Posts

Showing posts with the label கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா ? -16

கந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறது? 16

நான் நடுக்கடல்லேர்ந்து சினிமாவுக்கு வந்தவன் சார் என்றார் நண்பர். போனில். என் சினிமா வியாபாரம் புத்தகத்தைப்   சில ஆண்டுகளுக்கு முன்னால் படித்துவிட்டு, பல நண்பர்களுக்கு ரெகமெண்ட் செய்திருக்கிறார். அப்போதிலிருந்தே என்னை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்திருக்கிறது. ஆனால் சமயம் இப்போதுதான் கிடைத்து என்றார். “நன்றி.. அதெல்லாம் இருக்கட்டும் அதென்ன நடுக்கடலேர்ந்து சினிமாவுக்கு வந்தேன்கிறீங்க?. “ என்றேன் ஆவல் தாளாமல். “ஆமாம் சார் நான் ஒரு மரைன் இன்ஜினியர். பணம் சம்பாத்தியம்னு ஓடிக்கிட்டேயிருந்தாலும் ஏதோ ஒண்ணை மிஸ் பண்றோம்னு தோணிட்டேயிருதுச்சு.  ஒரு நாள் நடுக்கடல்ல என் கேப்டன் கிட்ட சொன்னேன். நான் சினிமாவுக்கு போகப் போறேன். இந்த வேலை வேணாம்ணு. அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். சரி போன்னுட்டு. ஹெலிக்காப்டரை வர வழைச்சு, கரையில இறங்குனவன் நான்.” அவர் சொன்னது எனக்கு த்ரில்லிங் அனுபவமாய் இருந்தது. ஆனால் அப்படி ஆவலாய் தமிழ் சினிமாவுக்குள் வந்தவரின் வாழ்க்கை எப்படியிருந்தது என்பதை கேட்க மனம் பரபரத்தது. “ஆனா பாருங்க. எந்த சினிமாவுக்காக பறந்து வந்து இறங்குனேனோ.. அது ...