Thottal Thodarum

Jun 19, 2010

ராவணன் – திரை விமர்சனம்

raavanan 1 மொத்த இந்தியாவே எதிர்பார்த்த படம். தமிழ், இந்தி, தெலுங்கு என்று மூன்று மொழிகளில் வெளியாகியிருக்கிற படம். சமீப காலங்களில் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவின் சிட்டி பார்டர் தியேட்டர்களை சேர்த்து சுமார் 35க்கும் மேற்பட்ட தியேட்டர்கள், வெளியாகியிருக்கும் படம். இப்படி ரசிகர்கள் மட்டுமில்லாமல், மொத்த திரையுலகமே மிகவும் எதிர்பார்த்த படம். ராவணன்.

raav pri
எல்லோருக்கும் தெரிந்த இராமாயண கதைதான். மணிக்கு ஏதும் புதிதில்லை, ரோஜா, தளபதி, என்று ஏற்கனவே அவர் பயணித்த களம் தான். ராவணனை நல்லவனாக காட்டியிருக்கும் படம். இதற்கு முன்னர் ஆர்.எஸ்.மனோகர் இலங்கேஸ்வரன் என்ற நாடகத்தில் இராவணனை நல்லவனாக காட்டியிருப்பார். அது ஒரு காலத்தில் மிகப் பெரிய ஹிட் நாடகம்.

raavan (1)


வீரா என்கிற வீரய்யா திருநெல்வேலிக்கு பக்கத்தில் ஒரு கிராமத்தில் மேட்டுக்குடியினரையும், போலீஸாரையும் எதிர்த்தும், போராடுபவன், போலீஸுக்கு அவன் ஒரு தீவிரவாதி, ஆனால் அங்கிருக்கும் மக்களுக்கோ அவன் காவல் தெய்வம். போலீஸ் எஸ்.பியான பிருதிவிராஜின் மனைவி ராகினி என்கிற ஐஸ்வர்யாவை கடத்துகிறான். ஏற்கனவே வீராவின் மீது வெறுப்பை உமிழும் பிருதிவிராஜுக்கு மேலும் ஆத்திரம் வந்து, மனைவியை கண்டுபிடிக்க காட்டுக்குள் தன் படையுடன் இறங்குகிறார். பதினாக்கு நாட்கள் தன் பாதுகாப்பில் கடத்தி வரப்பட்ட ஐஸ்வர்யாவை சில பல பிரச்சனைகளூக்கு பிறகு திரும்பி அனுப்புகிறான். பிருதிவிராஜ், பதினாக்கு நாள் அவனுடன் இருந்தாயே அவனுடன் ஏதாவது என்று கேட்க, பாலிகிராப் டெஸ்ட் செய்ய சொல்லி வற்புறுத்துகிறான். மனம் ஒடிந்த ஐஸ்வர்யா வீராவை தேடி போகிறாள். நடந்தது என்ன..? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் வெள்ளித்திரையில் பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும்.
Raavanan tamil movie stills-02 வீராவாக  விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டும். ஐஸ் மேலிருக்கும் காதலை கண்களிலும், உடல்மொழியில் மட்டுமே வெளிப்படுத்தி அசத்துக்கிறார். முக்கியமாய் க்ளைமாக்ஸில் ஐஸ் திரும்பி வந்ததும் அவர் காட்டும் எக்ஸ்ப்ரெஷன் இருக்கிறதே.. உலகத்தரம். மனுஷன் பின்னியெடுக்கிறார். ஆனால் “பக்..பக்’கென கோழி கத்துவது போலும், டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை. அதெல்லாம்  அவரை ஒரு டெரராக காட்ட நினைத்தது வி.இ.நீராய் தான் முடிந்திருக்கிறது.

ஐஸ் முகத்தில் வயது தெரிகிறது. ஆனால் அம்மணியின் பர்பார்மன்ஸில் மற்றதெல்லாம் தெரியாமல் போகிறது. படத்துக்கு இவர் தான் ஆணிவேர். அம்மணீ அதகள படுத்தியிருக்கிறார். வீராவின் இன்னொரு பக்கத்தை பார்த்து கொஞ்சம், கொஞ்சமாய் நெகிழும் இடத்தில், சாமியிடம் வேண்டிக் கொள்ளும் இடம், நெருக்கத்தில் சஞ்சலப்படும் இடம. க்ளைமாக்ஸில் நான் உன் கூட தங்கிவிட்டால் என் புருஷனை கொல்லாமல் விடுவாயா?என்று கேட்கும் இடத்தில். என்று படம் முழுவதும் இவரின் ராஜ்ஜியம் தான்.

