Thottal Thodarum

Mar 31, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-6

சுமார் நூறு தியேட்டர்களிலாவது வெளியிடப்பட்டு,  டிவி, ரேடியோ,போஸ்டர், பேனர்கள் என வெகு விமரிசையாய் விளம்பரப்படுத்தப்படும் இத்திரைப்படங்களின் வசூல் தான் வெற்றியா? இல்லையா? என்பதை நிர்ணையிக்கும்.

Mar 29, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-5

அதெப்படி விளம்பரத்துக்கு செலவு செய்யப்படும் பணம் தயாரிப்பாளருடயதாகும்? அதுதான் பிரபல விநியோகக் கம்பெனியின் பெயரில் விநியோகிக்க கொடுத்தாயிற்றே? என்று கேட்பீர்களானால் நீங்கள் பாவம். நிஜத்தில் இப்படங்களை பெரிய விநியோகக்U கம்பெனிகள் விலை கொடுத்து வாங்குவதில்லை. அதற்கு ஒர் ப்ராசஸ் இருக்கிறது.

Mar 23, 2014

நடுநிசிக் கதைகள் -7

நடுநிசிக் கதைகள் -7

வடபழனி சிக்னல் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வழக்கம் போல போலீஸ் டிடி செக்கிங். பத்து மணி வாக்கில் முதல் கஸ்டமரை பிடிக்க படையோடு காத்திருந்தார்கள். முதல் களபலியாய் ஒர் டிவிஎஸ் 50க்காரர் வந்து மாட்ட, அவரும் அவரது வண்டியும் பார்க்கவே பாவமாய் இருப்பதாகவும், அவரிடம் ஏதும் தேறாது என்று ப்ரீத் அனலைசர் வைத்திருந்த சார்ஜெண்ட் சொன்னதால் உடனடியாய் விடப்பட்டார். இதற்குள் இரண்டு மூன்று பேர் மாட்ட, சார்ஜெண்டை தாண்டிக் கொண்டு போய் நிறுத்தி, தனியாய் கட்டிங் வாங்கிக் கொண்டு, அனுப்பிக் கொண்டிருந்தனர் சக போலீஸார்கள். கொஞ்ச நேரம் கவனித்துப் பார்த்தால் அவர்களின் டார்கெட் கார் தான் என தெரிந்தது.  அப்போது ஒர் குவாலிஸ் வர, வண்டியை மறித்த போலீஸ்காரர் கதவை திறக்கச் சொன்னார். 

Mar 20, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-4

சிறு முதலீட்டு பட தயாரிப்பாளர்களின் படங்கள் விநியோக நிறுவனங்கள் மூலமாய் வெளியிட தயாராக முதலில் செய்ய வேண்டிய தியாகம் தங்கள் படத்தின் வியாபாரம் முழுவதும் அந்நிறுவனம் மூலம் செய்து கொள்ள சம்மதித்து ஒப்பந்தம் போட்டுக் கொள்வதுதான். இங்கிருந்துதான் அந்நிறுவனங்களின் வேலை ஆரம்பிக்கிறது. எல்லா சின்னப் படங்களையும் அவர்கள் இம்மாதிரியான ஒப்பந்தங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அப்படங்களையும் பார்த்து ஓரளவுக்கு தப்பிக்கும் என்று நினைக்கும் படங்களை மட்டுமே தெரிவு செய்வார்கள்.

சரி.. படத்தை விநியோக நிறுவனத்திடம் ஒப்படைத்தாயிற்று அடுத்து என்ன? என்றால் அந்நிறுவனம் தங்கள் படத்தை எப்போது வெளியிடுமோ என்று காத்துக் கிடக்க வேண்டும். நல்ல கேப் பார்த்து பப்ளிசிட்டி பெருசா பண்ணி ஜெயிப்போம். நீங்களும் நாலு காசு பாக்க வேணாமா? என்று செண்டிமெண்டலாய் கேட்டு அசத்துவார்கள். வெறு வழியேயில்லாமல் தயாரிப்பாளர் விநியோகஸ்தரின் கருணைப் பார்வைக்காக காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் சொல்லும் நல்ல தருணம் தயாரிப்பாளரிடம் சொன்னது அல்ல, அப்படத்த்ற்கு விளம்பரம் செய்ய ஆகும் பணத்தை ரெடி செய்வதற்குத்தான். அவர் எப்படி ரெடி செய்வார்? அங்குதான் அவரின் பலம் தெரிய ஆரம்பிக்கும்.

