அயன் – திரைவிமர்சனம்
250வது பதிவு பரபரவென ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் போன்ற படம் பார்க்க வேண்டுமா.? யஹிஹே ரைட் சாய்ஸ் பேபி. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை சும்மா தூள் பரக்க அடித்து ஆடியிருக்கிறார்கள். கள்ளக்கடத்தல் செய்யும் தாஸின் சகாவான சூர்யா, புத்திசாலி, படிப்பாளி, ஸ்மார்டானவன். ஒவ்வொரு முறையும் அவன் கடத்தி வரும் பொருட்களூக்கு எப்பாடு பட்டாவது எந்த்வித பாதகமில்லாமல் கொண்டு வந்து சேர்ப்பவன். அம்மா மீது பாசக்காரன். அப்பா போன்ற தாஸின் அன்புக்கு கட்டுப்பட்டவ்ன். தாஸின் புது எதிரியாய் சவுகார்பேட்டை வில்லன், நடிப்பில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் போட்டு கொடுக்க, அதிலிருந்து ஒவ்வொரு முறையும் தாஸும், சூர்யாவும், தப்பிக்க், பரபர கேட் அண்ட் மவுஸ் கேம். கேமின் உச்சகட்டமாய் திருடனை வைத்தே திருடனை பிடிக்கும் டெக்னிக் அருமை. காங்கோவில் நடக்கும் சண்டை காட்சிகளாகட்டும், தமன்னாவுடன் காதல் செய்வதகட்டும், படம் முழுக்க சூர்யா துள்ளித்திறிகிறார். ம்ஹூஹூம்.. ஸ்டாபரி ஐஸ்கிரிமாய், சாக்லெட்டாய், கோடை மழையாய், குளிர்கால வெயிலாய், தமன்னா, அவருடய கேரக்டர் பெரிதாக இல்லாவிட்டாலும், படம் ம...