Thottal Thodarum

Mar 31, 2010

Joyfull சிங்கப்பூர்-5

DSC_5692 DSC_5697

ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை. எம்.ஆர்.டியில் போகலாமா அல்லது பஸ்சில் போகலாமா என்று யோசித்தபடியே கடைசியில் டாக்ஸியில் போகலாம் என்று வெயிட் செய்ய ஆரம்பித்து, சுமார் இரண்டு மணி நேரம் நின்றதுதான் மிச்சம். நின்ற நேரத்தில் டயர்ட் ஆகியதால் இரண்டு பாட்டில் ”சாரு” ஒயினை வாங்கிக் கொண்டு ஒரு வழியாய் ரூமுக்கு போய் சேர்ந்தோம். அதற்கு பிறகு தூங்கும் போது மணி 2.
DSC_5700 DSC_5707

அடுத்த நாள் காலையில் ஜோசப் மதியமே லஞ்சுக்கு லிட்டில் இந்தியா வருவதாய் சொல்லிவிட்டார். மாற்று உடைக்காக பிரபாவீட்டிற்கு கிளம்பினேன். சண்டெக்கிலிருந்து 857 என்கிற பஸ்ஸில் ஏறி கடைசி நிறுத்தமான யூஷுனில் இறங்கி, அங்கிருந்து 804 பிடித்து இரண்டாவது ஸ்டாப்பிங்கில் இறஙகுமுன் பிரபா பஸ்ஸ்டாப்பில் நின்றிருந்தார். பக்கத்தில் ரோட்டை தோண்டி ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஏரியாவை சுற்றி ஒரு வலையம் வைத்துவிட்டு மண்ணை தோண்டி எடுத்து முடிந்தவரை கொஞ்சம் கூட சிந்தாமல், அப்படியே அருகிலிருந்த லாரியில் போட்டார்கள். பக்கத்திலேயே இரண்டு பேர் அப்படியும் கீழே சிந்திய ம்ண்ணை பெருக்கி கொண்டிருந்தார்கள். காலை டிபனை அருகிலிருந்த இந்தியன் ரெஸ்டாரண்டில் ஒரு ஆப்பமும், ஹோம் மேட் லெமன் டீயுடன் முடித்துவிட்டு. சிறிது நேரமோவெடுக்கலாம் என்று டிவி பார்த்துக் கொண்டிருந்தேன். வசந்தம் என்றொரு தமிழ் சேனல். படு மொக்கையாய் இருந்தது. வண்ணத்திரை என்றொரு சேனலில் நம்ம கேடிவி போல தொடர்ந்து படங்களை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி நம்மூரில் கிடைக்கும் அத்துனை சேனல்களுடன், நிறைய சைனீஸ், மாண்ட்ரீயன் சேனல்கள் திரை முழுவதும் பூச்சி பூச்சியாய் ஓடியது.
DSC_5711 DSC_5712

மதியம் லிட்டில் இந்தியாவுக்கு கிளம்பினோம். அதே 804 பிடிக்க, காலையில் தெருவில் நோண்டிக் கொண்டிருந்தவர்கள் காணோம். அங்கே வேலை செய்தற்கான அறிகுறி ஏதுமில்லாமல் இருந்தது. சுமார் ஒரு மணி வாக்கில் லிட்டில் இந்தியாவுக்கு வந்தவுடன், எங்கே சாப்பிடலாம் என்று கலந்தாலோசித்து ஒரு வழியாய் அஞ்சப்பரில் தஞ்சம் அடைந்தோம். அருமையான சாப்பாட்டிற்கிடையே என்னுடய “லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகத்தை ஜோசப் அங்கேயே கடை விரிக்க சரியான சேல்ஸ். அப்போது அங்கே வந்த பதிவர்கள் நட்புடன் ஜமால், மற்றும் இன்னொரு பதிவர் நண்பர் பாரதி அவரது மனைவியுடன் வ்ந்திருந்தார். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த போது, சாமி தன் சீடர்களுடன் அங்கே வர, எல்லோரும் சிங்கை பதிவர் சந்திப்புக்கு கிளம்பினோம். எக்ஸ்பிளனேட் மாலின் பின்புறம் உள்ள பிரிட்ஜுக்கு கீழே எல்லோரும் அமர்ந்தோம்.
DSC_5733 DSC_5736
DSC_5795 DSC_5788
DSC_5815 DSC_5849