எஸ்.பியாக பிருதிவிராஜ். ஆரம்பக் காட்சியிலிருந்தே வீராவின் மேல் வன்மத்துடன் அலைகிறார்.  ஒரு சில நெருக்கமான காட்சிகளில் ஐஸ்ஸுடன் குலாவுகிறார். ஐஸ்ஸை சந்தேகப்படும் காட்சியில் நச். படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது.
Raavanan (7) படத்தின் ஒளிப்பதிவாளர்களின் சந்தோஷ்சிவன்/ மணிகண்டனின் கைவண்ணம். படம் முழுவதும் ஆர்ப்பாட்டமே நடத்தியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கனவே பாடல்கள் ஹிட். ‘உசுரே போகுதே” பாடல் எல்லார் மனதையும் உருக்க வைக்கும். ஆனால் பாடல் போஸ்ட் ஆன இடம் தான் கொஞ்சம் வழுக்கல். பின்னணி இசை நிச்சயம் பேசப்படும்.

ராமாயணத்தின் இன்ஸ்ப்ரேஷன் என்பதால் கதை பெயர் போடப்படவில்லை என்று நினைக்கிறேன். வசனம் சுஹாசினி. வழக்கமான மணி படத்தின் அளவுகளை விட அதிகமே. ஆனால் பெரிய தாக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் வசனங்கள் புரியவில்லை.


Raavanan (4)
மணி ரத்னம். இவர் ஒரு படம் செய்தால் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் மனிதர். என் ஆதர்ச நாயகன். சினிமாவை வசனங்கள் மூலமாய் வெளிப்படுத்தாமல், மிகக் குறைவாய் பேசி விஷுவல் மொழியாக்கிய ஜித்தன். இப்படத்திலும் தன் கைவரிசையை காட்ட தவறவில்லை.  ஆரம்ப காட்சியில் மலையிலிருந்து குதிக்கும் காட்சியிலிருந்து இவர் காட்ட ஆரம்பிக்கும்  பிரம்மிப்பு படம் முடியும் வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய் விக்ரம், ஜஸ்ஸுக்குமிடையே சலனங்கள் ஏற்படும் காட்சி.. சிம்ப்ளி சூப்பர். எங்குமே உடலால் தீண்டப்படாமல் அவர்களுக்கு ஏற்படும் உணர்வுகளை திரையில் இவ்வளவு அழகாய் கொண்டு வர முடியுமா? ஒரு மாதிரியான எக்ஸ்டஸியில் கண்கள் கலங்கியது எனக்கு. அற்புதமான இதுவரை திரையில் காட்டவேபடாத லொக்கேஷன்கள். மழை பெய்து கொண்டேயிருக்கும் காடு, மலைவாழ் ஜனங்கள். என்று படம் நெடுக விஷுவல் அண்ட் டெக்னிக்கல் அட்டகாசங்கள் மணிக்கே உரித்தானது.
 Raavanan tamil movie stills-07 எல்லாமே ப்ளஸாக இருக்கும் படத்தில் மிகப் பெரிய லெட்டவுன் திரைக்கதைதான். முதல் பாதியில்  கடத்தும் காட்சியை விட்டு விட்டு பார்த்தால் ரொம்ப நேரம் என்ன செய்வது என்றே தெரியாமல் வெட்டியாய் தான் போகிறது. அதே போல இரண்டாம் பாதி வந்ததும் கொஞ்சம் ஜெர்க் அடித்து பரபரக்கிறது. க்ளைமாக்ஸ் வரும் போது நிமிர்ந்து உட்கார வைக்கும் படம் பொத்தென விழுந்துவிடுகிறது என்பதை வருத்ததுடன் சொல்ல வேண்டித்தானிருக்கிறது. 

ராமனின்  மனைவியான சீதைக்கு தன்னை கடத்திய இராவணன் மீது ஒரு சிறு சஞ்சலம் வந்தது. அதுவும் அவனின் அன்பால், அவனின் குணத்தால். தன்னை பத்திரமாக திரும்பி அனுப்பிய பின் சந்தேகப்படும் ராமனை விட அவன் உயர்ந்தவன் என்று முடிவு செய்து இராவணனிடம் போனாள். இந்த இடம் தான் அட்டகாசம். ஆனால் அதற்கு பிறகு நடக்கும் முடிவு சினிமாத்தனம். அல்லது மணியின் தைரியமின்மை என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்போது சீதையான ஐஸ் கேரக்டர் தன் கணவனிடம் தன்னை பற்றி வீரா தப்பாய் சொல்லியிருக்க மாட்டான் என்று உறுதியாக சொல்லிவிட்டு வீராவை பார்க்க போனாளோ.. அப்போதே ராமன் கேரக்டரான பிரிதிவி செத்ததற்கு சமம். இதற்கு பிறகு ஐஸை தொடர்ந்து பட்டாலியனோடு வந்து கொல்வது எல்லாம்.. ம்ஹும்..

