஒரு பெரிய டீமையே அமைத்துக் கொள்கிறார். தன் எதிரி வர்தானையும், ஒரு பெயிட் கில்லரையும், தன் ரசிகனான கம்ப்யூட்டர் ஜீக்கான குனாலையும் சேர்த்துக் கொள்கிறார். படு சீரியஸாய் ப்ளான் எல்லாம் வைத்து, சிஜியில் ப்ளானை விஷூவலாய் காட்டி பில்டப் செய்து, வில்லன்கள் ப்ளானையும், முறியடித்து ஆட்டத்தில் வெற்றி பெறுகிறாரா? இல்லையா? என்பதை விரைவில் ஏதாவது பே பர் வியூ சேனலில் பார்த்துக் கொள்ளலாம்.

ஷாருக் வத்திப் போன நதி போல யூத்தாய் தன்னை நிருபித்துக் கொள்ள கொத்தவரங்காய் போல இருக்கிறார். முகத்தில் தெரியும் அந்த பழைய குறுகுறுப்பும், கண்களில் தெரியும் ஷார்ப்னெஸும் காணவேயில்லை.  லாரா தத்தா அவ்வப்போது அழகிய டிசைனர் காஸ்ட்யூமில் வருகிறார். குனாலுக்கு கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்தபடி பேசும் காட்சிகள். ப்ரியங்கா சோப்ராவுக்குத்தான் கொஞ்சமே கொஞ்சம் வேலை இருக்கிற கேரக்டர். நடுநடுவே டானுக்கும் அவருக்கு இருக்கும் லைட் காதல், சாப்ட் கார்னர் காட்சிகள் சுவாரஸ்யம். இப்படிப்பட்ட சுவாரஸ்ய காட்சிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவு வறட்சி. கற்பனையில். பெரும்பாலும் படம் பார்க்கும் போது இடாலியன் ஜாப் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. டானின் பெரிய வெற்றிக்கு காரணம். டானைப் போலவே இருக்கும் இன்னொரு ஷாருக்கை வைத்து போலீஸ் ஆடிய ஆட்டம். அந்த ஆட்டத்தில் நல்ல ஷாருக் மாட்டிக் கொள்வது போன்ற கதை களனும், ட்விஸ்டுகளும் தான். வில்லன்களும், ஹீரோவுக்கு ஏற்படும் பிரச்சனையும் செம டஃபாக இருக்கும் பட்சத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால் டான் 2வில் வரும் வில்லன்கள் ஹோம் அலோன் பட வில்லன்களை விட மொக்கைகளாக இருப்பதால் பல நேரங்களில் அவர்கள் ப்ளான் செய்கிறேன் பேர்விழி என்று பேசும் போது சிப்பு சிப்பாக வருகிறது.
don ஷங்கர் இஷான் லாயின் இசை பெரிதாய் கவரவில்லை. பாடல்களில் மட்டுமிலலாமல் பின்னணியிசையிலும் தான். குறிப்பிடத்தக்க விஷயம் ஒளிப்பதிவு. ஜாசன் வெஸ்டின் ஒளிப்பதிவில்,  அந்த கார் சேஸிங் காட்சி நைல் பைட்டிங் ஒன். அதைத்தவிர, ஜெர்மன் பேங்கில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்.

ஒரிஜினல் என்னைக்குமே ஒரிஜனல்தான் என்பதை மீண்டும் சொந்தமாய் யோசித்ததாய் நினைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் தெரிந்துவிடுகிறது. பர்ஹான் அக்தரின் இயக்கத்தில் கண்டெண்டை விட மேக்கிங்தான் முன்னிலை வகிக்கிறது. ஷாருக்கை முன் வைத்து ஒரு ஹாலிவுட் பாணி படத்தை எடுக்க யோசித்த அளவிற்கு கொஞச்மே கொஞ்சம் கதை திரைக்கதையில் யோசித்திருந்தால் ஜெயிச்சிருக்கலாம். படத்தின் முடிவில் டான் 3 வேறு வருகிறது என்பதற்கு கோடி காட்டுகிறார்கள். எனக்கென்னவோ இந்த படத்தின் ரிசல்ட அதை நிறுத்திவிடும் என்று தோன்றுகிறது. டானை பிடிப்பது என்பது கஷ்டமான விஷயமில்லை. முடியாத விஷயம் என்று ஒரு பஞ்ச் லைன் அடிக்கடி பேசுவார் டான். அதே போல் டானைப் போல ஒரு சுவாரஸ்ய மசாலாவை இயக்க நினைப்பது கூட முடியாத விஷயமாய் ஆகிவிடும் போலிருக்கிறது.