பதிவர் அறிவிலி சுடான பஜ்ஜி எடுத்து வர, ஜோ, ஜோதிபாரதி, கோவி.கண்ணன், வெற்றிக் கதிரவன், பித்தனின் வாக்கு சுதாகர், அப்பாவி முரு, அவரது நண்பர் சரவணன், புண்ணாக்கு மூட்டை பாலா, ஜோசப் பால்ராஜ், மகேந்திரன், முகவை ராம், ஜெகதீசன், ஆகியோருடன் இனிதே துவங்கி, கடைசியாய் சுவாமி ஓம்காரின் பிரசங்கத்துடன் முடிவடைந்தது. இரவு படம் போகலாம் என்று வெற்றிக்கதிரவன் ப்ளான் செய்தான். ஆனால் சந்தடி சாக்கில் ஸ்டாப்ப்லாக்கில் எஸ்கேப் ஆனான். சாமியும் அங்கிருந்து எஸ் ஸாக, அங்கிருந்து எங்கே போகலாம் என்று கலந்தாலோசித்துவிட்டு ஒரு சின்ன இண்டியன் பாரில் செட்டிலாகி, வழக்கம் போல கோலாகலமாய் சென்றது. நான் அன்று இரவு முகவை ராமுடன் தங்குவதாய் ஏற்பாடானது. காலையில் கோவி. அண்ணன் என்னை பிக்கப் செய்து கொண்டு சண்டோசா போகப் போவதாய் சொல்லிவிட்டு கிளம்பினார். சரி ஆளுக்கு ஒரு டாக்ஸி பிடித்து கிளம்புவோம் என்றபோது நான் தொண்டையை கனைத்து “ அது சரி.. எல்லா இடத்தையும் காட்டுறீங்க. அந்த கேலாங் எப்ப கூட்டிட்டு போவீங்க.? “ என்றதும் ஆளாளுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர். “அலோ.. சும்மா சுத்திப் பாக்கத்தாங்க.” என்றவுடன் தான் நிம்மதியானார்கள்.
DSC_5743 DSC_5744
DSC_5884 DSC_5885
DSC_5886 DSC_5872

டாக்சியை பிடித்து நேரே கேலாங்கில் இறங்கினோம். ஊரே விழாக் கோலம் பூண்டது போல இருந்தது. எல்லா கடைகளிலும் எங்கு பார்த்தாலும் மக்கள், குடித்துக்கொண்டோ, சாப்பிட்டுக் கொண்டோ, நின்றார்கள். எல்லா தெருக்களிலும் ஒரே மாதிரியான செட்டப்பில் வீடுகள். வாசலில் ஏதோ பூச்சி பூச்சியாய் சிகப்பு எழுத்துக்களில் எழுதியிருந்தது. வீட்டின் வாசல் கதவு அகன்று திறந்து கிடக்க, மினியிலும், ஸ்கர்ட்டிலும், அங்கிருந்த கண்ணாடி பார்ட்டிசன்களுக்கு பின் வரிசை கட்டி அழகிகள் நின்றார்கள். அரசாங்கமே அங்கீகரத்திருக்கும் விபசார விடுதிகள் கொண்ட ஏரியா அது. அதே ஏரியாவில் சாதாரண மக்களூம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மெடிக்கல் டெஸ்ட் எல்லாம் செய்து மெயிண்டெயின் செய்கிறார்கள். அங்கே இம்மாதிரி அங்கீகரிக்கப்பட்ட விடுதிகள் இல்லாமல் ஒவ்வொரு தெருவின் சந்து முனைகளிலும், பெண்கள், பெண்கள், பெண்கள். அவர்களை தாண்டி போகும் போது கைபிடித்திழுக்கும், வியட்நாமிய பெண், பாவாடை தாவணி கட்டிய நம் ஊர் பெண், எதையோ யோசித்துக் கொண்டு, புகைத்தபடி நிற்கும் ந்டுவயது சீன பெண்கள், ம்லையாள பெண்கள், இந்தோனேஷிய, வங்காள, பெண்கள். இவர்கள் எல்லாம் கொஞ்சம் சீப். அங்கீகாரம் கிடையாது. திடீர் தீடீர் என்று ரெய்ட் நடத்தி இவர்களை அள்ளி விடுகிறார்கள் போலீசார்கள். எல்லா தெருக்களையும் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, கிளம்பிய போது அங்கு இருக்கும் ஆண், பெண் யாரிடமும் எந்தவிதமான அசூசையோ, ஒரு மாதிரியான பார்வையோ இல்லை. மிக இயல்பாய் எல்லாரும் கடந்து போனார்கள். வெளியே டாக்ஸி பிடித்து கிளம்புகையில் அருகே ஒரு ரஷ்ய பெண் நல்ல ஓங்குதாங்கான உயரத்துடன் நிற்க, அருகே வந்து நின்ற டாக்ஸி காரணை பார்த்து, “250 டாலர்ஸ்” என்றாள். டாக்ஸி கியர் போட்டு கிளம்ப யத்தனிக்க, அவள் “200,, ஒரு அடி முன்னால், 150 இன்னும் ஒரு அடி முன்னால், 100 என்றதும்.. காரின் முன் கதவு திறக்க, அந்தப் பெண் காரின் கதவை திறந்து, ஒரு கணம் நிமிர்ந்து இலக்கில்லாம் ஒரு பார்வையை பார்த்து, பெருமூச்சு விட்டு காரினுள் உட்காரும்போது சிரித்தாள்.
DSC_5853 DSC_5863
DSC_5849 DSC_5842
DSC_5838 DSC_5834
DSC_5828 DSC_5829
DSC_5827 DSC_5823
DSC_5810 DSC_5809

