Thottal Thodarum

Nov 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

60 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், பதிவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் -கேபிள் சங்கர்


விஜய் சேதுபதிக்கு அடுத்த நாள் திருமணம். அதுவும் காதல் திருமணம். தன் நண்பர்களை பார்க்க சேது அவர்களது வருகிறார். பேசிக் கொண்டிருந்தவர்கள், வா ஒரு ஆட்டம் கிரிக்கெட் ஆடுவோம் என்று ஆட, ஆட்டத்தின் நடுவில் கேட்ச் பிடிக்கப் போய் மல்லாக்க விழுகிறார் சேது. அதன் பிறகு அவருக்கு ஸ்டாப் பளாக் போல கிட்டத்தட்ட ஒரு வருடம் நடந்த சம்பவங்கள் மறந்து போய்விடுகிறது. அவரின் காதல், நாளைய திருமணம் என்று எல்லாமே. இந்த பிரச்சனையை சமாளித்து எப்படி அவரது நண்பர்கள் அவருக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். எப்படி?


இம்மாதிரியான ஞாபக மறதி கதையை வைத்து உருகிப் பிழிந்து செண்டிமெண்ட் கதை சொல்ல முடியும். அல்லது காமெடியாய் சொல்ல வேண்டுமானால் கொஞ்சம் மிகைப்படுத்தி யாரையாவது கிண்டல் செய்து படமாக்கியிருக்க முடியும். ஆனால் நிஜ வாழ்க்கையில் நாம் சில சமயங்களில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை போராடி தாண்டி வந்திருப்போம். ஆனால் அதை மீண்டும் நம் நண்பர்களோடு நினைவு கூர்கையில் காமெடியாய் இருக்கும். அதுப் போலத்தான் தேவையில்லாமல் நண்பனைக் கூப்பிட்டு கிரிக்கெட் ஆடச் சொல்லி இம்மாதிரி ஆகிவிட்டதே என்ற குற்ற உணர்ச்சியில் நண்பர்கள் எப்படியாவது விஜயின் காதல் திருமணத்தை நடத்த படும் பாட்டை பார்க்கும் நமக்கு சிரிப்பு வராமல் இருப்பது மிகவும் கஷ்டம்.

படத்தின் பெரிய ப்ளஸ் பாயிண்ட் நடித்த நடிகர்கள். விஜய் சேதுபதியைத் தவிர கிட்டத்தட்ட மற்றவர்கள் எல்லோருமே புதியவர்கள். குறிப்பாய் நண்பர்களாய் வரும் மூன்று பேர். மிடில் ஏஜ் கேரக்டரில் வரும்  நண்பரின் முழியும், பேச்சும் அட்டகாசம். கிரிக்கெட்டில் ஓவர் காஜு அடிப்பதாகட்டும், சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மற்றவனை மாட்டி விட்டு வேடிக்கைப் பார்க்குமிடமாகட்டும் மனிதர் கலக்குகிறார். இன்னொரு நண்பர் கொஞ்சம் சீரியசானவர். இந்த ப்ரச்சனையின் நாயகனான விஜய் சேதுபதியை டேக்கில் பண்ணக்கூடிய ஒரே ஒருவர். ஏன் இவர் ஒருவரின் பேச்சை மட்டும் விஜய் சேதுபதி கேட்கிறார் என்ற விஷயத்தை தெரிந்து கொள்ள படம் பார்த்தே ஆகவேண்டும். கொஞ்சம் லோக்கல் பாஷை பேசிக் கொண்டு இன்னொசெண்டாய் வலம் வரும் அந்த துறு துறு நண்பரும் சுவாரஸ்யம். க்ளைமாக்ஸில் யாருக்கு கல்யாணம் என்று சொல்வது என்று குழம்பி சட்டென இவரைக் காட்டி விட முழிக்கும்  இடம் இருக்கிறதே.. சூப்பர்.  
இவர்கள் எல்லாரையும் விட நிஜமாகவே விஜய் சேதுபதிக்கு கொஞ்சம் சேலஞிங்கான கேரக்டர் தான். முதல் காட்சியில் அடிபட்டவுடன் அவர் பேசும் டயலாக் “ நீ பால் போட்ட, இவன் அடிச்சான். பால் மேல போச்சா.. நான் கேட்ச் பிடிக்கப் போனேன். அப்ப கால் சிலிப் ஆயிருச்சா? என்று நடந்ததை சொல்லிவிட்டு, அதுக்கப்புறம் என்னாச்சி?  என்று கேட்டபடியே “பின்னாடி அடிபட்டிருச்சு இல்லையா? Medula ablangada வில அடிபட்டிருக்கும் அதான் இப்படி ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை கொஞ்சம் நேரத்தில சரியாயிரும்” என்று அவரே ரெமெடியும் கொடுத்த மாத்திரத்தில் மீண்டும் அதே டயலாக்கை பேச ஆரம்பிப்பது அட்டகாசம். அதே போல முதல் காட்சியில் அடித்துக் கொண்ட கஸின் பிரதரை அவர்களுக்குள் நடந்த சண்டை மறந்துவிட்டதால் பழைய பாசத்தில் உருகும் காட்சியிலும், தன் காதலியையே கல்யாண் ரிஷப்ஷனில் முதல் முறையாய் பார்ப்பது போல பார்த்து “ச்சே... பேய் மாதிரி இருக்கு” என்று திரும்பத் திரும்ப சொல்ல, அதனால் கல்யாணம் நிற்கும் வரைக்கும் போகும் காட்சிகளில் எல்லாம் க்ளாஸ். கண்களில் ஞாபகமில்லாத ஒரு தேடல் பார்வையுடன் மையமாகவே பேசி முகத்தை இன்னொசென்சாக வைத்துக் கொண்டு, “எப்படி டா சைராபானுவுக்கு துரோகம் பண்றது?” என்று ஆறாம் க்ளாஸில் காதலித்த பெண்ணைப் பற்றி பேசுமிடமெல்லாம் க்யூட்டான நடிப்பு.  வாழ்த்துக்கள் விஜய். 

