சாப்பாட்டுக்கடை- செல்வம் மெஸ் தேனி
தேனியில் இறங்கிய மாத்திரத்தில் நண்பர் ராஜனுக்கு போன் செய்தேன். எனக்கு அறை புக் செய்திருப்பதாகவும் குளிச்சிட்டு ரெடியா இருங்க.. கீழே ஓட்டல்ல ஏதும் சாப்பிடாதீங்க நல்ல டிபன் கடைக்கு கூட்டிட்டு போறேன் என்றார். நான் போய் சேர்ந்த போது மணி ஒன்பது. பஸ் பயணம் என்பதால் இரவு உணவை தவிர்த்து விடுவேன். அதனால் வயிறு கபகபவென இருந்தது. நான் குளிச்சு, இவரு வந்து என கொஞ்சம் அங்கலாய்ப்பாய் இருந்தாலும், என் ரசனை தெரிந்தவர் நிச்சயம் ஒர் நல்ல கடைக்குத்தான் கூட்டிப் போவார் என்று ஆவலாய் சடுதியில் குளித்து ரெடியானேன். ராஜனும், நண்பர் அரண்மனை சுப்புவும் வந்தார்கள். அல்லி நகர் போகும் வழியில் உள்ள ஒர் சின்னக் கடையில் நிறுத்தினார்கள். சின்னக் கடை என்றால் நிஜமாகவே சின்னக்கடைதான். மொத்தமாய் ஒரு எட்டு பேர் உட்கார்ந்து சாப்பிடக்கூடிய கடை தான் செல்வம் மெஸ். ப்ரைட் ரைஸ் போன்ற ஒரு சாதத்தை கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்று கேட்டேன் பொங்கல் என்றார்கள். என்னாடா இது இப்படி உதிரி உதிரியாய் பொங்கலா என்று அதை ஒரு கை பார்ப்போம் என்று ஆர்டர் செய்தோம். நெய்யும், இல்லாமல் டால்டாவும் இல்லாமல் சீர...