இரவு ராமின் வீட்டில் போய் சேரும் போதே நடு நிசிக்கு மேல் ஆகிவிட்டது வழக்கம் போல். தூக்கம் வரவில்லை. ஜெகன் தனக்கு தூக்கம் வருவதாக சொல்லிவிட்டு கீழே ப்டுக்க போக, நாங்கள் இருவரும் ஆளுக்கொரு டயட் கோக்கை சப்பிக்கொண்டே பேச ஆரம்பித்தோம். பேச்சு பல விஷயஙக்ளை தாண்டிச் சென்றது. சினிமா, வாழ்க்கை, இலக்கியம், என்று பல திசைகளில் ஓடியது. ராம் பழகுவதற்கு மிக இனிமையான நண்பர். மிக இயல்பாக நம்முடன் அளவளாவ ஆரம்பித்துவிடுபவர். இவரிடம் இன்னொரு விசேஷம் . மன்னிக்கவும் சிறப்பு என்னவென்றால், கொஞ்சம் கூட ஆங்கிலம் கலக்காமல், தமிழிலேயே பேசுகிறார். முக்கியமாய் நாம் அதிகம் பயன்படுத்து பல ஆங்கில பெயர்களுக்கு ஈடான தமிழ் வார்த்தையை தேடிப் பிடித்து பேசுகிறார். அவ்வளவு இனிமை. இதன் நடுவில் சீன மொழியை கற்றுக் கொள்வதற்காக வகுப்புக்கு வேறு போகிறார். சுமார் நான்கு மணிக்கு தூங்கப்போனோம். நான் ராமின் வீட்டில் இருப்பது கோவி. அண்ணனுக்கு தெரியாது. அதானால் எதற்கும் ஒரு குறும்செய்தி அனுபிவைப்போம் என்று அனுப்பிய அடுத்த சில நொடிகளில் பதில் மெசேஜ் வந்தது.


கேபிள் சங்கர்

Mar 29, 2010

கொத்து பரோட்டா –29/03/10

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
சனியன்று நடந்த பதிவர் சந்திப்பு கூட்டத்தில், பல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கிடையே ஒரு வழியாய் வந்திருந்த எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், வாசகர்கள் ஒரு மனதாய் இணைய எழுத்தாளர் குழுமம், என்பதை மாற்றி தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று பெயரிட முடிவு தெரிவித்தனர். விரைவில் அதற்கான வேலைகளை நம் எல்லோரும் பகிர்ந்து செய்வோம். விவாதங்களிடையே முக்கியமான கருத்துக்களை அளித்த திரு ஞானி, ராதாகிருஷ்ணன், லக்கி, உண்மை தமிழன், நர்சிம், ஆகியோருக்கும், ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டு, பதிவர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவாதத்தை சுவார்ஸ்யமாக்கி தனக்கும் குழுமம் ஆரம்பிப்பதில் ஆதரவு உண்டு என்று அறிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கும் நன்றி. இக்குழுமத்தில் தமிழில் பதிவுகள் எழுதும், அனைவரும் இணையலாம். இக்குழுமம் மூலமாய் நாம் என்ன என்ன செய்யப் போகிறோம் என்பதை விரைவில் கூடிப் பேசி வரையறுப்போம் என்பதை அறிவித்து கொள்கிறோம். குழுமத்தில் உங்களை இணைத்து கொள்ள, tamilbloggersforum@gmail.com க்கு உங்களது பெயர், உங்களது வலைப்பூவின் பெயர், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் ஆகியவற்றை மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு குழுமத்திலிருந்து அழைப்பு அனுப்பி வைப்போம். அதன் மூலம் உங்களை குழுமத்துடன் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். நமது குழுமத்தின் வலைப்பூ http://www.tamilbloggersforum.blogspot.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவிக்கினிமை
படம் பார்ப்பதற்கு முன்பே மனதினுள் ரீங்காரமிட்ட பாடல் தான். படம் பார்த்தவுடன் இன்னும் அகல மறுக்கிறது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” ஸ்வீட் மெலடி.

