Posts

Showing posts with the label சிதம்பரம்

சாப்பாட்டுக்கடை – சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே

Image
சிதம்பரம் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தில்லை நடராஜன். அதை தவிர பெரிதாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளூம் அளவிற்கு ஏதுமிருப்பதாய் எனக்கு தெரியவில்லை. சமீபத்தில் எனக்கு பிடித்தது சிதம்பரம் பைபாஸ் சாலை. வெளிநாட்டு ரோட்டுக்கு இணையாய் அற்புதமாய் அமைத்திருக்கும் சாலை. சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் நண்பனின் திருமணத்திற்காக சிதம்பரத்தை கிராஸ் செய்யும் போது நண்பர்களின் ரெகமண்டேஷனால் அறியப்பட்ட கடை முர்த்தி கஃபே. அங்கே மிகப் பிரபலமான டிஷ் என்னவென்றால் பரோட்டாவும், பட்டர் சிக்கனும். கூடவே முட்டை சட்னி என்றொரு அயிட்டம்.  நான் அப்போது போன போது விஜிபி சாலை என்று நினைக்கிறேன் அதன் முனையில் அந்தக்கடை இருந்தது. ஊருக்குள் நுழைந்தவுடன் யாரைக் கேட்டாலும் சொல்வார்கள். நாங்கள் அப்படித்தான் அங்கே டிராபிக் ஒழுங்கு செய்து கொண்டிருந்த கருத்த அழகிய கான்ஸ்டபிளிடம் விசாரித்தோம்.