Thottal Thodarum

Jun 23, 2010

சாப்பாட்டுக்கடை

இட்லி என்றவுடன் நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது.. மதுரை ப்ளாட்பார இட்லிகடைகளும், ரத்னா பவன் இட்லி சாம்பாரும்,  முருகன் இட்லிக் கடையும்தான். அதுவும் சமீப வருடங்களில் இட்லிக்கு க்யூ கட்டி வெயிட் செய்து சாப்பிடுகிற ஒரு உணவகமாகிவிட்டது முருகன் இட்லிக் கடை. சென்னை முழுவதும் பல இடங்களில் அவர்களது ப்ராஞ்சுகள் திறக்கப்பட்டாகிவிட்டது என்றாலும், ஒரு இட்லிக்கு 8 ரூபாய் வாங்கினாலும் கூட்டம் குறைந்த பாடில்லை.
Photo0084
இப்போது நார்த் உஸ்மான் சாலையில் உள்ள அவர்களது ப்ராஞ்சில் மாலையில் மட்டும் ப்ஃபே சிஸ்டத்தில் உபசரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பெரியவர்களுக்கு 112 ரூபாயும், சிறுவர்களுக்கு 56  வாங்குகிறார்கள்..
.
இட்லி, பொங்கல், சக்கரை பொங்கல், மெதுவடை, தோசை, மசால் தோசை, பட்டர் தோசை, நெய் தோசை, பொடி தோசை, மற்றும் எல்லா வகையான ஊத்தப்பம், ரவா தோசை,  சாம்பார், நான்கு வகை சட்னி, ம்ற்றும் பொடியுடன் என்று எல்லா டிபன் அயிட்டங்களும் அன்லிமிட்டாக த்ருகிறார்கள். எவ்வளவுதான் மோசமாக சாப்பிடுபவராக இருந்தாலும் இங்கு சாப்பிடுவது லாபம் தான்.
Photo0086 ஏனென்றால் இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை சாப்பிட்டால் குறைந்த பட்சம் நூறு ரூபாய் ஆகிவிடும் இவர்களது உணவகத்தில், இதில் பொடிக்கு தனியே மூன்று ரூபாயோ, ஐந்து ரூபாயோ..அப்படியிருக்க, வகை தொகை இல்லாமல் சுமார் இருபத்திரண்டு அயிட்டங்கள் 112 ரூபாய்க்கு என்றால் தரை ரேட்.. காபி, பால், அல்லது ஜிகர்தண்டாவோடு. விரைவில் விலையேற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது. இட்லி மட்டும் ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது. ஏனென்று தெரியவில்லை. ஒரு நடை போயிட்டு வந்திருங்க.. அருமையான டின்னரை கொண்டாடுங்க.. மாலை 7-10.30 மணி வரை.. பேஸ்மெண்டில்.
கேபிள் சங்கர்
Post a Comment

32 comments:

King Viswa said...

அடடே,

அட்டகாசமான மேட்டர். பல பேருக்கு பிடிக்கவில்லை என்றாலும்கூட நான் இப்போதும்கூட மதுரைக்கு போகும்போதெல்லாம் முருகன் இட்லி கடையில் தான் சாப்பிடுகிறேன்.

தகவலுக்கு நன்றி.

Unknown said...

அங்கு சாப்பிட்டால் வயிறு உப்பிக்கொள்ளுதே ஏன்?...

Cable சங்கர் said...

அவர்கள் விலை பார்த்தும் சில இடங்களில் சர்வீஸினாலும் நிறைய பேருக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும். நிச்சயம் டி.நகரில் நான் சொல்லிய ப்ராஞ்சில் போய் ஒரு கட்டு கட்டுவிட்டு வாருங்கள் தலைவரே..

Cable சங்கர் said...

அப்படியா செந்தில்..? நான் போன வாரம் குடும்பத்தோடு அங்கே மீண்டும் சென்றிருந்தேன். ஒன்னியும் பிரச்சனை யில்லை .. பார்ப்போம் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று..? :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ada paavikala me the first kidaiyaathaa?

King Viswa said...

//இவர்களது உணவகத்தில், இதில் பொடிக்கு தனியே மூன்று ரூபாயோ, ஐந்து ரூபாயோ.//

சார், நீங்க சொன்னது முற்றிலும் சரி. ஒவ்வொரு தடவை இங்கு சாப்பிடும்போதும் டேஸ்ட் காரணமாக ஒரு இட்லிக்கு ஒரு கரண்டி பொடி வாங்குவேன்.

ஒரு சின்ன ரெக்வஸ்ட்: இந்த மாதிரி (இதே அளவுக்கு டேஸ்ட் இல்லன்னாளும்கூட ஓக்கேதான்) நல்ல இட்லி பொடி சென்னையில் எங்காவது கிடைக்குமா? இந்த முருகன் இட்லி கடையில் பொடி தனியாக விற்பது இல்லையாம்.

