எங்கேயும் காதல்
சன் பிக்சர்ஸ் அவசர அவசரமாய் பெரும் தோல்வியான மாப்பிள்ளை ஓடும் தியேட்டர்களில் எல்லாம் ரிலீஸ் செய்திருக்கிற படம். நேற்று நள்ளிரவிலிருந்தே உலகமெங்கு சூப்பர்ஹிட்டான என்று விளம்பரம் போட ஆரம்பித்திருக்கும் படம். சென்னையில் மட்டும் சுமார் பதினெட்டு தியேட்டர்களுக்கு மேல் வெளியாகியிருக்கும் ஜெயம் ரவியின் படம். ஹாரிஸின் ஹிட் பாடல்கள் கொண்ட படம் என்று பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை திருப்திபடுத்தியதா? என்ற கேள்விக்கு பதில் பின் வரும் வரிகளில்.