Thottal Thodarum

Nov 13, 2012

துப்பாக்கி


முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது  உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது. 


மிலிட்டரியில் வேலை பார்க்கும் விஜய் மும்பையில் வசிக்கும் தன் குடும்பத்தினருடன் லீவைக் கழிக்க வருகிறார். வந்த இடத்தில் தீவிரவாதிகள் பாம் வைத்துவிட, அதை வைத்தவனை பிடித்து விசாரிக்கும் போது மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்கு ப்ளான் செய்யப்பட்டிருப்பது தெரிந்து அதை விஜய் முறியடிக்கிறார். யார் தன் மிஷனை இப்படி முறியடித்தான் என்று கண்டுபிடிக்க, வில்லன் விஜய்யை தேட, விஜய் வில்லனைத் தேட, முடிவு என்ன ஆனது என்ற சின்ன லைன் தான். அதை பரபர ஆக்‌ஷனில் பொறி பறக்க விட்டிருக்கிறார்கள்.

விஜய் படம் முழுக்க அண்டர்ப்ளே செய்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். அநாவசிய பஞ்ச் டயலாக் கிடையாது. குத்துப் பாட்டு கிடையாது. ஆனால் படம் முழுவதும் பார்க்க அழகாகவும், ஒரு விதமான குதூகலத்தோடும் இருக்கிறார். தீவிரவாதிகளுடன் மோதும் இடங்களில் ஆக்‌ஷன் பொறி பறக்கிறது. காஜலுடன் காதல் செய்யும் போது கண்களில் குறும்பு கொப்பளிக்கிறது. ரொம்ப நாள் கழித்து விஜய்யின் நடிப்பை என்ஜாய் செய்து பார்க்க முடிந்தது. ஆனால் ஏனோ தெரியவில்லை கூகுள் பாடல் உட்பட நடனத்தில் பெரிய அளவில் விஜய் ஸ்கோர் செய்யவில்லை என்றே தோன்றுகிறது.
காஜல் அகர்வாலுக்கு தமிழ் சினிமாவின் வழக்கப்படி லூசுப் பெண் கேரக்டர். விஜய்யிடம் முத்தம் கேட்கும் போது லேசாய் கிரங்க வைக்கிறார். மற்றபடி வெறும் டான்ஸிங் டாலாய்த்தான் வருகிறார். சத்யன் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுகிறார். வில்லனின் நடிப்பு பெரிதாய் இல்லாவிட்டாலும் திரைக்கதையில் அவருடய கேரக்டருக்கான முக்யத்துவத்தால் பெரிய இம்பாக்ட் கிடைத்துவிடுகிறது.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் புதிதாய் ஏதுமில்லாவிட்டாலும் படத்துக்கு தேவையான அளவிற்கு சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் நல்ல வேகம். இசை ஹாரிஸ் ஜெயராஜ். இவரிடம் உள்ள இருபது பாடல்களின் டுயூன்களையே இன்னும் எத்தனை படத்திற்குத்தான் போடுவார் என்றே தெரியவில்லை. கூகுள்.. கூகுள் பாடலைத் தவிர சொல்லிக் கொள்கிறார் போல ஏதுமில்லை. குறிப்பாய் பின்னணியிசை  வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.
படத்தின் பலமே ஏ.ஆர்.முருகதாஸின் திரைக்கதைதான். ஒரு சின்ன லைனை படு சுவாரஸ்யமாய் சொன்னதுமில்லாமல் வழக்கமான விஜய்யை காட்டாமல் கொஞ்சம் அடக்கி வாசித்துள்ள விஜய்யை காட்டியிருப்பதில் ஜெயித்தும் இருக்கிறார். இடைவேளையில் பன்னிரெண்டு தீவிரவாதிகளை பிடித்துக் கொல்வதிலிருந்து படம் முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல், மேக்கிங்கிலாகட்டும், திரைக்கதையிலாகட்டும் சுறு சுறு விறுவிறு பட்டாசாய் பறக்கிறது. தீவிரவாதிகளை பிடிக்கும் ஐடியா சுவாரஸ்யம். “உயிரை எடுக்கிற அவனுக்கே அவன் உயிரைப் பத்தி கவலப் படாதப்போ.. காப்பாத்துற நான் எதுக்கு ப்யப்படணும்” என்கிற வசனம்  ஜிவ்வென இருக்கிறது.

படத்தின் மைனஸ் என்று பார்த்தால் ஆங்காங்கே ஸ்பீட்ப்ரேக்கராய் வரும் பாடல்களும், படத்தின் நீளமும்தான். நீளத்திற்கு காரணம் முதல் பாதியில் வரும் காதல் காட்சியும், ஜெயராமை வைத்து காமெடி என்று நினைத்து வைத்த காட்சிகளும் தான். கிட்டத்தட்ட அந்த காட்சிகளில் தூக்கமே வர ஆரம்பித்துவிட்டது. குறிப்பாய் க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் ஹைஃஸ்பீடில் ஒரு மெலடி தேவையா? அதுவும் ஏற்கனவே கோவில் கேட்ட வெண்பனியே பாடல் ட்யூனில். லாஜிக்கலாய் நிறைய லூப் ஹோல்கள், க்ளைமாக்ஸ் டெம்ப்ளேட் சண்டைக்காட்சி, மோசமான EFX, ஆகியவை இருந்தாலும்,  வெறும் மசாலாவாய் ஒரு மாஸ் படத்தைக் கொடுக்காமல் வித்யாசமான விஜய்யையும், ஒரு சுவாரஸ்ய ஆக்‌ஷனையும் தந்திருக்கிற முருகதாஸுக்கு வாழ்த்துகள்.
வாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர்

Post a Comment

35 comments:

Shajan said...

