சாப்பாட்டுக்கடை - அமிர்தம்
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவகங்கள் பிரபலமாக இருக்கும். பயணம் செய்யும் போது அவ்வூர்களை கடக்கும் சமயங்களை நம்முடைய லஞ்ச் டைமாகவோ, அல்லது டின்னர் டைமாகவோ அமைத்துக் கொண்டு போய் சாப்பிடுகிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது அதே உணவகங்கள் தமிழ்நாடு பூராவும் மெல்ல செயின் ஆப் ரெஸ்ட்ராரண்டுகளாய் பரவி வரும் கலாச்சாரக் காலமிது. எல்லா ஏரியா சரவணபவனிலும் ஒரே டேஸ்ட்டில் அதே அயிட்டங்களோடு கிடைக்கும் என்பதில் கொஞ்சம் த்ரில் குறைவாகத்தானிருக்கிறது. சரவணபவன் ஆரம்பித்து வைத்த இந்த கலாச்சாரம் இன்றைக்கு எல்லா முக்கிய உணவகங்களும் ஏரியாவுக்கு ஒரு கிளை என்று பரப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். சில உணவகங்கள் புதிதாய் திறக்கும் போதே இரண்டு மூன்று கிளைகளோடு ஆரம்பிக்கிறார்கள். அப்படித்தான் இந்த அமிர்தமும் ஆரம்பித்திருக்கிறது.