Thottal Thodarum

Nov 24, 2012

Life Of Pi

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்
Ang Lee. இவரைப் பற்றி தெரியாதவர்கள கூட இவரது படங்களைப் பற்றித் தெரியும். Sense And Sensibility, The Crouching tiger Hidden dragon, Brokeback Mountain, The Hulk, Lust Caution என்று வரிசையாய் விமர்சகர்களின் பாராட்டும், கமர்ஷியல் வெற்றியும் கலந்த பல படங்களின் சொந்தக்காரர். இந்த படத்தின் ட்ரைலைரைப் பார்த்ததுமே படம் பார்த்தாக வேண்டும் என்று சங்கல்பமே எடுக்கும் அளவிற்கு இம்ப்ரசிவ். இதே தலைப்பில் Yann Martel எழுதிய  நாவலை அடிப்படையாய் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த நாவலுக்காக 2002ல் மேன் ஆப் புக்கர் பரிசு பெற்றார்.


மிருககாட்சி சாலையை காலி செய்துவிட்டு, மிருகங்களை மட்டும் கனடாவில் விற்றுவிட்டு செட்டிலாகும் எண்ணத்தோடு, பையின் குடும்பம் ஒரு ஜப்பானிய சரக்கு கப்பலில் பயணிக்கிறது. அப்பயணத்தின் போது புயலால் அக்கப்பல் முழ்கிவிட, அவ்விபத்தில் பிழைத்த ஒரே ஒருவனான பையுடன் லைப் போட்டில் அடைக்கலமாகும், அடிபட்ட வரிக்குதிரை,  ஓநாய், மனிதகுரங்குடன் ஒரு பெங்கால் புலியுடனும் பயணிக்க வேண்டிய கட்டாயம் பைக்கு. பின்பு என்ன ஆனது என்பதுதான் படம்.
 கதை கேட்க சிம்பிளாக இருந்தாலும்,  அதை சொன்ன விதத்தில் தான் நம்மை கட்டிப் போட்டு விடுகிறார்கள். அருமையான காஸ்டிங். அற்புதமான விஷுவல்கள். நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகள் என்று அதகளப் படுத்துகிறார்கள். இக்கதையை கேட்ட மாத்திரத்தில் இது போல ஏற்கனவே படம் பார்த்திருக்கிறோமே என்று ஒரு யோசனை வரும். Cast Away என்ற டாம் ஹாங்க்ஸ்  நடித்த படம். Fedex பார்சல் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் தப்பித்த ஒரே ஒருவனான டாம் ஹாங்ஸ் ஒரு தீவில் மாட்டிக் கொண்டு பதினான்கு ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து தப்பி வந்த கதை பார்த்தவர்களுக்கு இப்படத்தோடு சிங்க் ஆக வாய்பிருக்கிறது. இருந்தாலும் இப்படம் ஒரு விஷுவல் ப்யூட்டி என்றே சொல்ல வேண்டும். ஸ்பெஷல் எபக்டிலாகட்டும், 3டியிலாகட்டும் அசத்தியிருக்கிறார்கள். திமிங்கிலமொன்று  திரையில் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு தாவும் பாருங்கள் ஆல்மோஸ்ட் கடலின் நடுவே இருப்பது போன்ற உணர்வை நமக்கு கொடுத்திருக்கிறார்கள்.
தப்பி வந்த ஓநாய் அடிப்பட்ட வரிக்குதிரையையும், மனிதகுரங்கையும் கொல்ல, வெறி கொண்டு வந்த புலி அதனை கொன்று விட, தனியாய் விடப்பட்ட பையும், புலியும் மட்டுமே படகில் இருக்க, புலியிடம் பலியாக தயாராக இல்லாமல் பை ஒர்  முனையிலும், புலி ஒரு முனையிலும் இருக்க, சர்வைவலுக்காக வேறு வழியில்லாமல் இருவரும் சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தினால் ஒருவர் வழிக்கு ஒருவர் வரும் காட்சிகள் அருமை. அதே போல வெஜிட்டேரியனான குடும்பத்திலிருந்து வந்த பையின் தாய் கப்பலில் வெஜிட்டேரியனுக்கு பதில் நான் வெஜ் கொடுத்துவிட்டு எகத்தாளமாய் பேசும் சர்வரிடம் சண்டைக்கு போகும் அளவிற்கு இருப்பவர். வேறு வழியேயில்லாமல் பச்சை மீனை சாப்பிடும் அளவிற்கு போவது. கார்னிவரஸ் தீவை பார்பதும். அதற்கான விஷுவல்கள் அனைத்தும் அருமையிலும் அருமை. 