படத்தில் நாம் ஒட்டமுடியாமல் போவதற்கான காரணங்கள் நிறைய. முதலில் வீராவும் அவன் சார்ந்த இடமாக சொல்லப்படுகிற திருநெல்வேலி மாவட்ட, எப்போதும் மழை பெய்யும் மலை கிராமம். பின்பு அங்கு சொல்லப்படுகிற தீவிரவாத மேட்டுக்குடி, பிரச்சனைகள். கதை களமாக காட்டப்படும் இடங்கள், என்று எல்லாமே டப் செய்யப்பட்ட படம் பார்ப்பது போல் உணர்வை ஏற்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. நிச்சயம் இப்படட்தை ஹிந்தியில் பார்க்கும் போது இம்மாதிரியான உணர்வு இருக்காது என்று தோன்றுகிறது. 
Raavanan-Stills-011 கார்த்திக் கேரக்டர் தான் அனுமன் கேரக்டர் என்று பிரிதிவிக்கு காட்டில் வழி காட்டும் போதே தெரிந்துவிடுகிறது. பின் எதற்கு ஆரம்ப காட்சியில் மரத்துக்கு மரம் தாவி காட்ட வேண்டிய நிர்பந்தம். அதை விட காமெடி ஐஸ் இருக்கும் இடத்தில் அவர் புருஷன் அனுப்பிய ஆள் அடையாள அட்டை வேண்டுமானால் காட்டுகிறேன் என்று சொல்லுமிடம், அதே போல் ப்ரியாமணியை போலீஸார் தூக்கிக் கொண்டு போகும் போது சூர்பனைகையை தான் இது என்பதை சொல்லாமல் சொல்வதை போல, “இப்ப என்ன செய்யட்டும் உன்  மூக்கை அறுக்கட்டுமா” என்று போலீஸ் பேசும் வசனம் எல்லாம் மணி சார்.. உங்களிடமிருந்தா..?

அட்டகாசமான லொக்கேஷன், அருமையான நடிகர்கள், டெக்னிக்கலாய் மிரட்டும் ஸ்ட்ராங் டீம்,  என்று எல்லாம் இருந்து ஜிவன் குறைந்தே இருக்கிறான் ராவணன்.  இருந்தாலும் தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டிய படம் என்பதை மறுக்க முடியாது.

ராவணன் -  A Extrodinary Film Without Life

டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்.

கேபிள் சங்கர்
Post a Comment

62 comments:

Sukumar said...

உங்க விமர்சனத்துக்கு காத்திருந்தேன். நல்லா இருக்கு தல...

balavasakan said...

உங்களை வரிக்கு வரி ஆமோதிக்கிறேன முதன் முதலில் ஒரு மணி படத்தில் மணியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒளிப்பதிவாளர்சந்தோஷ் சிவன் பேர்வாங்கி இருக்கிறார்...

ஆனால் எனக்கு படத்தின் முடிவு ஓகே...

குரு said...

சுஜாதா இல்லாத குறையை நிச்சயம் உணர முடிகிறது...

balavasakan said...

எனக்கு ஒரு டவுட் இந்த படத்தை ராமாயணம் கதை தெரியாதவர்கள் பார்த்தால் எப்படி பீல் பண்ணுவார்கள் உதாரணமாக ஒரு முஸ்லிம் நண்பர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துகொள்ளுங்களேன்

ARAN said...

nice review thanks

balavasakan said...

சுஜாதா இல்லாத குறையை நிச்சயம் உணர முடிகிறது...

##நிச்சயமாக##

pichaikaaran said...

விமர்சனம் நன்றாக இருக்கிறது என பாராட்ட ஆசை... ஆனால், வேறு பதிவர்கள், இதற்காக என்னை முட்டாள் என திட்டுவார்களோ என பயமாக இருக்கிறது....

http://pichaikaaran.blogspot.com/2010/06/blog-post_8533.html நம்பியவர்களை நட்டாற்றில் விடுபவரா , கேபிள் சங்கர் ??

இர்ஷாத் ஜத்தி said...

80களில் வங்த மறைந்த அணுராதா ரமணன் எழுதி சக்தி இயக்கத்தில் வந்த "சிறை" திரைப்படமும் இதே சாயல்தானே?

ஜெயந்த் கிருஷ்ணா said...

விமர்சனத்துக்கு காத்திருந்தேன். நல்லா இருக்கு

Cable சங்கர் said...

@பாலவாசகன்
ம் தட் பிகாஸ் ஆப் த கண்டெண்ட் ஆப்த பிலிம்.

Cable சங்கர் said...

