Posts

Showing posts with the label நுங்கம்பாக்கம்

சாப்பாட்டுக்கடை - பிகானீர்வாலா

Image
 சென்ற வாரம் நுங்கம்பாக்கம் பக்கம் போன போது  பிகானீர்வாலா கடையின் வாசலில் ஏகப்பட்ட வட இந்தியர்கள் கூட்டம் காத்திருந்தது. கார்கள் அணிவரிசை கட்டியிருந்தார்கள். வெஜிட்டேரியன் உணவகங்களில் வட இந்தியர்கள் க்யூ கட்டி நிற்கிறார்கள் என்றால் நிச்சயம் தரமானதான் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. சாதாரணமாய் க்யு கட்ட மாட்டார்கள். அடுத்த ஒரு வார நாளில் சென்று பார்த்த போது அட்டகாசமான க்ரவுண்ட் ப்ளோர் டிஸ்ப்ளேவே கண்ணைக் கட்டியது. அத்தனை விதமான ஸ்வீட், கார வகைகள். கிலோ கணக்கில் ஏகப்பட்ட ஆபர்களோடு. ஒரு ப்ளோர் முழுக்க இந்த அயிட்டங்களுக்கு என்று ஒதுக்கியிருக்க, மாடியில் விஸ்தாரமான உணவகம். ரொம்பவும் விஸ்தாரமான மெனு இல்லை என்றாலும் இருக்கும் மெனுவில் சோளாபூரியை ஆர்டர் செய்தேன். அட்டகாசமான ரெண்டு பூரிக்களோடு சென்னா, பன்னீர் மற்றும் உருளைப் போட்டு கொடுத்தார்கள். அட்டகாசமான சுவை. கூடவே தொட்டுக் கொள்ள பிகானீர் ஊறுகாய்.  ப்ளேட்டர் மீல்ஸ் தருகிறார்கள். அதில் ஒரு ஸ்வீட், ஒரு ரைஸ், மூன்று சப்ஜிக்கள், ஒரு ரைத்தா, ஒரு அப்பளம், மூன்று ரொட்டிக்கள், எல்லாம் சேர்த்து 370 ரூபாய். கொஞ்சம் அதிகம் தான். பாவ்...

சாப்பாட்டுக்கடை

Image
ஒரு மழை நாளில் ஒரு நண்பருடனான மீட்டிங்கை முடித்துவிட்டு வர நேரமாகிவிட்டது. அவருடய அலுவலகத்திலிருந்து கிளம்பி வெளியே வந்தால் பெரும் மழை. இரவு மணி சுமார் 12.30 இருக்கும். கோடம்பாக்கத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி வரை திறந்திருக்கும் ஒரு உணவகம் அன்று மூடிவிட்டிருந்தார்கள். பேச்சு சுவாரஸ்யத்தில் பசி தெரியவில்லை. ஆனால் இப்போது பசி பின்னி எடுத்தது. அப்போதுதான் எனக்கு சட்டென ஞாபகம் வந்தது. TWILIGHT TAKEOUT. மாலை 7 மணி முதல் அடுத்த நாள்காலை 7 மணி வரை சுடச்சுட உணவு கிடைக்குமிடம். ஆனால் ஒன்லி பார்சல். நுங்கம்பாக்கத்தில் லேக் ஏரியாவில், பார்க் தெருவில் இருக்கிறது. அந்த மழை இரவிலும் படு சுறுசுறுப்பாக வியாபாரம் நட்ந்து கொண்டிருந்தது. நட்ட நடு இரவில் நல்ல சுடச்சுட வெஜ், நான் வெஜ் பிரியாணிகள், நான், பட்டர் நான், ப்ரைட் ரைஸ், மற்றும் சைட் டிஷ்ஷுகள் கிடைக்கும். இதை தவிர இன்னும் நிறைய உணவு வகைகள் கிடைக்கிறது விடிய..விடிய..  போன் செய்து ஆர்டர் செய்துவிட்டு கூட போய் வாங்கிக் கொள்ளலாம். டெலிவரியும் செய்கிறார்கள். நாங்கள் அன்று ஆளுக்கு ஒரு பிரியாணி பார்சல் வாங்கிக் கொண்டு காரிலேயே உட்கார்ந்து சாப்பிட்டோம்...