Posts

Showing posts with the label kumudam

கொத்து பரோட்டா 2.0-65

கொத்து பரோட்டா 2.0-65 கந்து வட்டி, காரணமானவர்களை அரஸ்ட் செய் என்று கூக்குரலிட்டு ஏதும் நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி, பிரச்சனைக்குரிய படங்களுக்கு போட்டிருந்த தடை விலகியது. பஞ்சாயத்துக்களின் வீரியம் குறைந்தது. இதனிடையில் விஷால் திடீர் அரசியல் பிரவேசம் திரையுலகினரை கலகலக்க வைத்திருக்கிறது. நடிகர் சங்க தேர்தல், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் என அடுத்தடுத்து ஒவ்வொரு பதவியாய் போட்டியிட்டு பெற்றவர் இப்போது ஆர்.கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எம்.எல்.ஏவுக்காக போட்டியிருகிறார். கமல் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்து மெல்ல ஆழம் பார்த்துக் கொண்டிருக்க, வரும்.. ஆனா வராது என்கிற ரீதியில் போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இன்னும் போர் வரவில்லை என்றெல்லாம் வழக்கம் போல பத்திரிக்கைகளுக்கு தீனி போடும் அறிவிப்புகளை மட்டுமே விட்டுக் கொண்டிருக்கும் ரஜினி இவர்களுக்கிடையே விஷாலின் இந்த திடீர் அரசியல் நுழைவை பலர் ஆதரிக்கவும் பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே விஷாலை பதவி விலக வைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இயக்குனர் சேரன் தலைமையில் தமிழ் திரைப்பட த...

கொத்து பரோட்டா 2.0-57

கொத்து பரோட்டா 2.0-57 டெலிகாலர்களிடமிருந்து வரும் கால்களை மிக மரியாதையாய் ஹேண்டில் செய்பவன் நான். பர்சனலாய் பல இளம் பெண்கள் இத்துறைக்கு வந்து கால் செய்யப்படும் கஸ்டமர்களின் நடவடிக்கைகளினால் படும் கஷ்டங்களை நேரடியாய் பார்த்து, என் தொட்டால் தொடரும் படத்தின் நாயகி கேரக்டரையும் டெலி காலர் கேரக்டருக்கு வடிவமைத்திருந்தேன். ஒரு காலத்தில் டெலி காலர்கள் நன்கு படித்து, மிக நல்ல சம்பளத்திற்கு வேலை செய்த காலமெல்லாம் போய். இன்று எட்டாயிரத்துக்கும் பத்தாயிரத்திற்கும், டார்கெட் கமிஷனுக்குமாய் வேலை செய்யும் நிலை. தினம் டார்கெட். மேனேஜரின் ப்ரெஷர். டெலி காலர் குரலைக் கேட்ட மாத்திரத்தில் கோபப்பட்டு கட் செய்யும் கஸ்டமர்கள். என ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு புறம் கிளுகிளு வேலைகளையும் செய்யும் கஸ்டமர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நல்ல குரல் வளம் என்று பேசிப் பேசி கடலைப் போட்டு, பிக்கப் செய்தவர்கள் பலர். பல சமயம் எனக்கு கால் செய்யும் பெண்கள் பேசி விட்டு, “சார்.. நான் திரும்ப கூப்பிடுறேன் உங்க காலர் டோன் ரொம்ப நல்லாருக்கு. போனை எடுத்திறாதீங்க” என்ற கோரிக்கையோடு நான்கைந்து முறை தொடர்ந்து அடிப்பவர்கள்...

கொத்து பரோட்டா 2.0-55

கொத்து பரோட்டா 2.0-56 ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்ற குழப்பத்துடனே 18 முதல் 28 சதவிகித ஜி.எஸ்.டியை திரையரங்குகள் வசூலித்துக் கொண்டிருந்தாலும், விநியோகஸ்தர்களுக்கு கடந்த சில மாதமாய் தியேட்டர் அதிபர்கள் வசூலை செட்டில் செய்வதில் பல குழப்பங்கள். காரணம் மேற்ச் சொன்ன கேளிக்கை வரி இருக்கிறதா? இல்லையா? என்கிற குழப்பம் காரணம். திடீரென ஆறு மாதத்திற்கு முன் தேதியிலிருந்து பணத்தை கட்டுங்கள் என்ற சட்டம் போட்டுவிட்டால் விநியோகஸ்தர்களிடமிருந்து பணத்தை எப்படி வாங்குவது என்ற பயத்தில் பல தியேட்டர்கள் வசூலான தொகையை கொடுக்காமலேயே இருக்கிறது. இந்த லட்சணத்தில் இப்போது தடாலென தமிழ் சினிமாவிற்கு பத்து சதவிகிதம் வரி மற்ற மொழி படங்களுக்கு 20 சதவிகிதம் வரி என்று அறிவிப்பு மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் முன்பு கேளிக்கை வரி அரசின் நிர்ணையிக்கப்பட்ட 120 ரூபாய்க்குள் இருந்தது. அதாவது 120 ரூபாயில் முப்பது சதவிகித வரியும் சேர்ந்தது. ஆனால் ஜி.எஸ்.டிக்கு பிறகு 120 ரூபாய் அப்படியே திரையர...