துப்பாக்கி- விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லை எல்லா ரசிகர்களுக்கும் தான்

vijay.s said...

Happy deepavali to you and your family. Wish next deepavali your movie releases and god bless

Thangavel Manickam said...

//முதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா? என்ற கேள்விக்கு இந்த துப்பாக்கி பதில் சொல்லியிருக்கிறது//

கேபிள் சங்கர் - உங்களின் அனுமானம் புல்லரிக்க வைக்கிறது.

Harish Kumar said...

Vijay madhiriyae neengalum vimarsanthai konjam adakki vasacha mathiri irukkae cable ji :) .... Happy Diwali

”தளிர் சுரேஷ்” said...

அப்பாடா! விஜய் தப்பிச்சிட்டாரு! ஓக்கே பார்த்துடுவோம்!

ம.ஞானகுரு said...

Vijay mass

Kalai Amuthan said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு உருப்படியான படம்னு சொல்லுங்க. நன்றி தல. உங்க விமர்சனம் படிச்சுட்டு தான் நான் படம் பார்க்கவே போவேன்.

Krishna said...

Google Google song is similar to Gangnam style pop album

Shajahan.S. said...

டத்துல கர்கரேய பற்றி சொல்ல முருகதாஸ் மறந்துட்டாருங்களா.. இல்ல மறக்கவைக்கப்பட்டாரா..

unmaiyanavan said...

அப்ப, இந்த துப்பாக்கி நிஜத் துப்பாக்கின்னு சொல்லுங்க.

Unknown said...

Worth watching ....... I would say Harris not that bad in BGM..... His BGM matchin atlest 60%...

r.v.saravanan said...

துப்பாக்கி பார்த்துர வேண்டியது தான்

ஓஜஸ் said...

(1) விஜய் அழகா இருக்குற எந்த படமும் ஓடாதுனு நீங்க தான சொன்னிங்க ( ஆசைபட்டிங்க! ) ஜி
(2) இந்த வருஷம் எந்த பெரிய பட்ஜெட் படமும் ஓடாதுனு சொன்னிங்க
ரெண்டுமே நடக்கல போல :)

கிராமத்து காக்கை said...

அப்ப தீபாவளிக்கு வெடித்த மிகப் பெரிய வெடி ஒரு மாதத்திற்கு சத்தம் கேட்கும் சொல்லீறிங்க

Jey said...

கேபிள்ஜி விமர்சனம் அவ்ளோ தானா?

எனக்கென்னமோ வட போச்சேங்கற கடுப்பு இந்த விமர்சனத்துல லேசா தெரியுது :-)

Happy Diwali to you and your family

பி.கு 2-3 வாரம் முன்னாடி உங்க மங்காத்தா விமர்சனம் தேடிட்டு இருந்தேன்.காணோம் டெலிட்டிட்டீங்களா ?

'பரிவை' சே.குமார் said...

துப்பாக்கி நல்லாவே வெடிச்சிருச்சா?

தாஸ். காங்கேயம் said...

9 மணி வரை காத்திருந்தேன், உங்கள் விமர்சனத்தை பார்த்து விட்டு செல்லலாம் என்று.
வராததால் தொலைக்காட்சியிலே ஐக்கியம். நன்றி.

Anbazhagan Ramalingam said...

அப்டினா பாக்கலாமா ஜி?

MANO நாஞ்சில் மனோ said...

அடடடடா துப்பாக்கி வெடிச்சுருச்சா...!

இளங்கோ@ இளமகேஷ் said...

தலைவரே,இனிமே படவிமர்சனத்தோட விகடன் போல மார்க்கும் போட்டா நல்லா இருக்கும்.

Gopi said...

// குறிப்பாய் பின்னணியிசை வேறு யாரையாவது போட்டு பின்னணியிசை அமைத்திருக்கலாம் முடியலை.//

நம்ம ஊருல தான் பாடல்களுக்கு முக்கியத்துவமும், பின்னணி இசையை இரண்டாம் பட்சமாகவும் கருதுகிறார்கள். உண்மையில் பின்னணி இசை தான் சவால். மேற்கத்திய படங்களை போல நம்ம ஊரிலும் வெறும் பின்னணி இசையோடு மட்டும் படங்கள் வர ஆரம்பித்தால், இங்கு பலருடைய டவுசர் கிழிந்துவிடும். நம்ம ஊரில் பின்னணி இசையில் இளையராஜா தான் கில்லி.

arul said...

thanks for the review

Yaseen said...

