Posts

Showing posts with the label hindi web series

Sare Jahaan Se Acha- Hindi web series

Image
  ஹோமிபாபா கொல்லப்பட, இந்திய ‘ரா” உளவு துறை உருவாக்கப்பட்டு, விஷ்ணு சங்கர் எனும் உளவு துறை அதிகாரி பாகிஸ்தானில் ஹோமி பாபா கொலைக்கு பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்று நம்புகிறார். அதே நேரத்தில் பாகிஸ்தான் ஏதோ ஒரு தீவிர சதியை செய்து கொண்டிருக்கிறது என்று நம்பகமான செய்தி வர, அது நியூக்கிளியர் பாம் தயாரிப்பு என்று தெரிய வருகிறது. அதை எப்படி முறியடித்தார்கள் என்பதை மிக ஸ்டைலான கதை சொல்லலில், எடிட் மூலம் சொல்லியிருக்கிறார்கள். மற்றபடி கதை மாந்தர்களின் கேரக்டர்களின் செயல் பாடு, கதையில் டிவிஸ்ட் என வரும் இடங்களை எல்லாம் தொடர்ந்து ஸ்பை படம், கதை படிப்போருக்கு உள்ளங்கை நெல்லிக் கனி. பாகிஸ்தான் சைட் காட்டும் வில்லன் கேரக்டர் என்று நாம் சொன்னாலும் அவர்கள் சைட் ஹீரோ எப்படி தோற்கிறார் என்பதை காட்டும் போது அவசர அவசரமாய் முடித்த ஃபீலிங். ப்ரதீக் காந்தியின் நடிப்பு சிறப்பு. அதை விட வில்லனாய் வரும் பாகிஸ்தானியர் கேரக்டர் நடித்தவரின் நடிப்பு மிகச் சிறப்பு. ஏனென்றால் அவருக்கு தான் நிறைய எமோஷனல் வேல்யூவுடன் காட்சிகள் இருந்தது. #saarejahanseaccha #Netflix #hindiwebseries2025cablesankar

GHOUL - Web series

Ghoul ஒரு காலத்தில் தமிழில் ஜெய்சங்கர் தொடர்ந்து ஒரே டைரக்டரின் படங்க ளி ல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பார். அந்த படம் வெற்றி தோல்வி பற்றியெல்லாம் கவலைப் படாமல் தொடர்ந்து நடித்துக் கொடுப்பார். அதே போல ஆர்யா தொடர்ந்து விஷ்ணுவர்தனின் படங்களில் நடித்திருப்பார். அது போல ராதிகா ஆப்தே, அனுராக் கஷ்யப்பின் படங்களில் நடிப்பது. குறிப்பாய் நெட்ப்ளிக்ஸில் இவர்கள் படங்கள் வெளியாக ஆரம்பித்தபிறகு மீம்ஸ் போடுமளவுக்கு ராதிகா ஆப்தேவின் ஆக்ரமிப்பு. சமீபத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரிஸில் நடிப்பு மட்டுமில்லாமல் , கதை வசனத்திலும் இவரது பங்களீப்பு இருந்தது. ஒரு புதிய நெட்ப்ளிக்ஸ் படத்தில் ராதிகா ஆப்தேவே எல்லா கேரக்டர்களிலும் நடிப்பது போன்ற ஒரு விளம்பரத்தை ராதிகாவே வெளியிட்டிருந்தார். அது கிண்டலுக்காக வெளியிடப்பட்டது என்று நினைத்தால் நிஜமாகவே அப்படி ஒரு திரைப்படம் வெளியாக இருக்கிறது என்று சொல்கிறார் விக்ரமாதித்ய மோத்வானி. இத்தனை களேபரங்கள், விமர்சனங்களுக்கு நடுவில் ராதிகா ஆப்தே ஒன்றும் திறமையில்லாதவர் இல்லை ஒவ்வொரு  ப்ராஜெக்டிலும் தன் திறமையை நிருபித்துக் கொண்டேதானிருக்கிறார். ஒரு சில இயக்குனர்...

Sacred Games - Web Series

Sacred Games சினிமா அவ்வளவுதான் இனிமே. எல்லாரும் டிவி பார்க்க போயிட்டாங்கனு சொல்லிக் கொண்டிருந்த போதும், சிடி, டிவிடி, டவுன்லோட் காலம் என ஒவ்வொரு ப்ரீயட் வரும் போதும் அவ்வளவுதான் சினிமா என்பார்கள். ஆனால் சினிமா எனும் ராட்ஷனுக்கு அழிவே கிடையாது. எதாவது ஒரு வழியில் மீண்டும் மீண்டும் தன்னை புதுப்பித்துக் கொண்டேயிருப்பவன்.  அது வெளிப்படும் டெக்னாலஜி வேண்டுமானால் மாறுமே தவிர சினிமா மாறுவதேயில்லை. 2010 நான் சினிமா வியாபாரம் புத்தகத்தில் இன்னும் பத்து வருடங்களில் நாம் சினிமாவை வீட்டில் தான் பார்க்கப் போகிறோம், அதுவும் இண்டர்நெட் வழியாய் என்று எழுதியிருந்தேன். அது ஆறு வருடங்களுக்குள்ளேயே நடக்க ஆரம்பித்துவிட்டது. பெரிய திரைகளில் சூப்பர் ஹீரோ படங்களும், வீட்டின் டீவியில் மொக்கை சீரியல்களும் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் வெப் சீரீஸ் எனும் புதிய சீரியல் வடிவம். சினிமாவுக்கு சற்றும் குறையாத வகையில், அதே பிரம்மாண்டத்தோடு விதவிதமான கதைக்களன்களில், மிகச் சிறந்த நடிகர்களோடு, டெக்னீஷியன்களோடும், ஹாலிவுட்டில் களமிறங்க ஆரம்பிக்க. நாமெல்லாம் நெட்ப்ள்க்ஸிலும், அமேசானிலும் ஆவென வாய் பிளந்து பார...