டான்2 – டன் டன் டன் டட்டா…

சங்
கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

18 comments:

என்றும் இனியவன் said...

எனது தளத்தில்:
தனுசுக்கு போட்டியாக சிம்பு

Unknown said...

Mm Nalla Review cable sir !

but veru ella sitelayum Padam Nalla irukkunnu sonaangale ! :????
but enakku unga review la nadunila theriyum ! so namburan !

Regards
M.Gazzaly
(greenhathacker.blogspot.com)

Unknown said...

அவ்வளவுதானா?
அப்போ பில்லா 2 என்னவாகும்? :-)
டெர்மினேட்டர், மிஷன் இம்பாசிபிள் படங்களில் இரண்டாம் பாகங்களே நல்லாயிருந்ததாக நினைக்கிறேன்!

முரளிகண்ணன் said...

ஷாருக் நிக்கிறதே குறும்புல தான். அதை செய்ய முடியாத படி முகம் முத்தலாயிட்டது :-((

Ponchandar said...

வார்னரும் டானும் மலேசிய சிறையிலிருந்து தப்பும் காட்சியும் படு மொக்கை. அஜீத்தின் “பில்லா-2”-வும் இதே கதைதானா ????? தல என்ன செய்கிறாரோ ???

Anonymous said...

I am escape..

சேகர் said...

அஜித்தின் பில்லாவில் அவர் எப்படி பில்லா ஆகுறார் என்பதே கதை. 2010ல் ஆங்கிலத்தில் வெளியான ராபின் ஹூட் போன்ற கதை அம்சம்...டான் இரண்டாம் பாகம் நன்றாகவே உள்ளது..கொடுத்த காசுக்கு கவலை பட வைக்கவில்லை

Santhosh said...

I was liking your reviews before. But your stereo type review is boring now a days.

பிரபல பதிவர் said...

தல...
படம் சொதப்பல்லாம் இல்ல...
டான் 2 ஹிட்தான்....

ரெண்டாவது பட ஹிட் வரிசையில்தான் உள்ளது.... லகே ரஹோ முன்னாபாய் க்கு அப்புறம்

Cable சங்கர் said...

mister பிரபலபதிவர்.. அப்படி பார்த்தா.. ரா ஒன்னே.. நூறு கோடி கலக்ட் செய்த லிஸ்டுல இருக்கு.. அதுக்காக அது ஹிட்டா?

Cable சங்கர் said...

@சந்தோஷ். அப்ப ஒரு பத்து நாள் விட்டு படிங்க..

ஹாலிவுட்ரசிகன் said...

நம்ம தலயும் இதே கதைலயா நடிக்குறாரு? ஹய்யய்யோ ....

Anonymous said...

தமிழ்த் 'தல' நடிப்பது இந்தக் கதையில் இல்லை என்றுதான் கேள்வி.அது தமிழர்களின் சொந்தக் (!) கதை

Anonymous said...

மொத்தத்தில் ஷாருக்குக்கு மற்றொரு ஃபிளாப் படம்.

என் வலையில்;
ஹன்ஸிகா

scenecreator said...

Times of India gave 4 stars out of 5.

என்றும் இனியவன் said...

பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க

SathyaPriyan said...

பொதுவாக பட விமர்சனங்களில் உங்களுடன் என்னுடைய கருத்தும் ஒத்தே இருக்கும். ஆனால் டான் 2 எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரேஸி ஸ்க்ரீன் ப்ளே. நல்ல சண்டை காட்சிகள். க்ரிஸ்பான எடிட்டிங். இம்மாதிரி படங்களுக்கு கதை மெல்லிய இழைதான். அதனால் அதில் ஒன்றும் குறை தெரியவில்லை. படமும் ஹிட் என்றே சொல்கிறார்கள்.

sarav said...

idhula vara don entha don ? don 1 la don sethu poitarae ? idhu duplicate don ? duplicate don ethukku kollai adikka plan podanum ?
enna confusion ?

don ko pakadna mushkil nahin Naa mumkin hai .... intha dialogu original don Big B adikkum pothu oru pullarippu irukkum ippo ore arippa than irukku !

btw Tamil NHM writer vechu eppadi tamila type panrathu ?

cable ji oru training session podunga ithu theriyadhathala naan blog arambikka mudiyama thavkkren (hi hi)