அதே போல் நான் முன்பே சொன்னதை போல திரும்பவும் தமன் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று நிருபித்து வருகிறார். அதற்கு சான்று “முன்தினம் பார்த்தேனே” படப் பாடல்கள். முக்கியமாய் முன்தினம் பார்த்தேனே பாடலும், பேசும் பூவே யும் கலக்கலான லாலிபாப் துள்ளல்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார புத்தகம்
Saanthamaniyum Innapira Kaadhal Kathaigalum
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்.. வா.மு.கோமுவின் நாவல். இவ்வளவு இயல்பாய் பாலுணர்வை எழுத முடியுமா ? என்று எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய புத்தகம். பெரு நகரங்களில் நடப்பதை விட சிறு நகரங்களிலும், கிராமங்களில் நடக்கும் மிக இயல்பான அடல்டரியும், காதலும் காமமும் தகித்தெரியும் நிகழ்வுகளை மிக இயல்பாய் சட சடவென ஓடும் நடையில் தந்திருக்கிறார். பழனிச்சாமியும், சாந்தாமணியும், பூங்கொடி, ஜான்சி, சுகந்தி, பத்மப்ரியா, பெல்லா, சுமதி,ஷாலினி, சுகந்தி, மீனா என்று பல விதமான பெண்கள், கேரக்டர்கள். எனக்கு பிடித்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாப்பாட்டுக்கடை
சென்னையில் நார்த் உஸ்மான்ரோடில் ஜீதமிழ் டிவிக்கு எதிரே உள்ள சோமசுந்தரம் பார்க் அருகில் பார்பக்யூ நேஷன் என்ற ஒரு உணவகம் உள்ளது. பெயர் மட்டுமல்ல உள்ளே அவர்களது சர்வீஸும் வித்யாசமாய் இருந்த்து. நமது டேபிளின் நடுவே ஒரு பெரிய ஓட்டை இருக்கும் நீங்கள் உட்கார்ந்தவுடன் அதில் ஒரு கரி அடுப்பு க்ரில்லோடு நமது டேபிளின் நடுவே உட்கார, அதில் இரும்பு கம்பியில் சொருகப்பட்ட, சிக்கன், மட்டன், மற்றும் வெஜ் அயிட்டஙக்ள் எல்லாவற்றையும் , குமுட்டி அடுப்பின் மேல் தனலில் வைக்க, அதன் மேல் ஊற்றுவதற்காகான சாஸேஜுகள் எல்லாம் நாமே அதன் மேல் தடவி மேலும் அதற்கு சுவைகூட்ட, ஒரு பதத்தில் எடுத்து வாயில் வைத்தால், ம் ஹா…. அருமை. இது தவிர புல் பஃபே வேறு. சகல விதமான அயிட்டங்களோடு. இத்துடன் வெல்கம் ட்ரிங்காய் குட்டி பீர் முதல் எல்லாவிதமான் ட்ரிங்களும் தரப்படுகிறது. ஒரு முறை. வார நாட்களில் பகலில் லஞ்சுக்கு இரண்டு பேகேஜுகளில் உணவு கிடைக்கிறது, 300 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும், 450 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும். சார்ஜ் செய்கிறார்கள். ஆனால் இரவு உணவிலும், வார இறுதி நாட்களிலும் எந்த விதமான் பேக்கேஜ்கள் கிடையாது. 575 ஆகும். நிச்சயம் அவர்களின் பர்பக்க்யூ சுவை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார குறும்படம்
பல உணர்வுகளை வெளிப்படுத்தும் குறும்படம். அருமையான பின்ணனி இசையோடு.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார தத்துவம்
நோ அல்லது யெஸ் என்கிற இரண்டு சின்ன சொற்களை பயன்படுத்துவதற்கு மிக நீண்ட யோசனை தேவை. வாழ்க்கையில் பல நேரங்களில் இவ்விரு வார்த்தைகள் தான் நம் தலையெழுத்தை நிர்ணையிப்பதாய் இருக்கிறது. என்ன நான் சொல்றது..?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக்
பிஎம்டபிள்யூ காரில் தன் காதலியுடன் மிக நெருக்கமாய் இருந்த காதலன் காதலியிடம்