இந்து தீவிரவாதிகளைவிடவும், இஸ்லாமிய தீவிரவாதிகளை பற்றி
படமெடுப்பது இந்தியாவில் சுலபம் என்பது சினிமா இயக்குநர்களுக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் தைரியமாக எடுக்கிறார்கள்..!
இதற்கு இயக்குநரின் பதில், “தொடர் குண்டு வெடிப்புகளில் இஸ்லாமிய தீவிரவாதம்தானே
முன்னிலை வகிக்கிறது..” என்பதாகவே இருக்கும் என்பது உறுதி..!

ஆனால், இந்து தீவிரவாதம் பற்றி படமெடுத்து தான் கஷ்டப்பட விரும்பவில்லை
என்பதை மறைமுகமாக இயக்குநர் இப்படி ஒத்துக் கொண்டு போவதை
நாமும் கனத்த மனதோடு பார்த்துக் கொண்டிருப்போம்..! வேறு வழியில்லை..!

அருள் said...

நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா? இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்?

"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!"

http://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html

மாதேவி said...

நன்றி.

படம் பார்க்கின்றேன்.

Hari said...

கேபிள் சங்கர். நீங்க விஜய் படம்னாலே ஆஹா வோஹோன்னு புகழ்ந்து எழுதறிங்க. உங்களுக்கு விஜய்யை பிடிக்கும்கரதுக்காக மொக்க படத்தை சுமாரான படத்தை நல்ல படம் என்று சொல்லலாமா? இதே படத்தில் விக்ரம் அல்லது அஜித் நடித்து இருந்தால் ஏற்கனவே பார்த்து புழித்து போன படு மொக்கையான படம் என்று விமர்சனம் செய்து இருப்பீர்கள். ஏன் இந்த பாரபக்ஷம்?

vinthaimanithan said...

//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா? இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்?

"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!"

http://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html//

அருள் அவர்களே! இந்த ஈரவெங்காயமெல்லாம் கெடக்கட்டும்...

1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ?

2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்?

vinthaimanithan said...

//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா? இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்?

"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!"

http://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html//

அருள் அவர்களே! இந்த ஈரவெங்காயமெல்லாம் கெடக்கட்டும்...

1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ?

2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்?

vinthaimanithan said...

//நீங்கள் மேலே அளித்திருக்கும் விஜய் புகைபிடிக்கும் காட்சி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளதா? இடம்பெற்றிருக்கவில்லை என்றால் அதனை எதற்காக இங்கே அளித்துள்ளீர்கள்?

"நடிகர் விஜய் வாக்குறுதியை மீறுகிறார்:இதோ ஆதாரம்!"

http://arulgreen.blogspot.com/2012/05/blog-post.html//

அருள் அவர்களே! இந்த ஈரவெங்காயமெல்லாம் கெடக்கட்டும்...

1)“வன்னிய சாதிப் பெண்ணை வேற எந்த சாதிக்காரன் கட்டுனாலும் வெட்டு” என்று உங்கள் காடுவெட்டியார் கொக்கரித்ததும், பின்விளைவாக இன்று தர்மபுரி எரிந்ததும் பற்றிய உங்கள் மேலான கருத்தென்னவோ?

2) இன்னும் எத்தனை காலம்தான் தமிழ், தமிழன், புடலங்காய் என்று கூவி அப்பாவி மக்களின் தலையில் மொளகா அரைப்பதாய் உத்தேசம்?

வருண் said...

திரு அருள்: நீங்க என்னங்க, அப்பாவி தலித்களை, உங்க இனம் சூறையாடி, வீட்டைக் கொளுத்தி அநியாயம் செய்து இருக்காங்க. அதற்கு ஒரு கண்டனமோ, வருத்தமோ தெரிவிக்காமல் சிகரெட் மண்ணாங்கட்டின்னு எதையோ சொல்லிக்கிட்டு. மொதல்ல மனிதாபிமானம் உள்ல மனுஷனாக ஆகுங்கள்! அப்புரம் சுருட்டு சிகரட்டை எல்லாம் பார்க்கலாம்!

ARASU said...

movie is good ,AR.MURUGADOSS ean harrissai pidithu thongi kondu irukkaro very worst BGM,,,

Sivakumar said...

ஓய் விந்தைமனிதா..அது என்ன கோர்ட் டவாலி கணக்கா மூணு தபா கமன்ட்???

perumal shivan said...

HELLO VARUN ATHU ENNA APPAAVI THALITH AVANAVANUKKU VANTHAATHAAN VALI ENNAANU THERIYUM
HELLO VINTHAIMANITHAN UNGALUKKUMTHAAN
NERUPPULA KAIYAVACHITU SUDUTHE SUDUTHENNA ENNAPPA ARTHTHAM MOODIKITTU AVANAVAN AVAN JAATHIYILA KALYANAM PANNUNGADA EVAN KHETTAAN .

sam said...

Mokkai padam... Boss...Ungala nambi pona 500rs out..... exaggerated review...

keyven said...

Google Google song is copied from "Gangnam Style" by Cablesankar's favorite MD Harris Jeyaraj.. ;)