Posts

Showing posts with the label தீ

தீ – திரைவிமர்சனம்

Image
ஒரே மாதத்தில் 30,000 ஹிட்ஸுகளை கொடுத்த, வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நமீதாவை எதிர்பார்த்து போனால் ஆம்பளை நமீதா போல் நிர்வாணமாய் வருகிறார் சுந்தர்.சி. முதல் காட்சியிலேயே அரண்டு போக வைத்து விட்டார்கள். அதற்கு அப்புறம் எப்படி படம் பார்க்கிறது? எதை பார்த்தாலும் மிரட்சியாவே தெரியுது. வழக்கமான விஜயகாந்த பாணி போலீஸ் ரவுடி அரசியல்வாதி பிரச்சனைதான். ஒன்றும் புதுசாய் இல்லையென்றாலும், பிரசண்டேசனிலாவது ப்ரெஷாக கொடுக்க முயற்ச்சித்திருக்கலாம், தெலுங்கு படம் போல சரக், சரக் கென்று எபெக்ட் போட்டு நம்மை பயமுறுத்துகிறார்கள். கட்சி தலைவர் சாயாஜி ஷிண்டே என்கிறார்கள், ஆனால் முதலமைச்சர் வேறு எவரோ.. அவர் கட்சி கெட்ட எம்.எல்.ஏ ஜி.எம்.குமார். இவரகள் இருவரும் சேர்ந்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்களாம்.  இந்த லட்சணத்தில் இவர்களின் கட்சி முக்கிய முடிவுகள் எல்லாவற்றையும் எடுப்பது, பிரபல நடிகை ருச்சிதேவி. அதாங்க நம்ம நமீதாதான். இவங்க எல்லாம் கெட்டவங்களாம், ஆனா முதல்மைச்சர் மட்டும் ரொம்ப நல்லவராம். ஸ்….ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா கண்ணை கட்டுதே.. சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராம், அவர...