Posts

Showing posts with the label 24 சலனங்களின் எண்

24 சலனங்களின் எண். விமர்சனம் -9

Image
 24 சலனங்களின் எண் நாவல் குறித்து இயக்குனர் வசந்தபாலனின் பேச்சு.

24 சலனங்களின் எண்.விமர்சனம்-10

Image
  பு(து)த்தகம் - 24 - சலனங்களின் எண் ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும் இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர். ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது. நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில். ஒரு திரைப்படம் உ...

24 சலனங்களின் எண்- விமர்சனம் -9

Image
  நன்றி கமலக்கண்ணன். 24 salanangalin enn kindle link: https://amzn.to/3gpEOAj 24 Salanangalin Enn Book Link: https://amzn.to/36MqX3Y

24 சலனங்களின் எண். விமர்சனம்-8

Image
  சினிமா உலகின் பிண்ணனியில் நடக்கும் நாவல். சமகால சினிமாவைப் பற்றிய மிக முக்கியமான ஆவணம் என சொல்லலாம். சினிமா உலகில் இருக்கும் போட்டிகள், துரோகங்கள், வன்மம், வெற்றிக்காக படும் அவமானங்கள், இழப்புக்கள் எல்லாவற்றையும் ரத்தமும் சதையுமாக, ஆழமாக எழுதியிருக்கிறார் கேபிள் அண்ணன். அவருடைய பரந்த அனுபவமும் இதற்கு முக்கிய காரணம். அதே நேரம் - இவை அனைத்தையும் மீறி இங்கிருக்கும் நட்பு, உழைப்பு, நல்ல மனிதர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். சினிமாவில் புதிதாக நுழையும் உதவி இயக்குனர்கள், நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல். நிறைய புரிதல்களை கொடுக்கும். நன்றி இயக்குனர் ஸ்ரீகணேஷ்.

24 சலனங்களின் எண். விமர்சனம் -6

Image
  24 சலனங்களின் எண் விமர்சனம் #6 நண்பர் கேபிள் ஷங்கர் எழுதிய 24 சலனத்தின் எண் என்ற திரைத்துறை சார்ந்த நாவல். திரைக்கடலில் நீச்சல் அடிக்க துடிக்கும் அனைவரும் படிக்க வேண்டும். இரு தயாரிப்பாளர் இரு நாயகர் இரு நாயகியர் ஒரே ஒரு ஆபீஸ் பாய் என அனைவரும் இந்த தேரை இழுத்துச் செல்கின்றனர். திரை துறை சார்ந்த நண்பர்கள் படித்தால் அவர்கள் சந்தித்த நபர்கள் போலவே இருக்கும். எனக்கும் அப்படியே... சில இடங்களில் அசைவ வரிகள் தவிர்த்து இருக்கலாம் கேபிள் சங்கர். .கணவன் கனவை பூர்த்தி செய்ய நின்ற படத்தை முடிக்கும் திருமதி மணி அவரை மதிக்கிறேன்.அவ்வப்போது அபயக்குரல் தரும் ஆபிஸ் பாயை நேசிக்கிறேன்.சினிமாவைத்தேடுவோர்க்கு இது சிறந்த கூகுள் மேப்..இந்த நாவலை கம்பி மத்தாப்பு போல் ஜாக்கிரதையாக கொளுத்தி உள்ளார். அடுத்த நாவல் லஷ்மி வெடியாய் வெடிக்க வாழ்த்துக்கள். நன்றி இயக்குனர், எழுத்தாளர் நடிகர் E Ramdoss

24 சலனங்களின் எண். விமர்சனம்-5

Image
 எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் விமர்சனம் # 24 சலனங்களில் எண் # கேபிள் சங்கர் எழுதிய '24 சலனங்களின் எண்' சினிமாத் துறை குறித்த பல நுணுக்கமான தகவல்களைக் கொண்டிருக்கிறது. இரண்டு படங்கள் உருவாகின்றன. பல படங்களில் அசோசியேட்டாக அனுபவம் வாய்ந்த ஒருவரும் வளர்ந்து வரும் இயக்குநர் ஒருவரும் ஒரே நாயகனை வைத்துப் படம் தொடங்குகிறார்கள். அந்த இரு படங்களின் தயாரிப்பும் வெளியீடும்தான் நாவல். தனது துறை சார்ந்த நாவல் என்பதால் நாவலாசிரியருக்குப் பல சம்பவங்களைத் துல்லியமாக எழுத வாய்த்திருக்கிறது. அவரே நேரில் பார்த்த உணர்ந்த பல விஷயங்களைத்தான் நூலில் எழுதியிருக்கிறார். துறை சார்ந்த சிலரிடம் சமீப காலங்களில் பரிச்சயம் இருப்பதால் என்னாலும் பல இடங்களைப் பொருத்திப் பார்க்க முடிந்தது. தமிழ் சினிமா உருவாகும் விதமானது கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் பெரிதும் மாறியிருக்கிறது. இதற்கு முன்பிருந்த புத்தகங்கள் ஸ்டுடியோக்கள், தயாரிப்பு நிறுவனங்கள் கோலோச்சிய காலகட்டத்தின் தமிழ் சினிமாவைப் பற்றிப் பேசுபவையாக இருக்கலாம். ஆனால் தற்காலத் தமிழ்த் திரையுலகைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. ஒரு சினிமா உருவாக 24 கலைகள் ஒன்...