காதலன் : உன்னிடம் ஒரு உண்மை சொல்லியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என்றதும்

காதலி : நல்லவேளை எங்கே இந்த கார் உன்னுடயது இல்லை என்று சொல்லிவிடுவாயோ என்று பயந்தேன் என்றாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏஜோக்
வாழைப்பழ கடைக்கு போன 11 பெண்கள் ஆளுக்கொரு வாழைப்பழம் கேட்க, கடைக்காரன் எடுத்தால் ஒரு டஜன் என்று சொல்ல, பெண்களில் ஒருத்தி கடைக்காரை பார்த்து, ”பரவாயில்லை ஒரு பழத்தை மட்டும் நான் சாப்டுக்கிறேன். என்றாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கேபிள் சங்கர்

Mar 27, 2010

அங்காடித் தெரு – திரை விமர்சனம்

கதை கதை என்று தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தெரிவதில்லை, நம் வாழ்க்கையும், நம்மை சுற்றியுள்ளவ்ர்களின் வாழ்க்கையை பார்த்தாலே நிறைய கதைகள் கொட்டி கிடக்கிறது என்று. அப்படி வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட கதை தான் அங்காடித்தெரு.தமிழ் சினிமாவில் இதுவரை எக்ஸ்ப்ளாயிட் செய்யப்படாத ஒரு கதை களன். சென்னை தி.நகரில் வியாபித்தீருக்கும் பல ஸ்டோர்களில் வேலை என்ற பெயரில் தன் குடும்பத்துக்காக, அடிமைப்பட்டு, தன் ஆசா, பாசங்களை துறந்து, கிடைக்கிற பொழுதுகளை களவாடி அதில் கிடைக்கும் சந்தோசஷங்களால் வாழ்ந்து கொண்டிருக்கும் கதை மாந்தர்கள்களை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதே போல் அடி மாட்டுக்கணக்காய் மனிதர்களை நடத்தும் பல அண்ணாச்சிகளின் மறு பக்கத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார்கள். எவ்வளவு கேரக்டர்கள். அண்ணாச்சி, கடை மேனேஜர், நாயகன், நாயகி கனி, அவளின் தோழிகள் ராணி, சோபியா, ராணியை காதலிக்கும் பையன், ரங்கநாதன் தெருவில் பிச்சையெடுக்கும் குள்ளன், அவனின் பிராஸ்டிட்டியூட் மனைவி, பாய், கண் தெரியாத கர்சீப் விற்கும் பாய், நாயகனின் நண்பன் பாண்டி, பொழைக்க வந்து இலவச கக்கூஸை, கட்டண கக்கூஸாக மாற்றி தனக்கென பொழைப்பை தேடும் இளைஞன் என்று வாழ்க்கையை கண் முன்னே விரிக்கும் கேரக்டரக்ள்.

நாயகன் புதுமுகமாம். ஆனால் மிக அருமையான நடிப்பு. படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டே நாயகி அஞ்சலிதான். கனி யாக வாழ்ந்திருக்கிறார். சின்ன சின்ன பாடி லேங்குவேஜில், கலக்குகிறார். முக்கியமாய் நாயகன் போட்டுக் கொடுத்ததினால், மேனேஜர் தனி அறையில் பாலியல் அத்துன் மீறலை பற்றிசொல்லிக் கொண்டே, வாடிக்கையாளர்களை கவனிக்கும் காட்சியும், வீட்டு வேலை செய்யும் தன் தங்கை வயதுக்கு வந்துவிட, அவளை கொண்டு போய் எங்கு வைத்து சடங்கு செய்வது என்று புரியாமல் நடு ரோட்டில் ஆரற்றும் போதும் , கிளைமாக்ஸ் காட்சியில் அவளின் கண் மொழியும் க்ளாஸ்.
படட்த்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு கேரக்டரும், நடிக்கவில்லை கேரக்டராய் வலம் வருகிறார்கள். முக்கியமாய் இயக்குனர் எ.வெங்கடேஷ், அண்ணாச்சி, ராணி அகியோரை குறிப்பிட்டு சொல்லலாம்.