@பாலவாசகன்
நிச்சயம் தெரிந்த ஆட்கள் எப்படி பீல் செய்தார்களோ அதைப்போலத்தான் பீல் செய்வார்கள்.

படத்தின் குறையே அதுதான். வீராவுக்கும் ராகினிக்குமிடையே ஏற்படும் காதல், அன்புக்கான காரணங்கள். மிகவும்மேலோட்டமாய் சொல்லப்பட்டது மிகப் பெரிய குறை..

இப்படத்தில் மிக முக்கியமாய் உணர வேண்டிய விஷயம். வீராவின் பிண்ணனி, அவன் ஏன் பழிவாங்க துடிக்கிறான் என்பதற்கான காரணம் ஓகே. ஏன் எஸ்.பியின் மனைவியை கடத்த வேண்டும்? அந்த இன்ஸ்பெக்டரை வேண்டுமானல் கடத்தியிருக்கலாம். ஸோ. வெஞென்சுக்கான காரணம் மிக மொக்கை. இது போன்று பல விஷயங்கள் இருப்பதால் திரைக்கதை சொதப்பலால்.. எந்த மதத்துக்காரர்கள் பார்த்தாலும். உணர்வு என்பது ஒன்றுதான். தலைவரே.

Cable சங்கர் said...

@ஆமாம் இர்ஷாத் ரெட்டி

@பார்வையாளன்
மற்றவர்களுக்காக நாம் எதையும் செய்யக்கூடாது என்கிற பாலிசி உள்ளவன் நான்.. :)

உங்க பதிவை முன்னமே பார்த்துவிட்டேன். கூல்..:)

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

தல நான் இன்னும் படம் பாக்கல.உங்க விமர்சனத்த பாத்துட்டு இருந்தன்.மணி சார் தான் சொல்ல வந்த விஷயத்தை வழமை போல இதுலயும் கோட்டை விட்டுடாரா தல...மணி சார் படம் எப்போதுமே முதல் தர மக்களுக்கானது...இது எப்படி..ஏன் இத்தனை தொய்வு படத்துல....ராமாயணம் தெரிந்ததாலா!!!

Ponchandar said...

உங்க விமர்சனம் அருமை. நான் குற்றாலம் அருகில் வசிக்கிறேன். அதனால் திருநெல்வேலி மலைகளில் நடக்கும் கதை என்பதை ஏற்க முடியலை. காமிரா கவிதைக்காக பார்க்கணும்

கோவி.கண்ணன் said...

//டண் டண் டண் என்று வாயால் ஆக்ரோஷமாய் தாளம் போடும் கேரிக்கேச்சர்கள் எடுபடவில்லை.//

இதையெல்லாம் கந்தசாமியில் ஏற்கனவே பார்த்து நொந்து போனோம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sevvaykizhamai paakkanum

அபி அப்பா said...

யோவ் கேபிளாரே! எங்களை என்ன வேலை வெட்டி இல்லாதவங்கன்னு நினைச்சுட்டீரா? படம் இந்தியாவிலே ரிலீஸ் ஆகி 24 மணி நேரம் ஆச்சு. உம்ம விமர்சனம் பார்ப்பதுக்கு இத்தனை நேரம் தொன்னாந்துகிட்டு தேவுடு காக்கா வேண்டியிருக்கு. சீக்கிரம் முதல் காட்சி பார்த்துட்டு போட்டா என்னவாம்? கொலைகொலையா முந்திரிக்கா எல்லாம் முதல் நாளா போடுவீர். இதுக்கு இத்தினெ நேரமா?

இரும் விமர்சனத்தை இனி தான் படிக்க போறேன்.

pichaikaaran said...

லாவணி பதிவு போட்டு நேரத்தை வீணடிப்பதை விட, இந்த விமர்சன பதிவு நன்றாக இருந்தது... அடுத்த பதிவும், இதே போன்று பயனுள்ளதாக இருப்பதையே நானும் விரும்புகிறேன் ... ஆனால், உங்கள் மேல் வைக்கபடும் விமர்சனத்தை நீங்கள் அணுகுவதற்கும், உங்கள் நல விரும்பிகள் மேல் வைக்கப்படும் விமர்சனத்தை , கிண்டலை நீங்கள் அணுகுவதற்கும் , வேறுபாடு தேவை என்பதையும் மறக்காதீர்கள் என் கேட்டு கொள்கிறேன்...

வெறும் படைப்பாளியா, தலைமை பண்பு கொண்ட படைப்பாளியா என்பதை இதுதான் நிர்ணயிக்கும்.... ( என்னை பொறுத்த வரை , இரண்டுமே ஓகே தான்.. சிவாஜியையும் ரசிப்பேன்... எம் ஜி ஆரையும் ரசிப்பேன் )

SurveySan said...