5டி கேமராவில் படமாக்கப்பட்டிருப்பது பல இடங்களில் வீடியோஃபீல் கொடுத்து டி.ஐ. சரியில்லாததை அப்பட்டமாக்குகிறது.  ஒளிப்பதிவு பற்றி சொல்வதற்கு பெரிதாய் ஏதுமில்லை. வேத் சங்கரின் இசையில் ஒரு பாடல் மட்டுமே படத்தில் வருகிறது. டெக்னிக்கலாய் படம் பட்ஜெட்டின் காரணமாய் ஷீணமாய் இருந்தாலும் கண்டெண்ட் வித்யாசமாக இருப்பதால் சுவாரஸ்யம் கெடவில்லை.  படத்தின் பலம் கதைக் களனும், வசனங்களும். திணிக்கப்படாத  மிக இயல்பான சிரிப்பை வரவழைக்கும் வசனங்கள். 
எழுதி இயக்கிய பாலாஜிக்கு இது முதல் படம். ஒளிப்பதிவாளர் பிரேமின் வாழ்க்கையில் நடந்ததைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். கதை ஹாஸ்பிட்டலுக்கு போனதும்தான் விறுவிறுப்பாகிறது. அந்த விறுவிறுப்பை க்ளைமாக்ஸ் வரை மெயிண்டெயின் செய்திருக்கிறார்கள். வித்யாசமான களத்தை எடுத்துக் கொண்டு குறுகிய பட்ஜெட்டில் சுவாரஸ்யமாய் தந்ததற்காக பாராட்டுக்கள். குறையாய் சொல்ல போனால்,  பேசியதையே பேசிக் கொண்டு ஒரே இடத்தில் உழல்வது போல, பெரிய திருப்பங்களுடனான சம்பவங்கள் முதல் பாதி திரைக்கதையில் இல்லாதது தான். ஒரு இருபது நிமிடம் ட்ரிம் செய்திருந்தால் இன்னும் கொஞ்சம் க்ரிஸ்பாக இருந்திருக்கும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, நல்ல வியாபாரம் ஆகி வெளியாவதற்கு முன்னாலேயே தயாரிப்பாளருக்கும், வாங்கிய விநியோகஸ்தருக்கும் லாபம் கொடுத்திருக்கும் படம். படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் நல்ல அனுபவத்தைக் கொடுத்து வசூலிலும் வெற்றி பெறும் என்பது நிச்சயம். BUT DON'T MISS IT

Post a Comment

12 comments:

Ba La said...

என்மோ சொல்ல வந்தேன் ... மறந்திடிச்சு..

கும்மாச்சி said...

சங்கர் உங்கள் விமர்சனம் படத்தை பார்க்கத்தூண்டுகிறது. இதுமாதிரி படங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.

priyan said...

// வெளியாவதற்கு முன்னாலேயே தயாரிப்பாளருக்கும், வாங்கிய விநியோகஸ்தருக்கும் லாபம் கொடுத்திருக்கும் படம்.

வெளியாவதற்கு முன்னாலே விநியோகஸ்தர்களுக்கு எப்படி லாபம் வரும் ? டபுட்டு ...

அஞ்சா சிங்கம் said...

பர்சில் இருந்த பணத்தை காணும் ...........

இப்படி காச்சிங்கா டைட்டில் வேணுமா ......?

Thozhirkalam Channel said...

படம் பார்த்தது போன்ற அனுபவம் உங்கள் விமர்சனத்துக்கு நன்றி...

rahman said...

சார் அப்படியே தலாஷ் விமர்சனம் தந்தா நல்லாருக்கும்

Tamilthotil said...

நானும் பார்த்தேன் அருமையான படம்

pradeep said...

after one hour, i felt really irritating, since the lead actor repeating the same dialog again,and again , not at all worth watching

kanavuthirutan said...

இந்த வருடத்தின் வெற்றிபடங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.

நன்றி கேபிள்ஜி....

மதுரை சரவணன் said...

marakkaama paarththituvom

பழமைபேசி said...

//pradeep said...
after one hour, i felt really irritating, since the lead actor repeating the same dialog again,and again , not at all worth watching//

boss... we couldn't stop laughing at all and I wanted to watch it again. Sorry!!

Hari said...

Sirichu sirichu vayiru valichudhu. Kuripaaga marriage reception la ponna partthu (Ppa, yarda idhu pei madhiri makeup pottu iruku) nu thirumba thirumba solra scene la yaraalayum sirikkama irukave mudiyadhu. sema comedy movie. Kalakalappu ku apparam indha varushathoda best comedy movie.