ரிச்சர்ட் நாதனின் ஒளிப்பதிவு அருமை. முக்கியமாய் கடையில் உள்ளே நடக்கும் காட்சிகளில் லைட்டிங் நச். ஜி.வி.ப்ரகாஷ்குமார், விஜய் ஆண்டனியின் இசையில் முன்று பாடல்கள அருமை. பிண்ணனி இசை தான் படு சொதப்பல்.படத்தில் பாராட்ட பட வேண்டிய இன்னொரு முக்கிய நபர் வசனகர்த்தா ஜெயமோகன் . அவ்வள்வு இயல்பான வசனங்கள். தேவையில்லாமல் லைவ்வாக டயலாக் பேசுகிறேன் என்று இம்சை படுத்தும் இந்நாளில் இவரின் வசனங்கள் நச்

இயக்குனர் வசந்த பாலனை பாராட்ட வார்த்தைகளே இல்லை. இப்படம் முழுக்க, முழுக்க இயக்குனரின் படம். ஒவ்வொரு காட்சியிலும் அவரின் உழைப்பு தெரிகிறது. ஓரிரு காட்சிகளில் மட்டும் தெரியும் சற்றே மிகைப்படுத்தப்பட்ட நிகழ்வுகளை தவிர குறையொன்ருமில்லை. பல இடங்களில் இவரின் டிடெயிலிங் மிரட்டலாய் இருக்கிறது. இப்படம் அவருக்கு ம்ட்டுமல்ல, அவரின் தயாரிப்பாளர், உதவி இயக்குனர்கள் கூட பெருமை கொடுக்கும் படம்.

அங்காடித் தெரு - வாழ்வின் பிரதிபலிப்பு

கேபிள் சங்கர்

Mar 26, 2010

Joyfull சிங்கப்பூர் –4

IMGA0258 Image0456

அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.
IMGA0252 IMGA0254

காலையிலேயே வெயில் உறுத்தியது. நம்மூரைவிட அதிகப்படியான ஹூமிடிட்டியினால் வழக்கத்தை விட அதிகமாய் வியர்த்தது. விஷ்..விஷ் என கிஞ்சித்தும் புகையில்லாத, ஹாரன் சத்தமில்லாத ஹைவேக்கள், நெஞ்சை பிடிக்கும் டி.சர்டுகளோடும், சர்வ நிச்சயமாய் ஒரு ஐ போனோ அல்லது ஐ பாடையோ, காதில் சொருக்கிக் கொண்டு போகாத இளைஞிகளோ, இளைஞர்களோ பார்க்க முடியாது. மாற்றி மாற்றி திடீர் திடீர்ரென நடு ரோட்டில் இறுக அணைத்து கொண்டு, காதல் வயப்படுவதும், கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு ஆபீஸுக்கும், காலேஜிக்கும் போகும் அழகு சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள் கொண்ட பெண்கள்.எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லா நடைபாதையின் பளீர் தரைகள், பத்தடிக்கு ஒரு குப்பை தொட்டி, ரோட்டில் நடக்கும் நடையர்களுக்கான முக்கியத்துவம். நீங்கள் எவ்வளவு பிஸியான ரோடானலும் க்ராஸ் செய்ய வேண்டுமென்றால் சிக்னலில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அதற்கேற்ப மற்ற சிக்னல்களை சீரமைத்து, அடுத்த நிமிடங்களில் உங்களுக்கான வழி விடும் தொழில் நுட்பம். எவ்வளவு தான் மழை பெய்தாலும் அடுத்த நிமிடங்களில் பளிச்சாகும் ரோடுகள். சிட்டியில் மட்டுமில்லை, புறநகர்களில் கூட அஃதே. எல்லாவற்றையும் மீறி நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இருந்து கொண்டே இருகிறது.
IMGA0228 IMGA0225
ஊர் சுத்தமாய் இருக்கிறது என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல. அதனால் அதை பற்றி பேசுவதை விட, இந்த ஒழுக்கத்தை இன்றளவில் மாட்டினால் ஃபைந்தான் என்ற ஒரு பயத்தை உள்ளூர விதைத்து, லஞ்சம் கொடுத்தெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில், அந்த பயத்தை கொண்டே ஒழுக்கத்தை வளர்கிறார்கள். அந்த இறுக்கத்தின் வெளிப்பாட்டை நம்மூர்காரர்கள் லிட்டில் இந்தியாவில் வெளிப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் ஆட்டிட்யூடுடன்.
IMGA0219 IMGA0245