Mar 18, 2014

சாப்பாட்டுக்கடை - ராயப்பாஸ்

கோவையில் பிரபலமாய் விளங்கும் ராயப்பாஸ் இங்கே சென்னையில் ஒர் புதிய கிளை துவங்கி உள்ளனர் என்ற விளம்பரம் பார்த்தேன். கோவைக்கு சென்று வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கே ராயப்பாஸின் சுவை தெரியாத்தால் சென்னை ப்ராஞ்சுக்கு நானும் என் கதாநாயகனும் வண்டியை விட்டோம். சென்னை திநகரில் சோமசுந்தரம் பார்க் ரோட்டில் இருக்கிறது. டால் வாக்கர் எனும் உடற்பயிற்சி கருவி விற்கும் கடையின் மேலே சாப்பாட்டுக்கடை என்பது நகைச்சுவையாய் இருந்தது. 

Mar 10, 2014

கொத்து பரோட்டா -10/03/14 - Queen -நிமிர்ந்து நில், 300, Highway, கேட்டால் கிடைக்கும்,

Queen


கங்கனா ராவத். பேஷன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து மிரண்டிருக்கிறேன். இப்போது குயினில். டெல்லியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்த பெண் ராணி. அவளின் திருமண மெகந்தி விழாவில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் கலந்து கட்டிய சந்தோஷத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் கல்யாணம் என்கிற நிலையில் வருங்காலக் கணவன் காபி டேவுக்கு அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று சொல்கிறான். என்ன ஏதுவென புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறாள் ராணி. கல்யாணம் நிற்கிறது. கல்யாணம் முடிந்து ஹனிமூன் போவதற்காக ப்ளான் செய்யப்பட்ட, பாரீஸ், ஆம்ஸ்டர்டாம் பயணத்தை தனியே கிளம்புகிறாள். பொத்தி பொத்தி வளர்கக்ப்பட்ட, ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தில் வளர்ந்த, எல்லாவற்றுக்கும் ஜெய் மாதா ஜி என கடவுளை துணைக்கழைக்கும் பயந்த சுபாவமுள்ள, அவ்வளவாக வெளியுலக எக்ஸ்போஸர் இல்லாத கல்யாணத்திற்காகவே வளர்க்கப்பட்ட பெண்ணின் இந்த பயணம் மூலம் கிடைத்த அனுபவம் தான் படம்.  கொஞ்சம் அசந்தாலும் சோம்பிப் போக வாய்ப்புள்ள திரைக்கதை. ஆங்காங்கே சோம்பி நின்றாலும், கங்கனாவின் இன்னொசென்ஸ் படத்தை காப்பாற்றுகிறது.  

படம் முழுக்க ரசிக்க வைக்கும் கேரக்டர்கள். பாரீஸில் பக்கத்து ரூமில் கஸ்டமரோடு உறவு வைத்துக் கொண்டுவிட்டு, யாரிடமும் சொல்லாதே என்று பேசியபடி நட்பாகும், இந்தியனுக்கும் ப்ரெஞ்சுகாரிக்கு பிறந்த விஜய லஷ்மி, லண்டனின் வேலை செய்தாலும், டிபிக்கல் மிடில் க்ளாஸ் மனப்பான்மையில் வளைய வரும் மாப்பிள்ளை,  ஆம்ஸ்டர்டாமில் கண்ணாடி ரூமில் விபச்சாரம் செய்யும் முஸ்லிம் பெண், ரூம்மேட்டாய் வேறு வழியில்லாமல் ஒர் கருப்பன், ஜப்பானியன், ரஷ்ய கேரக்டர்கள். வீடியோ சேட்டில் விஜயலஷ்மியின் க்ளீவேஜை பார்த்துவிட்டு, ஜொள்ளு விடும் கங்கனாவின் வயதுக்கு வர இருக்கும் தம்பி சோட்டு.  ஆம்ஸ்டர்டாமில் ரெஸ்டாரண்ட் வைத்திருக்கும் இளைஞன். கொஞ்சம் நழுவினாலும் க்ளீஷேவாக போய் விடக்கூடிய கேரக்டர்கள் தான். ஆனால் அக்கேரக்டர்களின்  உண்மைத்தன்மை அதை காப்பாற்றுகிறது.

