Thottal Thodarum

Nov 28, 2012

தமிழ் சினிமா இந்த மாதம் - செப்டம்பர் 2012

சென்ற மாதம் வரை இந்த வருடம் ரிலீஸான பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் ஊத்தி மூடிக் கொள்ள, அட்லீஸ்ட் இந்த மாதம் வரும் பெரிய பட்ஜெட் படமான தாண்டவமாவது முறியடிக்குமா? என்ற கேள்வியோடு ஆரம்பித்தது செப்டம்பர் மாதம்.


பாகன்
நண்பனுக்கு பிறகு ஸ்ரீகாந்த நடித்து வெளிவந்த படம். இம்முறை காமெடியை முயற்சி செய்திருந்தார். காமெடி படம் என்றால் சூரி மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் போதும் என்று நினைப்பது எவ்வளவு ப்ரச்சனையை உண்டாக்கும் என்பதை இப்படம் பார்க்கும் போது நமக்கு புரிந்துவிடும். கொஞ்சம் கூட காமெடி இல்லாத ஒரு படமாய் அமைந்தது. சுமார் நான்கு கோடிகளில் தயாரிக்கப்பட்ட இந்த படத்தை வேந்தர் மூவிஸ் டிஸ்ட்ரிப்யூஷனின் வெளியிட்டதாக தகவல். வசூல் ஏதும் சொல்லிக் கொள்ளூம்படியாய் இல்லை என்பது உ.கை.நெ.கனி.

மன்னாரு
பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பல பத்திரிக்கையாளர்களால் பேசப்பட்ட படம். எனக்கு அப்போதே சந்தேகமாய் இருந்தது. அது படம் வெளியானவுடன் நிச்சயமாகிவிட்டது. நல்ல முடிச்சுள்ள கதைதான் ஆனால் அரத பழசான மேக்கிங், திரைக்கதையால் சொதப்பிவிட்ட படம். இதுவும் டிஸ்ட்ரிப்யூஷனில் வெளீயான படம். யாருக்கும் லாபமில்லாமல் போன படம்

சுந்தர பாண்டியன்
இயக்குனர் சசிகுமாரின் தயாரிப்பில், நடிப்பில் வெளியான படம். இதற்கு முந்தைய படமான ஈசன், போராளியின் தோல்வியின் காரணமாய் கொஞ்சம் அமுக்கி வாசிக்கப்பட்டு ஆர்பாட்டமில்லாமல் வெளிவந்த படம். டிபிக்கல் பி அண்ட் சி படமாய் அமைந்துவிட்டது. வழக்கமான கிராமம், காதல், ஜாதி, நல்ல நகைச்சுவை, பழி வாங்கல், துரோகம் என்று கலந்து கட்டி அமைக்கப்பட்ட திரைக்கதையும், எல்லாவற்றிக்கும் மேலாக சசிகுமாரின் ப்ரெசென்ஸும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தது என்றே சொல்ல வேண்டும். வசூல் ரீதியாய் சுமார் பதினைந்து கோடிகளுக்கு வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில். சுமார் மூன்று வாரங்களுக்கு எல்லா ஊர்களிலும் தொடர்ந்து ஓடிய திரைப்படம் என்று பார்த்தால் இந்த வருடத்தில் இது தான் என்று சொல்ல வேண்டும்.

சாட்டை
சமுத்திரகனியின் நடிப்பில் ஒரு அரசு பள்ளியின் பின்புலத்தில் சொல்லப்பட்ட கதை. ஆரம்பம் நன்றாக இருந்தாலும், போகப் போக மிகைப் படுத்தப்பட்ட நாடகத்தனமான தம்பி ராமையாவின் நடிப்பும், பழைய நாடக பாணியான திரைக்கதையும் படத்தின் சுவாரஸ்யத்தை கெடுத்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். மிகக் குறுகிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம் விமர்சகர்கர்கள் மத்தியில் இதில் சொல்லப்பட்ட கருத்துக்காக பாராட்டப்பட்டாலும், வசூல் ரீதியில் வெற்றியடையாத படமாகவே அமைந்தது வருத்தத்திற்கு உரியது.

சாருலதா
சன் பிக்ஸர்ஸின் சக்சேனாவின் முதல் அஃபீஷியல் தயாரிப்பில் வெளியான படம். தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று மூன்று மொழிகளில் வெளியான படம். கன்னடத்தில் துவாரகீஷ் தயாரிப்பில் வந்ததாய் சொன்னார்கள். அலோன் என்கிற தாய்லாந்து படத்தின் கதை உரிமை வாங்கி செய்ததாய் சொன்னார்கள். ஒரு பேய் படமாய் கொடுக்க வேண்டிய த்ரில்லையும் கொடுக்கவில்லை. ஒரு வித்யாசமான கதையம்சம் உள்ள படம் கொடுக்க வேண்டிய திருப்தியையும் கொடுக்கவில்லை அதனால் இப்படமும் தோல்விப் படமாகவே அமைந்தது.

தாண்டவம்
சென்ற மாத யூடிவி அவுட்டிங்கான முகமூடிக்கு பிறகு இந்த ஆட்டமாவது காப்ப்பாற்றுமா? என்ற கேள்வியோடு வெளிவந்த ப்டம். ஏற்கனவே வெற்றிப்  பெற்ற தெய்வதிருமகள் யூனிட் என்பதால் மக்களிடம் எதிர்பார்ப்பு இருக்க, இந்த கதைக்கு சொந்தம் கொண்டாடி ஒர் உதவி இயக்குனர் வேறு கோர்ட்டுக்கு போக, இப்படி பல பரபரப்புகளை படம் வெளிவரும் முன்பே ஏற்படுத்திய தாண்டவம் வெளிவந்த பிறகு வசூல் ரீதியாய் ததிங்கினத்தோம் போட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

நெல்லை சந்திப்பு, மற்றும் பல வழக்கமான சின்னப்படங்களும்  வெளிவந்து சரியான விளம்பரம் ஏதுமில்லாமல் கவனிப்பாரின்றி போனது.
செப்டம்பர் மாத ஹிட் : சுந்தர பாண்டியன்
Post a Comment

10 comments:

Unknown said...

Enna? Indra Gandi Sethu poitaangala?

தமிழ் பையன் said...

தமிழ் பையன் said...

இப்படி ஐந்துக்கு நாலு படங்கள் ஊத்திக்கும்போதும் எப்படித்தான் படம் எடுக்க ஆளுங்க வர்றாங்க தெரியல?

Thava said...

குட்டி குட்டி திரைப்பட அலசல்கள் ரொம்ப நல்லாருக்கு..நன்றி.

CS. Mohan Kumar said...

பாகன் படத்துக்கு பத்து நாளு எல்லா விஜய் டிவி நிகழ்ச்சியிலும் வந்து ஹீரோ - ஹீரோயின் பேசிட்டு இருந்தாங்க. படமே பத்து நாள் ஓடுன மாதிரி தெரியலை

மன்னாரு பாத்துட்டு நொந்து நூடுல்ஸ் ஆகிட்டேன். கொடுமை !

Unknown said...

Sundarapandian ok

Unknown said...

ெசடபமாத: தரபாய ok

Hari said...

Enna sir. Tamil cinema indha madham nu pottu September month oda result pottu irukinga? Ipo November month finish aaga podhu Theriyumla?
Aanalum ivlo vegam koodadhu .

மர்மயோகி said...

என்னது தெய்வத்திருமகள் வெற்றி படமா? காமெடி பண்ணாதீங்க தல..

ராமகுமரன் said...

pagan first half comedy is very good