க ரா said...

அருமையா இருக்கும்னா அங்க. நாக்க சப்பு கொட்ட வச்சுட்டிங்க.

நேசமித்ரன் said...

ம்ம் வருவோம்ல :)

ஆமா 2 வது போட்டோவுல இருக்குற ஆள் தென்னாடார் பார்ட்டியாச்சே

உங்க ஆட்டத்துல எங்க வந்துச்சு ?????

விந்தையடா விந்தை !!!

Menaga Sathia said...

6 மாதங்களுக்கு முன் இந்தியா சென்றிருந்தபோது சென்னைக்கு ஒரு வேலையாக போனபோது முருகன் இட்லிக்கடையில் தான் சாப்பிட்டோம்..நீங்க சொன்னமாதிரி ரேட் அதிகம்னாலும் சுவை படு சூப்பர்ர்ர்.இன்னும் அந்த டேஸ்ட் அப்படியே இருக்கு...

மேவி... said...

"மாலை 7-10.30 மணி வரை.. பேஸ்மெண்டில்"

ம்ம்ம்ம் ...ஆபீஸ் விட்டு வீடு வந்து சேர்வதற்கே 10 - 11 மணி ஆகுது .... ஞாயிறு தான் போக முயற்சி எடுக்கணும் ...

மணிஜி said...

செந்தில் சொன்னது உண்மைதான்

KarthikeyanManickam said...

Shankar anna,

Thanks for your warm welcome.
Appadiyea bangalore vangaa inga kooda "Murugan Idly Shop - Kormangala-la" irukku, oru round poiettu varuvoom.

Thanks again anna,
Karthikeyan Manickam.

மரா said...

செந்தில் சொன்னது பொய்.

Sukumar said...

ரைட்டு...

பருப்பு (a) Phantom Mohan said...

என்ன சார் இது?

"ரஜினிக்கு தமிழ் நாட்டுல ரசிகர்கள் ஜாஸ்தி, அவர் ஸ்டைல் சூப்பரா இருக்கும். கமல் நல்லா நடிப்பார், விஜய் வேஸ்ட்டு" இதெல்லாம் சின்னக் குழந்தைக்கு கூட தெரியும். அது போல தான் முருகன் இட்லிக்கடையும், பூக்கடைக்கு விளம்பரம் எதுக்கு?

எனக்கு தெரிஞ்சு சென்னைல இந்த ஹோட்டல் தெரியாதவனே கிடையாது! வேற ஏதாவது புது ஹோட்டலைப் பத்தி சொல்லுங்க.

உங்களுக்கு ஒரு ஹோட்டல் சொல்றேன், triplicane ல அமராவதி மெஸ் ன்னு நெனைக்கிறேன், பேர் மறந்து போச்சு. triplicane போஸ்ட் ஆபீஸ் பக்கம், சின்ன மெஸ், மொத்தமே நாலு டேபிள் தான். தினம் ஒரு ரசம் போடுவாங்க, அதப் பத்தின குறிப்பு வேற எழுதி வச்சிருப்பாங்க, குங்கமம் புக் ல கூட வந்தது "ரசாவதாரம்" ன்னு, ட்ரை பண்ணுங்க, சீப் அண்ட் பெஸ்ட். 12.30 க்கு போங்க கொஞ்சம் late ஆனாலும் ஒரு மணி நேரம் நிக்கணும்.

ஜெய் said...

// விரைவில் விலையேற்றி விடுவார்கள் என்று தோன்றுகிறது. //

அட.. சத்தமா சொல்லாதீங்கன்னே... ஏத்திடப்போறாங்க..

ஜெய் said...

// கே.ஆர்.பி.செந்தில் said...
அங்கு சாப்பிட்டால் வயிறு உப்பிக்கொள்ளுதே ஏன்?.. //

இல்லைங்க செந்தில்... திருவல்லிக்கேணி ரோட்ல இருக்க முருகன் இட்லி கடையில, மூணு வருஷமா வாரம் ஒருமுறையாவது சாப்பிட்டு இருக்கேன்... நம்பி சாப்பிடலாம்...

அரவிந்தன் said...

//Thanks for your warm welcome.
Appadiyea bangalore vangaa inga kooda "Murugan Idly Shop - Kormangala-la" irukku, oru round poiettu varuvoom//

பெங்களுர் கோரமங்களாவில் இருப்பது ஒரிஜினம் முருகன் இட்லி கடையல்ல .அது போலி.நன்றாக உற்றுப்பார்த்தால் “ஓம் முருகன் இட்லி கடை” என்று எழுதியிருப்பது தெரியும்.


