இது என்னுடய 200வது பதிவு.. இதுவரை என் பதிவுகளை படித்து ஆதரவு அளித்தமைக்கு நன்றி.. மேலும் உங்கள் ஆதரவை நல்கி வேண்டுகிறேன். சக பதிவர் நண்பர் திரு. அக்னி பார்வை என்னையும் ஒரு கருத்தாய் கொண்டு பேட்டி எடுத்து பெருமைபடுத்தியமைக்கு நன்றிகள் பல.. அந்த பேட்டியின் cut&Past
அக்னியின் கேள்விகள்:பதிவர் கேபிள் சங்கரின் பதில்கள்
மீண்டும் ஒருமுறை ‘அக்னியின் கேள்விகள்’ பகுதியில் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்த முறை சினிமாவை பற்றி, நம் பார்வையில் சிக்கிக்கொண்டவர் கேபிள் சங்கர்.இவருக்கு அறிமுகம் தேவையில்லை, அந்தளவுக்கு பதிவுகளிள் பிரபலமானவர். சினிமா இயக்கும் முயற்ச்சியில் ஈடுபடுபவர், ஒரு நாள் வெற்றி பெறுவார், அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
1. கேபிள் சங்கர் பற்றி?
ஒரு சாதாரண பிஸினெஸ்மேன், நடிகன், திரைக்கதையாசிரியன், வசனகர்த்தா, குறும்பட இயக்குனர், திரைபட இயக்குனராகும் முயற்சியில் இருப்பவன் சமீபகாலமாய் ப்ளாக்குகளில் எழுதியே மற்றவர்களை நோகடிப்பவன்.
2. சினிமாவுக்கும் உங்களுக்குமான் தொடர்பு?
சினிமா எனக்கு ஒரு Passion. அதனால் சினிமாவில், தயாரிப்பு, நடிப்பு, உருவாக்குதல், தியேட்டர், விநியோகம் என்று பல பட்டறை அனுபவம்.
3. உங்கள் பதிவுகளிள் சினிமா விமரிசனத்தின் போது ஒரு சாஃப்ட் கார்னர் தெரிகிறதே?
நாளைக்கு நாமளும் படம் எடுப்போமே.. என்கிற அல்லில்தான்.
4. இத்தனை நாள் இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதுக்கென்ன நல்லாதானே இருந்திச்சு..
5. அண்மைகால இந்திய மற்றும் தமிழ் சினிமாவை பற்றி?
அதும் நல்லாத்தான் வரும்னு நம்பிக்கை.
6. உங்கள் பார்வையில் ஒரு படம் எப்படி இருக்க வேண்டும்.
மக்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு லாபகரமாய் இருக்க வேண்டும்.. வழக்கமாய் இது ரெண்டும் தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் நடக்கும்
7. பொதுவாக சினிமாவின் ம்றுபக்கமான சினிமா தொழிளாலர்கள் பற்றிய ஏன் பேசபடுவதில்லை?
நாம் அவர்களை பற்றி ஆர்வம் காட்டாததால். பொதுவாய் மக்கள் திரையில் பார்க்கும், நடிகர், நடிகைகளையே விரும்புகிறார்கள். அதன் பின்னால் இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ, மீடியாக்கள் தருவதில்லை. ஆனால் தற்காலத்தில், பல இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள் என்று மீடியா திரும்பியிருக்கிறது. ஆனால் இதற்கு முன்னரே பாரதிராஜா, பாலசந்தர் போன்ற ஜாம்பவான்கள், நடிகர் நடிகைகளுக்கு இணையாய் பிரபலமாய் இருப்பவர்கள்தான்.
8. சினிமா நடிகர்களுக்கு இருக்கும் ஒரு வித ‘கடவுள்’ இமேஜ் பற்றி ?
அது ஒரு வித கலாசாரமாகவே ஆகிவிட்டது. அதற்கு பொதுவாய் மக்களுக்கு படிப்பறிவு இல்லாதது கூட ஒரு காரணம்.
9. உலக சினிமாக்கள் பற்றி?
என்னை பொறுத்தவரை.. நல்ல திரைப்படங்கள் எல்லாமே உலக சினிமா வகைகள்தான். இங்கே.. நாம் ஆகா.. ஓகோ வென்று கொண்டாடும் படங்கள் எல்லாம் வணிக ரீதியாக தோல்வி படங்களாய்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறது. உலக அளவில் அவர்களது நெட்வொர்க் இருப்பதால் அவர்களால் வணிக் தோல்வியிலிருந்து மீண்டு படங்களை எடுக்க முடிகிறது.