கொத்து பரோட்டா 2.0-54

Saheb Bibi Golaam பத்திரிக்கையாளர், எழுத்தாளர், விமர்சகர், இயக்குனர் என பன் முகம் கொண்ட ப்ரீதம் டி. குப்தாவின் இயக்கத்தில் 2016ல் வெளிவந்த வங்காள மொழிப் படம். இவருடய முந்தைய படமான ”பாஞ்ச் அத்யாய்” கமர்ஷியல் வெற்றியையும், விமர்சனகளிடையேவும் மிகுந்த வரவேற்பை பெற்ற ரொமாண்டிக் ஜெனர் படம். இது முற்றிலும் வேறான கதைக்களன். ஜிம்மி, ரிட்டையர்ட் போலீஸ். தற்போதைய தொழில் காண்ட்ரேக்ட் கில்லர். ஜெயா ஒர் குடும்பத்தலைவி. ஆனால் பார்ட் டைம் விபச்சாரி. ஜிகோ டாக்ஸி ட்ரைவர். அவனுக்கு கல்லூரி மாணவியான ரூமிக்கும் காதல். ஜிம்மிக்கு ஒரு  காண்ட்ரேக்ட் வருகிறது. அரசியல்வாதியின் பையனான அவனை பாலோ செய்கிறான். அவனது நடவடிக்கைகளை கண்காணித்து, அவன் தினமும் ஒரு ஃபேமிலி டைப் விபச்சார விடுதிக்கு செல்கிறதை கண்டுபிடிக்கிறான். ஒரு தினத்தை குறித்து அவனை கொல்ல தயாராகிறான். அந்த தினமும் வருகிறது. துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து தனக்கு முதுகு காட்டி நிற்கிறவனை சுடுகிறான். அவனை அணைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் முகம் க்ளோஸப்பிற்கு போக, அவளின் கதை ஓப்பன் ஆகிறது. ஜெயா ஒரு பெண் குழந்தைக்கு தாய். மொனாட்டனியான வாழ்க்கை,...

கொத்து பரோட்டா 2.0-52

கொத்து பரோட்டா 2.0-52 பெஃப்ஸி ஸ்ட்ரைக். தொழிலாளர் பிரச்சனை என்றெல்லாம் பரபரப்பாக தமிழ் சினிமா நிகழ்ந்து கொண்டிருக்க, இதற்கான காரணம் திரைப்பட தயாரிப்பாளர்கள் புதிய ஆட்களை தெரிவு செய்து தனியே ஒரு சங்கத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுதான். புதிய ஆட்களை தெரிவு செய்வது என்பதும், இவர்களுடன் மட்டுமே வேலை செய்ய வேண்டுமென்ற மோனோபாலி மனப்பான்மை இனி வேலைக்காகாது என்பதையும் பெஃப்ஸிக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால் அதே நேரத்தில் இந்த சுதந்திர ஆள் எடுப்பு படலத்தினால் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் உழைப்பு சுரண்டல்கள் அதிகமாகப் போகிறது என்றே தோன்றுகிறது. தொழிலாளர்களுக்கு எல்லாம் ஷூட்டிங் என்று போய்விட்டால் நிச்சயம்  சன்ரைஸ் கால்ஷீட்டில் ஆரம்பித்து, காபி டிபன், பேட்டா, என எல்லாமே கட்டாயம் உண்டு. ஆனால் ஷூட்டிங் நடந்தாலும், சரி நடக்காவிட்டாலும் சரி பேட்டாவோ, சம்பளமோ நிச்சயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையே இல்லாமல் கிடைக்கிற வரைக்கும் லாபம். எப்படியாவது முட்டி மோதி ஒரு படம் பண்ணிரணும்னு துடியாய் உழைக்கிற உதவி இயக்குனர்கள் நிலை தான் பாவம். ஒரு திரைப்பட...

கொத்து பரோட்டா 2.0-24

கொத்து பரோட்டா 2.0-24 தமிழ் சினிமாவும் தமிழ் ராக்கர்ஸும் இணை பிரியாத எதிரிகளாகிவிட்டார்கள் . சிங்கம் படத்தின் துரைசிங்கம் தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிப்பதுதான் சிங்கம் 4 படத்தின் கதை என்று மீம்ஸ் வரும் அளவுக்கு அவர்களின் அட்ராசிட்டி அதிகமாகிவிட்டது . நீ படத்த ரிலீஸ் பண்ணு , நான் காலையில லைவ்வுல போடுறேன் என்று சவால் விடும் அளவிற்கு . சிங்கம் படம் ரிலீஸான நேரத்தில் அவர்களும் லைவில் படம் போட , அதை முடக்க இவர்களின் நடவடிக்கை என பரபரப்பாகவே இருந்தது . பைரஸி நிச்சயமாய் சினிமாவை முடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை . பெரிய படங்கள் என்றில்லாமல் . சின்ன படங்கள் கூட ஹெச் . டியில் பைரஸியில் வெளியாகிறது . பெரும்பாலான சின்னப்படங்களின் பைரஸி , வெளிநாட்டு உரிமைகள் விற்கப்படும் போது , அடியில் கண்ட சொத்துகள் அனைத்தும் என்கிற ரீதிரியில் டிஜிட்டல் உரிமங்களைக் கூட விற்று விடுகிறார்கள் மிகச் சகாய விலைக்கு . நான் இயக்கிய தொட்டால் தொடரும் படத்தினை தயாரிப்பாளர் யாருக்கும் விற்கவில்லை . வெளிநாட்டு உரிமையை அவரே வைத்திருந்தார் . சிங்கப்பூர் , மலேசியாவில் திரையிட்டார் . யாருக்கும் டிஜிட்டல் உரிமையை கொ...