கொத்து பரோட்டா -2.0-4
கொத்து பரோட்டா 2.0-4 நவராத்திரி கொலு என்பது நம்ம வீட்டு பெண்களுக்கு சுவாரஸ்யமான விஷயமானாலும் , என் போன்ற பெரும்பாலான ஆண்களுக்கு கொஞ்சம் திகிலான விஷயம்தான் . கொலுவுக்கான இடம் ஒதுக்குவதில் ஆரம்பித்து , கொலு ஸ்டாண்டை நட்டு போல்ட் மாட்டி நிறுத்துவது என்பது என் இன்ஜினியரிங் படிப்புக்கான வருடாந்திர சவால் . கொலு பொம்மைகளை பரணிலிருந்து இறக்கி அதன் தூசி துடைத்து எடுத்துக் கொடுத்து , தூசி அலர்ஜியாகி , வேர்த்து வழிந்து வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம் ஆனால் இத்தனைக்கும் நடுவே சாயங்காலமானால் வீட்டிற்கு வருகிற பெண்களும் நம் வீட்டு பெண்களின் அலங்கார அணிவகுப்பும் , வயசுப் பையன்கள் தங்கள் கேர்ள் ப்ரெண்டுகளை சும்மா கொலுக்கு கூப்பிட்டேன் என்று அழைத்து வருவதும் , வெற்றிலை பாக்கு வாங்கிய படியே ஊர் கதையை மென்று துப்பிப் போகும் பேரிளம் பெண்கள் , எனக்கு நினைவு தெரிந்து கிட்டத்தட்ட குடும்ப பாடல் போல ஆயர் பாடி மாளிகையையோ ,, கண்ணன் வருவான் கதை சொல்லுவான் பாடலை பாடும் ஹெரிடேஜ் பெண்மணிகள் . புதிதாய் பட்ட...