////ராவணன் - A Extrodinary Film Without Life////

perfect!

////டிஸ்கி: நிச்சயம் இப்படம் உலக பட விழாக்களில் பெரிய வெற்றியை பெரும் என்பது என் எண்ணம்./////

i doubt it :)

த.கரன் said...

ராவணன் – ஒரு வீரனின் கதை

http://ithayapaasai.blogspot.com/

குருவையும் சீடப்புளைங்களையும் இங்கும் வந்து படிச்சிபார்க்குமாறு அழைக்கிறேன்

Ganesan said...

முடிவு , விக்ரமுடன் ஜஸ்வர்யாவை சேர்த்து வைக்க வேண்டும் என கேபிள் எதிர்பார்க்கிறார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல விமர்சனம்!

குசும்பன் said...

இனி உங்க விமர்சனத்தையும் படிக்ககூடாது போல:(( முழுகதையையும் சொல்லிட்டீங்க!

வல்லிசிம்ஹன் said...

படத்தைப் பிரம்மாண்டமாக எடுக்க மிகவும் சிரமப் பட்டிருக்கிறார்கள்.
நீங்களே கதை பூராவும் சொல்லிவிட்டீர்கல்:0)
இருந்தாலும் இந்த உழைப்புக்காக பார்க்கத்தான் வேண்டும்.
அவரே (மணி ரத்னம்) ஒரு பேட்டியில் ,கதையின் திருப்பங்களை நிறைய மாற்றவேண்டிய கட்டாயத்துக்குள்ளானதாகச் சொன்னதையும் பார்த்தேன். அற்புதமான விமர்சனம்.

கார்க்கிபவா said...

//வீராவாக விக்ரம், அசத்தலான பாடிலேங்குவேஜ், ஐஸை கடத்தி வரும் போது இருக்கும் பரபரப்பாகட்டும், தன் மீது பயமேயில்லாமல் தன் உயிர் பற்றியும் பயம் இல்லாத பெண்ணை பார்த்து ஆச்சர்யபடும் நேரமாகட்டும், தனக்கே தெரியாமல் மயக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் மயங்கி, கிறங்கி போவதாகட்டும், தன்னுடன் இருந்துவிடுகிறாயா? என்று கேட்கும் இடமாகட்டு//

டும்..டும்..டும்..டும்..டும்..

mudive sollalaama sankarji?

butterfly Surya said...

படத்தில் பிரபு, கார்த்திக், ரஞ்சிதா, ப்ரியாமணி என்று ஏகப்பட்ட நடிகர் பட்டாளம் இருக்கிறது. ///////////

அதெல்லாம் சரி கதை இருக்கா..?

Vediyappan M said...

படத்தின் ஒவ்வொரு அங்குலத்தயும் பிரித்து அற்புதமாக எழுதியிருக்கீறீர்கள்.

Thamira said...

படத்தின் பிளஸ் மைனஸ்களை உங்கள் வழக்கமான பார்வையில் விளக்கமாக தந்திருக்கிறீர்கள். கண்டிப்பாக இன்று பார்க்கவேண்டும்.

(ஒரு காலத்தின் இளமைத்துள்ளல், என் பிரிய கார்த்திக்குக்கா அனுமன் காரெக்டர்? என்ன கொடுமை சார் இது?)

Unknown said...

விமர்சனத்துக்கு காத்திருந்தேன். நல்லா இருக்கு. நன்றி.. :)

ராம்ஜி_யாஹூ said...

மணி இன்னமும் இந்த மூட நம்பிக்கையில் ஏன் இருக்கிறார் என்று புரிய வில்லை. திருநெல்வேலி சார்ந்து எடுத்தால் வெற்றி பெரும் என்று.

எப்படியும் நான் இணையத்தில் இலவசமாகத் தான் தான் பார்க்க போகிறேன், அதுவும் குறிப்பிட்ட சில காட்சிகள் மட்டுமே.

Karthik said...

ஏகப்பட்ட ஸ்பாய்லர்ஸ்.. படம் பார்த்தபிறகுதான் படிச்சிருக்க வேண்டுமோ? ஹ்ம்ம்..

Yasin said...

Positive review from cable sir!!!.
But whoever watched here in Singapore are saying the movie was tame bore. Trusting ur words, gonna watch the movie tonight.

மின்னுது மின்னல் said...

ஒரு முஸ்லிம் நண்பர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துகொள்ளுங்களேன்
//


நீங்க ராமாயனம் எங்க படிச்சிங்கனு சொல்ல முடியுமா???அதான் ஐந்தாவது வகுப்பில் இருந்து சொல்லிகுடுக்குறாங்களே :)

Ŝ₤Ω..™ said...

Nalla oru technical mirattal.. Mathapadi solla onnum illa..