ஒரு சம்பவம் என் நண்பருக்கு ஏற்பட்டது. அவர் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில் கதை சொல்ல, திரைக்கதையில் திருத்த சொல்லி அனுப்பினார்கள். நான் அவரிடம் கேட்டேன்.. ஏன் உலக சினிமாவை பற்றியெல்லாம் பேசுகிறார்கள் என்று சொன்னீர்களே..? irreversable படத்தையெல்லாம் பற்றி பேசினார்கள் என்கிறீர்களே.. அவர்களா.. திருத்த சொன்னார்கள் என்றேன்.
அதற்கு அவர் சொன்ன பதில்..
" நீங்க நல்ல டைரக்டர்ன்னு பெயர் வாங்க விரும்புகிறீர்களா..? அல்லது வெற்றி பட இயக்குனராக விரும்புகிறீர்களா..? "ன்னு கேட்கிறாங்க.. என்றார்.
இது தான் நம் நிலைமை.. வணிக ரீதியாய் வெற்றி பெறவில்லையென்றால் அதன் வலி மிக அதிகம்.

10. Perfume, Slum dog milliner, படங்களை பற்றி உங்கள் கருதென்ன?
Perfume ஒரு அருமையான படம். தமிழில் அந்த மாதிரி படங்கள் வருமா என்று தெரியவில்லை. ஆனால் இந்தியில் வருவதற்கான சாத்தியங்கள் இருக்கிறது. Slum dog மிக அருமையாய் திரைக்கதை அமைக்கப்பட்ட படம். சில பல ஓட்டைகள் இருந்தாலும் சூப்பர்.. ஞாயமாய் இந்தியர்கள் எடுத்திருக்க வேண்டிய படம்.
11. சசி, அமீர், பாலா தமிழில் மாற்று சினிமாவை தருவார்களா?
எனக்கு தெரிந்து மாற்று சினிமா என்று ஒன்று இருப்பதாய் தெரியவில்லை. ஒடுகிற படம், ஓடாத படம் இந்த இரண்டுதான் சினிமாவின் எதிர்காலத்தை நிர்ணையிக்கிறது.
12. திரைகதையாளருக்கும், திரை விமர்சகர்களுக்கும் தற்க்கால த்மிழ் சினிமாவில் உள்ள நிலை?
தமிழ் சினிமாவில் மட்டுமே இன்னமும், இயக்குனரே, கதை, திரைக்கதை, வசனம் எல்லாத்தையும் கட்டிக் கொண்டு அழுகிறார்கள். பாரதிராஜா ஒன்றோ, இரண்டு படங்களுக்கு மட்டுமே தன் சொந்த கதையை எடுத்திருக்கிறார்.. மற்ற படங்கள் எல்லாம் வேறொருவர் கதைகளே.. சமீபகாலமாய் வசனகர்த்தாக்களூக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. விமர்சகர்களை பற்றியெல்லாம் யாரும் கவலை படுவதாய் தெரியவில்லை. விகடன் நல்ல மார்க் கொடுத்தால் நல்ல படம் என்கிற நிலைப்பாடெல்லாம் எப்போதோ போயாச்சு.. பெரும்பலான விமர்சகர்கள் வில்லு, படிக்காதவனை பற்றி என்ன விமர்சனம் பண்ணினாலும், இரண்டு படங்களின் வசூல் நன்றாகதானே இருக்கிறது
.
13. வரும் நாட்களிள் சினிமா எப்படியிருக்கும் என் நினைக்கிறீர்கள்.
நிச்சயம் நன்றாகத்தான் இருக்கும் என்று நம்புகிறேன்.
14. பதிவுகள் எழுத எப்பொழுது நேரம் ஒதுக்குவீர்கள்.
இரவு 12 மணிக்கு மேல்.
15. அரசியல் பார்வையில் உங்கள் நிலை என்ன?
இந்த திமுக ஆட்சி வரை தீவிர திமுக அனுதாபியாகதான் இருந்தேன். இந்த முறை இவர்கள் அடிக்கும் கூத்தை பார்த்து கழண்டு கொண்டுவிட்டேன்.
அக்னிபார்வையின் கேள்விகளை படிக்க இங்கே அழுத்தவும்
அதே போல் தன்னுடய பதிவிலிருந்து என்னுடய நிதர்சன கதைகளுக்கு தொடுப்பு கொடுத்த நண்பர் நவநீதனுக்கும் நன்றிகள் பல.. அவரின் பதிவை படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..