எம்.ஆர்.டி எனப்படும் மெட்ரோ ரயில் சர்வீஸின் தரத்தையும், ஒரு ஊரை எல்லாவிதங்களிலும், இண்டெர்கனெக்ட் செய்ய மால்களின் பேஸ்மெண்டிலேயே எல்லா விதமான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தியிருப்பது ஆச்சர்ய படுத்துகிறது. அதே போல் பேருந்து வசதிகள். பேருந்துக்கும், எம்.ஆர்.டிக்கு ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டால் போது அந்த கார்டை உள்ளே நுழையும்போதும், வெளியேறும் போது காட்டினால் ஆட்டோமேட்டிக்காக நம் அக்கவுண்டிலிருந்து பணம் எடுத்துக் கொள்கிறார்கள். டாக்ஸிகள் பக்கத்து ரோடுக்கு கூப்பிட்டாலும் வருகிறார்கள். ஆனால் அவை வார இறுதி நாட்களில் கிடைப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது.
IMGA0242 IMGA0250

எல்லா மால்களிலும் புட்கோர்டுகளால் நிரம்பியிருக்க, எங்கேயும், எப்போதும் எல்லா கோர்டுகளிலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். எதையாவது வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். சண்டெக் சிட்டியில் வார இறுதியில் ஐ.டி ஷோ நடந்து கொண்டிருந்தது. மால் முழுவதும், ஐ.டி ஷோ ஸ்டால்கள்தான். உலகில் உள்ள அத்துனை கம்பெனியும் வந்திருக்குமோ என்ற சந்தேகம். நடக்க முடியாத அளவுக்கு கும்பல் அம்மியது. எதோ மளிகை கடையில் சாமன்களை ட்ராலியில் தள்ளி வருவது போல, பெரிய பெரிய ட்ராலிகளில், கம்புயூட்டரையும், லாப்டாப்பையும், இன்ன பிற எலக்ட்ரானிக் வஸ்துக்களையும், அள்ளி போட்டுக் கொண்டு, எதையாவது தின்று கொண்டும், பீர் சப்பிக் கொண்டும், வாக் வேயில் பின்பக்கத்தை அழுத்தியபடி முத்தமிட்டுக் கொண்டே பிஸியாக இருந்தார்கள்.

நான் எக்ஸ்பிளனேட் மாலுக்குள் நுழைந்தேன். வழக்கமான கூட்டம் நெறியும் மால்லாய் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. இந்த கட்டிடத்தை ஏதாவது டாப் ஆங்கிளிலிருந்து பார்த்தால் சிங்கப்பூரின் பிரபல பழமான தூரியனின் வடிவத்தில் அமைக்கப்பட்ட கட்டிடம். முழுக்க,முழுக்க, இசை, இசை கருவிகள் தியேட்டர் கான்செர்ட் ஹால் தியேட்ட்ர் ஹால், நிச்சயம் பார்க்க வேண்டிய் நூலகம், மற்றும் பல புட்கோர்டுகளுடன் இருந்தது.
IMGA0231 IMGA0235

அங்கிருந்து பின்பக்கம் போனால் க்ளார்க் வாக் வர, அங்கிருந்த டூரிஸம் கூண்டிலிருந்த ஒரு பெண், பதினைந்து டாலருக்கு ஆற்றில் படகின் மூலம் சிங்கப்பூரை சுற்றிக் காட்டும் நிகழ்ச்சிக்கு கேம்பெயின் பண்ண, நான் படகுக்காக காத்திருந்தேன். காத்டிருந்த நேரத்தில் அவளுடன் பேச ஆரம்பித்தேன். எல்லா விஷயத்திற்கும் மிக அதிகமான எக்ஸ்பிரஷனுடன், அவளின் சின்ன கண்களை விரித்து பேசியது இண்ட்ரஸ்டிங். நான் தமிழ் சினிமாவில் வேலை செய்கிறேன் என்றவுடன், தனக்கும் தமிழ் பாடல்கள் பிடிக்கும் அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் என்றாள். தன் ஐ போனை விரலால் நிரடி, ஒரு பாட்டை போட்டு ஒரு பக்க இயர் போனை என் காதிலும், மற்றதை அவளுடய காதிலும் பொருத்தி, ப்ளே செய்தால்.. “ஆரோமலே” பாட்டு முழுவதும் முடியும் வரை, கண் திறக்கவேயில்லை, அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல்.
IMGA0249 IMGA0253