Mani sir, epodhum ungaluku nalla artist, technical team
kidaichiduthu.. Aana adhuku mela onnum solaradhuku illa..

Mothathil.. Raavanan - Technical Mokkai..

Naan sonadhu correcta Cable ji?

R Suresh said...

அருமையான விமர்சனம் !

உங்கள் பதிவையும்,Jackie சேகர் பதிவையும் நேற்றே எதிர் பார்த்தேன், ஒரு நாள் லேட் சார் நீங்க!

முடிவை சொல்லிடிங்களே சார் !

R Suresh said...

அருமையான விமர்சனம் !

உங்கள் பதிவையும்,Jackie சேகர் பதிவையும் நேற்றே எதிர் பார்த்தேன், ஒரு நாள் லேட் சார் நீங்க!

முடிவை சொல்லிடிங்களே சார் !

ஆட்டையாம்பட்டி அம்பி said...

இங்கு பலரது விமர்சனங்களைப்படிதேன். அதில் ஐஸ் அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் வாழ்ந்துள்ளார்கள் என்று.

அப்படி இருக்கும் போது சீதையை எப்பொழுதும் முழு மாரைக் காட்டிக்கொண்டு எப்படி? இது சீதையை அசிங்கமா காட்டுவது ஆகாதா? இந்து மத்ததை புண்படுத்துவது ஆகாதா?

சீதைக்கு ராவணன் மீது காதல் (மையல்) இருப்பதாக காட்டுவது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமாரை கோழையாகா காட்டுவது (பேடி என்று வால்மீகி சொல்லிருந்தாலும்) -ப்ரித்த்விக்கு ஐஸ் ராவானனிடமிருந்து உயர் பிட்சை வாங்கிக் கொடுப்பது இந்து மத்ததை புண் படுத்துவது ஆகாதா?

ராமர் தமிழனுக்கு ஒரு ஹீரோ தான்---ரஜினிகாந்த் மாதிர்! இது தமிழர் மனதைப் புன்படுத்தாதா? சரி அதை விடுங்கள.

இதே படத்தை அப்படியே நூற்றுக்கு நூறு---எதையும் மாற்றாமல்-அப்பபடியே ஒரு சீமானோ அல்லது மணிவண்ணனோ அல்லது சத்யராஜோ எடுத்து இருந்தால் நம்ம ராமகோபாலன் என்ன செய்திருப்பார்?

ponsiva said...

உங்களின் இந்தபதிவை ஒருவர் அப்டியே காப்பி பேஸ்ட் செய்து உள்ளார் பார்த்திர்களா ?

please see below blogspot..

http://premakumar.karaitivu.org/2010/06/blog-post.html#comment-form

Unknown said...

RAW-VANAN !!!

guru said...

உங்கள் விமர்சனம் நன்றாக இருந்தது..
நேற்று இரவு படம் பார்த்தேன்...

ஏ ஆர் ரகுமான் , சந்தோஷ் சிவன், மணிகண்டன், மூவரும்தான் படத்தின் உண்மையான ஹீரோக்கள்....

படம் பார்க்க நல்லாதான் இருந்தது.வசனங்களை நன்றாக உன்னிப்பாக கவனித்தும் சில இடங்களில் வசனங்கள் எனக்கு புரியவில்லை...

உசுரே போகுதே என்ன ஒரு அருமையான சாங்..இந்த சாங்கை கார்த்தி எவ்வளவு பீல் பண்ணி பாடியிருக்கிறார்..ஆனால் அதை பயன்படுத்திய இடம் சற்று கூட சம்பந்தமில்லாமல் வருகிறது...

chosenone said...

ராமாயணத்திற்கும் இந்த படத்திற்கும் இருக்கிற தொடர்பை விட "RASHOMON" படத்தின் தாக்கம் தான் மிக மிக அதிகம்....... அது தான் நீங்கள் சொல்வது போல் LIFE இல்லாமல் இருக்கு ....
அகிரா குரோசவாவின் "rashomon" படத்திற்கான லிங்க்:
http://www.youtube.com/watch?v=-XZCZHXmWbA&playnext_from=TL&videos=L8DMg553ao4

Unknown said...

நண்பர் குரு கூறியது போல சுஜாதா இல்லாத குறை நிச்சயம் தெரிகிறது. வசனங்கள் இரண்டாம் தரம். வழக்கமான மணி ரத்னம் படம் பார்த்த உணர்வே இல்லை. மிகுந்த சிரமப்பட்டு காட்சிகளை படமாக்கி இருக்கிறார்கள். நிச்சயம் பாராட்டலாம். ஆனால் விக்ரம் என்கிற அற்புதமான நடிகனை சரியாக உபயோகிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இவ்வளவு காலம் சுஜாதா தான் மணி ரத்னத்தின் பின்பலமாக இருந்திருக்கிறார் என்று சொல்லத் தோன்றுகிறது.

