சாப்பாட்டுக்கடை - நியூ பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்
பட்டுக்கோட்டை காரர்களுக்கு இந்த பெயரை கேட்டாலே நாவில் நீர் ஊரும். கே.ஆர்.பியிடம் சொன்ன மாத்திரத்தில் அவர்களிடம் சாப்பாடு அட்டகாசமாய் இருக்குமென்றார். நண்பர் ஸ்ருதி டிவி கபிலன் தன் பிறந்த நாள் விருந்துக்கு அழைத்திருந்தார். நீங்களே ஒரு இடத்தை தேர்தெடுங்கள் என்றதும் நான் சொன்ன பெயர் மேற்ச் சொன்ன இடம் தான். 12 .30 மணிக்கே போய்விட்டதினால் அப்போதுதான் பூஜை போட்டுக் கொண்டிருந்தனர். ரெண்டு பேர் சாப்பிட காத்திருந்தனர். ஓனர் செல்வத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார் அங்கிருந்த சினிமா தயாரிப்பாளர் என்னைப் பார்த்ததும். டெய்லி பேப்பரை கீழே போட்டு அதன் மேல் தலை வாழை இலை போட்டார்கள். பாட்டிலில் வாட்டர். இலை கழுவி விரித்த மாத்திரத்தில் இரண்டு பொரியல்கள், ஒரு தொக்கு. அந்த தொக்கின் பெயரைச் சொன்னால் சில பேர் மூக்கில் விரல் வைத்தபடி சப்புக் கொட்டி சாப்பிடுவார்கள். பல பேர் ஆழமாய் மூச்சிழுத்து சேம் சப்பு கொட்டு சாப்பிடுவார்கள். கருவாட்டு தொக்கு வைத்தார்கள். ஆகா ஆரம்பமே அசத்தலாயிருக்கிறதே.. ஒரு சிக்கன் சாப்பாடு, ஒரு மட்டன் சாப்பாடு, ஒரு எரா சாப்பாடு, ஒரு மீன் சா...