அதற்குள் ஒரு போட் வர, டூருக்கு கிளப்பினேன். அருமையான ஒரு குட்டி டூர் ஆற்றின் பேக்ரவுண்டில். பல நாட்டுகாரர்களுடன். அதில் உடன் வந்த ஒரு பிரஞ்சு பெண் க்யூட். முடிந்து வந்து மெல்ல மீக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு கால் போன போக்கில நடக்க ஆரம்பிக்க, திடீரென பெருமழை பிடித்துக் கொண்டது. அருகே இருந்த் ஒரு ஸ்டேடியத்தில் மொஸாயிக் என்று இசை திருவிழாவுக்கான ஆயுத்தஙக்ள் நடைபெற்று கொண்டிருக்க, நிறைய சைன பெண்கள் போவதை பார்த்து நானும் உள்ளே போக எத்தனித்தேன். அங்கே இருந்த ஒரு செக்யூரிட்டி கார்டு என்னை தடுத்தார்.” சார் இவர்கள் எல்லாம் குழுவின் ஆட்கள். இப்போது யாரையும் அனுமதிக்க முடியாது” என்றார். வேறு வழியில்லாமல் மழைக்கு ஒதுங்கி கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் பெயர் ரத்னம். தஞ்சாவூர்காரர். ஆனால் தஞ்சாவூருக்கே போகாதவர். சிங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்னை எங்கேயோ பார்திருப்பதாய் சொன்னது ஆச்சர்ய படுத்தியது. கடைசியில் தான் தெரிந்தது அவர் என் பதிவுகளின் வாசகராம். கடல் கடந்து ஒரு புதிய வாசகரை ச்ந்தித்தது உற்சாகமாய் இருந்தது.
IMGA0255 IMGA0288

மழை நின்றவுடன், மீண்டும் நடக்க ஆரம்பித்து, மெல்ல, மெல்ல ஒவ்வொரு மாலுக்குள்ளூம் சென்று, மேலிருந்து, கீழே, கீழே என்று அலைந்து, நடு நடுவே புட்கோர்டுகளில் ஜுஸும், காப்பியுமாய் குடித்தலைந்து, மீண்டும் சண்டெக் சிட்டி வந்து அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, அந்த மாலில் உள்ள மல்ட்டிப்ளெக்சை பார்க்க நடக்க ஆரம்பித்தேன். மேலே இருந்த வழிகாட்டிகளை படித்தபடி சுமார் அரை மணி நேரம் நடந்து அந்த மல்ட்டிப்ளெக்ஸை அடைந்தேன். ஏதாவது ஒரு படத்தை பார்கக்லாம் என்றால் எல்லா படங்களும் ஆரம்பித்து கவுண்டர் க்ளோஸ். இரண்டு 3டி படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில் இருந்தாள். மால்களை சுற்றிச் சுற்றி கால்கள் களைப்படைந்ததனால். மீண்டும் பாலாவின் ஹோட்டல் ரூமுக்கு சென்றடைந்தேன் நடந்தே. பாலா போன் செய்தார் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும். “என்ன ப்ரோக்ராம் என்றார். சாமியின் திருமந்திர சொற்பொழிவு என்றேன்.
Image0452 IMGA0290

லிட்டில் இந்தியாவில் செராங்கூன் ரோடிலிருக்கும் காளியம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. முற்றிலும் வேறான ஒரு இடத்தில் அவரின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருந்தது. சொற்பொழிவு முடிந்ததும், கேள்விநேரம் ஆர்ம்பிக்க, வந்திருந்த பக்தர்களில் ஒருவர், ஒரே நாளில் ஆன்மீகட்தை கரைத்து குடிக்கும் முடிவுடன் கேள்விகளால் துளைத்தெடுக, சக்கரை பொங்கல், புளியோதரையுடன் அந்நாள் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் மீண்டும் ஜோசப், கோவி, கிரி, அறிவிலி, பித்தனின் வாக்கு சுதாகர், மற்றும் பல நண்பர்களை சந்தித்துவிட்டு அளவளாவி கிளம்பினோம். ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை.


கேபிள் சங்கர்