Mar 8, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-3

அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான்.  இதென்ன கலாட்டா? படத்தைத்தான் பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறதே? என்று கேட்பீர்களானால் நீங்கள் அப்பாவி. இம்மாதிரியான சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஏதோ இந்நிறுவனங்கள் வெளியிட்டால் மட்டுமே தங்கள் படத்திற்கு மதிப்பு என்று நினைத்துக் கொண்டு, பத்து பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் தங்கள் படத்தின் எல்லா உரிமைகளையும், அவர்கள் மூலமாய் வியாபாரம் செய்ய எழுதிக் கொடுத்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள். படத்தை தங்கள் வசம் வாங்கி வைத்துக் கொண்ட நிறுவனம் அதற்கு பிறகு காய் நகர்த்த ஆரம்பிக்கும். முதலில் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு போகும் என்பதற்காக அவர்களுடன் இணைப்பில் இருக்கும் சாட்டிலைட் சேனல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும். பேச்சு வார்த்தைகளுக்கு பின் ஒர் ரேட் பிக்ஸ் ஆகும் வரை இதோ அதோ நல்ல டேட் பார்த்து ரிலீஸ்  பண்ணனும், பெரிசா விளம்பரம் பண்ணாத்தான் ஒர்கவுட் ஆகும் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருப்பார். 

Mar 6, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-2

தமிழ்நாட்டுல உள்ள எல்லா தியேட்டரையும் அவங்க கண்ட்ரோல்ல வச்சிருக்காங்க அதனாலத்தான் சின்ன படம் ஓட மாட்டேன்குது என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் நிற்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒரு நான்கு பேரிடம் தான் சினிமா இருப்பது போலத் தோன்றும் ஆனால் அது நிஜமல்ல என்பதை அடுத்த நான்கு பேர் வரும் போது தெரியும். சென்ற ஆட்சியில் திமுக குடும்ப நிறுவனங்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வேறு ஒரு நாலு நிறுவனங்களை  சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Mar 5, 2014

தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2

கிட்டத்தட்ட 300 படங்கள் சென்ற வருடம் தயாரிக்கப்பட்டு. சென்ஸார் ஆகி, வெறும் 160 சில்லறை படங்கள் மட்டும் வெளியாகியிருக்கிறது. மீதமிருக்கும் நூற்றிச் சொச்சப் படங்களின் நிலை?. இவையனைத்து சென்சார் செய்யப்பட்டவை. இன்னும் அந்த நிலைக்கு வர முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கும் படங்கள் நிறையவே இருக்கிறது. தயாரிப்பு நிலை இப்படியிருக்க, சென்ற வருடமாகட்டும், இந்த வருடமாகட்டும் படங்களின் வெற்றி நிலை என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களில் வசூல் ரீதியாய் வெற்றி பெற்ற படம் “கோலி சோடா” மட்டுமே.. மற்ற படங்கள் எல்லாம் பேப்பர் விளம்பரங்களில் மட்டும் மார் தட்டும் வசூல் என்று போட்டு பெருமை பீற்றிக் கொண்டிருக்கிற நிலையில் தான் தமிழ் சினிமா போய்க் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன காரணமாய் இருக்க மூடியும்?. சினிமாவின் தரம் குறைந்து விட்டதா? இல்லை மக்களிடம் சினிமா பார்க்கும் ஆர்வம் குறைந்துவிட்டதா? இல்லை சினிமா மீதான ஆர்வமே குறைந்துவிட்டதா? தியேட்டர்களின் விலையேற்றம் ஒரு காரணமா? டிமாண்டை விட சப்ளை அதிகமாகிவிட்டதாலா? என ஆளாளுக்கு மண்டையை ஒடைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஏன் இப்படியான நிலைக்கும் தமிழ் சினிமா தள்ளப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் தள்ளி நின்று பார்த்து பேசுவோம்.