Hussain Muthalif said...

@ பாலவாசகன் //எனக்கு ஒரு டவுட் இந்த படத்தை ராமாயணம் கதை தெரியாதவர்கள் பார்த்தால் எப்படி பீல் பண்ணுவார்கள் உதாரணமாக ஒரு முஸ்லிம் நண்பர் ஒருவர் பார்த்தார் என்று வைத்துகொள்ளுங்களேன்//

நல்லா காமெடி பண்றீங்க!!, எந்த நாட்டுல சார் இருக்கீங்க??..இந்தியாவுல பொறந்த எல்லாருக்கும் ராமாயணமும், மகாபாரதமும் நல்லா தெரியும்... ஜைனமும், புத்தமும் கூட தெரியும். அதுதான் இந்தியாவோட தனித்தன்மையே....வேற்றுமையில் ஒற்றுமை..படிச்சதில்லையா??... நீங்க சொல்றது மற்ற நாட்டுல வேணா நடக்கலாம் (உதா- அமெரிக்கா)- அதுக்கும் கேபிள் சார் பதில் கொடுத்துட்டார்.

தினேஷ் ராம் said...

ஒரே 'பக்.. பக்..' தான்: http://3.ly/2Cfa

Madumitha said...

படத்த வால்மீகியும்
கம்பரும் பாத்தா
கோச்சுக்கமாட்டாங்களா?

ஜோசப் பால்ராஜ் said...

100% சரியா சொல்லிருக்கீங்க.
இப்ப தான் படம் பார்த்துட்டு வந்தேன்.
எனக்கும் இதே தான் தோணுச்சு.

அத்திரி said...

நீங்க சொன்ன மாதிரி ஐசுக்காகவாது பார்க்க்னும் அண்ணெ

Pepe444 said...

VISIT MY BLOG PLEASE AND FOLLOW ME :) >>> http://artmusicblog.blogspot.com/

காத்தவராயன் said...

ம‌ணிர‌த்ன‌ம் அறிவுஜீவி இய‌க்குன‌ர், இந்திய‌ சினிமாவின் அடையாள‌மாய் என்றுமே இருந்த‌தில்லை என்ப‌து ச‌த்திய‌மான‌ உண்மை.

ம‌ணியின் முத‌ல் வெற்றிப்ப‌ட‌மான‌ “மெள‌ன‌ ராக‌ம்” கூட‌ கே.பாக்கிய‌ராஜின் “அந்த‌ 7 நாட்க‌ள்” ப‌ட‌த்தின் அப்ப‌ட்ட‌மான‌ காப்பி. ஒரு க‌தாசிரிய‌ராக‌ கே.பாக்கிய‌ராஜின் கால் தூசுக்கு கூட‌ பெறாத‌ ம‌ணிர‌த்த‌ன‌த்தை சிற‌ந்த‌ ப‌டைப்பாளி என்று சில‌ர் கொண்டாடுவ‌து பேத‌மையிலும் பேத‌மை.

“என‌க்கு ச‌ர்வ‌தேச‌ த‌ர‌த்திலான‌ இசை தேவைப்ப‌ட்ட‌தால் AR.ர‌குமானுட‌ன் இனைந்தேன் ம‌ற்ற‌ப‌டி ராஜாவுட‌ன் எந்த‌ பிர‌ச்ச‌னையும் இல்லை” என்று ஒருமுறை ம‌ணிர‌த்ன‌ம் உள‌றியிருந்தார், இதுவா உண்மையான‌ ந‌ட்பு? உண்மையான‌ ந‌ட்பு என்ப‌து த‌ன்னுடைய‌ வ‌ள‌ர்ச்சியிலும் ந‌ண்ப‌னையும் கைய‌னைத்து செல்வ‌துதான். ராஜாவின் த‌ர‌த்தை ப‌ற்றி “ப‌ல்ல‌வி அனுப‌ல்ல‌வி”க்கு முன்ன‌ரே ம‌ணிர‌த்ன‌ம் க‌ண்ட‌றிந்திருந்தால் ம‌ணிர‌த்ன‌த்தை ஓர் அறிவுஜீவி என்று கொண்டாலாம். இளைய‌ராஜா ம‌ட்டும் இல்லை என்றால் ம‌ணிர‌த்ன‌ம் என்றோ ஒழிந்து போயிருப்பார்.

ம‌ணிர‌த்தின் த‌னித்துவ‌ம் கூட‌ PC. ஸ்ரீ ராம் – ஆல் வ‌ந்த‌து (இருட்டுக்குள்ள‌ ப‌ட‌ம் எடுக்குற‌து).