பையின் அப்பாவாக அதுல் ஹசன். அம்மா தபு. இருவரின் நடிப்பும் ஓகே தான். பாண்டிச்சேரியில் வளர்ந்த தமிழர் குடும்பமாய் காட்டப்பட்ட இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி தமிழாய் இருப்பது இடிக்கிறது. மூன்றே மூன்று காட்சிகளில் வரும்  சென்னை பெண்ணான ஷரவந்தி சாய்நாத் க்யூட்டான தென்னிந்திய அழகி. வியர்வை வழியும் முகத்தோடு நடனம் ஆடிக் கொண்டு வெட்கப்பார்வை பார்க்குமிடத்தில் கவர்கிறார். இள வயது பையாக வரும் சூரஜ் சர்மாவின் நடிப்பு கச்சிதம். ஆனால் பெரிய வயது பையாக வரும் இர்பான் கான் நிறைவாக இருக்கிறார். கதை சொல்லும் போதாகட்டும்,  மாடுலேஷனாகட்டும், க்ளைமாக்சில் கண்களின் ஓரத்தில் லேசாய் துளிர்க்கும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கலங்கியபடி பேசும் போதாகட்டும் க்ளாஸ். பை என்கிற பெயருக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதை இங்கே சொன்னால் படம் பார்க்கும் போது சுவாரஸ்யம் கெடும். புலிக்கும் பைக்குமான ரிலேஷன்ஷிப்புக்கான காட்சிகள் க்யூட். புலியின் பெயர் ரிச்சர்ட் பார்க்கர். அதற்கு அப்பேர் வந்த காரணமும் இண்ட்ரஸ்டிங்கான விஷயம்.
நிறைய இண்டர்கட் டாப் ஆங்கிள் ஷாட்களில் மிருகங்கள் படகில் இருக்கும் போது வெற்றாகக் காட்டப்படுவதும்.திடீரென திக்குத்தெரியாத கடலில் மாட்டிக் கொண்ட வகையில் ஹீரோ திரிவது போல படமும் திரிவதும், படத்தின் க்ளைமாக்ஸில் ஜப்பானியர்கள் கேட்பது போலவே சில நம்ப முடியாத விஷயங்களைப் காட்சிகள் வருவது போன்ற சிற்சில மைனஸுகள் இருந்தாலும் வாழ்வை, நம்பிக்கையைத் தேடி அலையும் ஒர் இளைஞனின் வாழ்க்கையை மிகத் தெளிவான கதை சொன்ன  முறையும், விஷுவலும், நுணுக்கமான ஆங் லீயின் இயக்கமும் நம்மை கட்டிப் போடத்தான் செய்கிறது. டோண்ட் மிஸ் திஸ் பை.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

arul said...

nice review

ajaysampath2012 said...

truly a amazing movie ... i watch it in 3d ... its amazing

ajaysampath2012 said...

truly a amazing movie i watch it in 3d .. its fabulous

கொங்கு நாடோடி said...

"Cast Away என்ற டாம் ஹாங்க்ஸ் நடித்த படம். Fedex பார்சல் விமானம் விபத்துக்குள்ளாகி அதில் தப்பித்த ஒரே ஒருவனான டாம் ஹாங்ஸ் ஒரு தீவில் மாட்டிக் கொண்டு பதினான்கு ஆண்டுகளுக்கு பின் அங்கிருந்து தப்பி வந்த கதை"
கேபிள் ஜி பரவாயில்லை , யானைக்கும் அடிசறுக்கும், பதினான்கு இல்லை நான்கு ஆண்டுகள்

Unknown said...

பதிவர் பிச்சைகாரனிடம் கேட்க வேண்டும் "லைப் ஒப் பை படத்தில் வருவது ஒட்டக சிவிங்கியா, வரி குதிரையா? என்று.