போலி முருகன் இட்லி கடையில் கடை திறந்த முதன் நாளே சாப்பிட்டு நொந்து போனவனின் இரண்டு செண்ட்”போலிகளை கண்டு எமாறாதீர்கள்”

அரவிந்தன்
பெங்களுர்

பொன்கார்த்திக் said...

//போலி முருகன் இட்லி கடையில் கடை திறந்த முதன் நாளே சாப்பிட்டு நொந்து போனவனின் இரண்டு செண்ட்”போலிகளை கண்டு எமாறாதீர்கள்”//

சகா நானும் தான்..

சிநேகிதன் அக்பர் said...

ஜி. என். செட்டி ரோட்டில் ஒரு முறை சாப்பிட வேண்டும் என நினைத்தேன் முடியவில்லை.

அடுத்த முறை முயற்சி பண்ணனும்.

நல்ல பகிர்வுண்ணே.

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சென்னை வரும்போது சாப்பிட்டுவிட்டு
சொல்லுரேன்...நீங்கள் சொன்னா நல்லாதானிருக்கும்..

விக்னேஷ்வரி said...

சென்னை வரும் போது அவசியம் முயற்சிக்கிறேன்.

GEETHA ACHAL said...

தகவலுக்கு நன்றி...கண்டிப்பாக வீட்டில் இருக்கவங்க கிட்ட சொல்லி போயவிட்டு வர சொல்கிறேன்...நன்றி...

Prasanna Rajan said...

எல்லா ஹோட்டல்களிலும் ஆனியன் ஊத்தாப்பம், பெரிய வெங்காயத்தில் போடுவர். இங்கு மட்டும் சின்ன வெங்காயத்தில். அதனால் முருகன் இட்லி கடையின் ஆனியன் ஊத்தாப்பம், எனக்கும், என் தந்தைக்கும் பேவரைட்.

சென்னை வந்தா ட்ரை பண்ண வேண்டியது தான்...

Cable சங்கர் said...

@பாண்டம் மோகன்
தலைவரே.. முருகன் இட்லிகடைக்க்கு விளம்பரம் செய்யவில்லை. அவர்கள் பஃபே ஆரம்பித்து இருப்பதும், அதில் சீப்பாக இருப்பதையும் சொல்லவே இந்த பதிவு. புதிய மெஸ் அறிமுகத்திற்கு மிக்க நன்றி சாப்பிட்டு விட்டு சொல்கிறேன்

Kolipaiyan said...

உண்மைதான்

V.RAMACHANDRAN said...

Sankar sir
Here in singapore very worst.
V.Ramachandran
Singapore

vinthaimanithan said...

அடடா! ஃபோட்டோ அவுட் ஆஃப் ஃபோகஸ்ல போயிடுச்சே!! ம்ம்ம்... என்னதான் எண்ணெயை தடவிட்டு விழுந்து பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்!!!

ஆமா... அப்படியும் நேசமித்ரனுக்கு எவ்ளோ ஷார்ப்பான கண்ணு???

vinthaimanithan said...

அடடா! ஃபோட்டோ அவுட் ஆஃப் ஃபோகஸ்ல போயிடுச்சே!! ம்ம்ம்... என்னதான் எண்ணெயை தடவிட்டு விழுந்து பொரண்டாலும் ஒட்டுற மண்ணுதான் ஒட்டும்!!!

ஆமா... அப்படியும் நேசமித்ரனுக்கு எவ்ளோ ஷார்ப்பான கண்ணு???

பிரதீபா said...

நார்த் உஸ்மான் ரோடு எதுத்தாப்புல தான் எங்க 'ஆப்'பீஸ் இருந்திச்சுங்க ஒரு காலத்துல. சாப்ட்டு சாப்ட்டு வெறுத்தே போச்சுங்க.. ஆனா பபே இருக்கறது இப்போ தான் தெரியுது. சர்தான், எனக்கு இனிமே அந்த ஏரியா பக்கம் வேலையே கிடையாதுன்னு தெரிஞ்சு போச்சோ என்னம்மோ :)

@King Viswa ://நல்ல இட்லி பொடி சென்னையில் எங்காவது கிடைக்குமா// - நீங்க ஏன் அடையார் Grand Sweets ஒரு நடை போகக் கூடாதுங்க? எல்லா பொடியும் நல்லா இருக்கும் அங்கே. சங்கீதா , ஒடிஸ்ஸி இருக்கற எடத்துக்குப் பக்கத்துல இருக்குங்க.

cheena (சீனா) said...

அன்பின் கேபிள் சங்கர் - முருகன் இட்லிக் கடையின் பெருமை அருமையாக விளக்கப்பட்டிருக்கிறது. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

For good idli podi, try Khadi Gramodyog Bhavan, Anna Salai or any other branch ! Very homely !