த‌மிழில் ம‌ணிர‌த்ன‌த்தின் க‌டைசி வெற்றிப்ப‌ட‌மான‌ அலைபாயுதேவின் க‌தைகூட‌ ம‌ணிர‌த்ன‌த்தின் சொந்த‌க்க‌தையில்லை. ப‌ழ‌ம்பெரும் க‌தாசிரிய‌ர் R.செல்வ‌ராஜிட‌ம் இருந்து வாங்கி த‌ன‌து பெய‌ரையும் அதில் ஒட்டிக்கொண்டார். அதைவிட‌க் கொடுமை என்ன‌வென்றால் அலைபாயுதேவின் இந்திப்ப‌திப்பில் க‌தை: ம‌ணிர‌த்ன‌ம் என்று த‌ன‌து பெய‌ரை ம‌ட்டும் போட்டுக்கொண்டார்.ஒரு ப‌டைப்பாளிக்கு உரிய‌ குறைந்த‌ப‌ட்ச‌ நேர்மை கூட‌ இல்லாத‌வ‌ரை இந்திய‌ சினிமாவின் ச‌ர்வேதேச‌ முக‌ம் எனக்கொண்டாடுவ‌து அப‌த்த‌திலும் அப‌த்த‌ம்.

வவ்வால் said...

Kathai enru yaar peyaraiyum podavillaiya? Enna kodumai!

Rinsil desilva, rangde basant script writer than kathai ezhuthinaram,kadaisiyil etho pinaku vanthu(avar kurban padathil busy aanathal konjam izhuthar)avar peyarai thookkivittathaga news.

பிரபல பதிவர் said...

மொக்க படம் தல!!!!

சுத்த போர்

காலப் பறவை said...

உங்கள் விமர்சனம் சுத்த அபத்தம். கேபிளிடம் இருந்து இப்படி ஒரு விமர்சனத்தை எதிர் பார்க்கவில்லை :)

Unknown said...

cable sir,

Super vimarsanam.....

SENTHILKUMARAN said...

படம் மொக்கை. DVD யில் பார்க்கலாம். தியேட்டர் போக தேவையில்லை

SENTHILKUMARAN said...

படம் மொக்கை. DVD யில் பார்க்கலாம். தியேட்டர் போக தேவையில்லை

Umesh said...

nice review !

Read mine here!
Expecting ur feedback!

Raavanan-Ten heads but no brain!

http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html

Thiruvattar Sindhukumar said...

வாத்யாரே..படம் பார்க்கிறப்ப என்னோட மனசுல என்ன தோணிச்சோ அத நீங்க எழுதிட்டீங்க.. விருப்பு வெறுப்பற்ற நியாயமான விமர்சனம். இந்த விமர்சனத்தைப்படிச்சு அடுத்த படத்திலயாவது மணிரத்னம் தன்னோட சிறு தவறுகளையும் சிறுபிள்ளைத்தனங்களையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

-திருவட்டாறு சிந்துகுமார்

Suriya said...

Your review is very good. A must watch movie in theatre. Keep up the nice postings.

SUPERVISOR said...

தலைவா ! நீங்க ஒரே பக்கமா பேசுறீங்க ... படம் தமிழுக்கு ஒத்து வரலைன்னு நினைக்கிறேன் ... இந்தில எப்புடின்னு தெரியல ...

prem kumar said...

seen by seen camera angle mudhal makeup,varai english padanagalai parthu kappi adipathai manirathnam muthalil indha padathodu vidavendum en enil ipoluthu english padangali ellorum parkirargal

Krishna said...

Nalla Padam visually mattra padi
mani has lost his golden touch long back.
He has abused hinduism by showing lot of things which is not required.
Like the broken vishnu idol, may be for artisic purpose.. but the IDOL looks sad...

Just for a girl he has left, Prithiviraj who is instrumental in killing his brother and also the Policeman who had raped his sister.
There is a big hole and Vikram character hits rock bottom.
What is prabhu and ranjitha doing there.
What is the purpose to say I am ravan I m ravan by vikram repeatedly.
Also ample show of bosom of Ashwarya not at all xpected frm Mani s movie So pathetic

Ramkumar said...

mani sir mudhalla epics la iruundhu kadai edukka koodadhu. Its quite simple logic. A movie can not make you feel interested when you know the story. Screenplay can take you to some extend but again not for a story like this.

The great about mani sirs movie is his small twists, unexpected reaction from a character and so on.. (For eg, alaipayuthe sakthi telling about her marriage before the groom, Velu naikar daughter saying Nazaar about his whereabouts and many such)

I (we) expect a clean, mani sir branded movies with fresh stories like alaipayuthe, kannathil muthamitta and so on...

Sir We are waiting!

Ramkumar