Thottal Thodarum

Apr 23, 2021

24 சலனங்களின் எண்.விமர்சனம்-10



 பு(து)த்தகம் -

24 - சலனங்களின் எண்
ஒரு சினிமா என்பது இரண்டரை மணி நேரம் மட்டும் தான்.ஆனால் அதை சரியான திட்டமிடலுடன் பலரது உழைப்பின் காரணமாக 35 நாட்களுக்குள் எடுப்பவர்களும்
இருக்கிறார்கள்.மூன்று வருடத்தில் எடுப்பவர்களும் இருக்கிறார்கள். படத்தினை முடிக்க முடியாமல் திரைக்கே கொண்டு வராதவர்களும் இருக்கிறார்கள்.திரைக்கு வந்த படத்தினை மட்டும் நாம் சிலாகிக்கின்றோம்.திரைக்கு பின்னால் இந்த திரைப்படம் எப்படியெல்லாம் உருவாக்கம் பட்டிருக்கும் என்று நினைப்பது இல்லை.இந்த நாவல் அதைத்தான் சொல்லுகிறது. திரையுலகின் கறுப்பு பக்கத்தினை தெளிவாய் சொல்லி இருக்கிறார் நாவலாசிரியர்.ஒரு திரைப்படம் என்னென்ன இடர்களால் பாதிக்கப்படுகிறது என்பதை திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.அதை அப்பட்டமாய் உரித்திருக்கிறார் ஆசிரியர்.

ஸ்ரீதர், ராம். சுரேந்திரன், நித்யா, பிரேமி, திருப்பூர் மணி, ராம்ராஜ் என ஒவ்வொரு பாத்திர படைப்புகளும் அருமை. ஒவ்வொரு கேரக்டர்களும் ஒரு விதம். விறுவிறுப்பாக நாவலை முழுதும் ரசிக்க வைக்கிறது. நட்பு, காதல், காமம், துரோகம் என எல்லாமும் நிறைந்திருக்கிறது இந்த நாவலில். ஒரு திரைப்படம் உருவாக எத்தனையோ பேர் உழைப்பு காரணமாகிறது.கஷ்டபட்டு உருவாக்கிய திரைப்படம் திரைக்கு வராமலே முடங்குவதால் எத்தனையோ பேரின் உழைப்பும் திறமையும் வீணாகி போய்விடுகிறது.அதை விரிவாய் நாவலில் விறுவிறுப்புடன் படிக்க சுவாரஸ்யத்துடன் எழுதி இருக்கிறார். இந்த நாவலில் வரும் இயக்குநர் ராம்ராஜ் அத்தியாயங்கள் ஒரு விக்ரமன் படம் பார்த்தது போல் இருக்கிறது. அவ்வளவு அருமை.சோக காட்சிகள் வந்தால் எப்படி தொண்டையை துக்கம் கவ்வுமே, அது மாதிரி அவரது அத்தியாயங்கள்.கடைசி கிளைமாக்ஸில் ஒரு திரைப்படம் பார்த்த விளைவு.

படிக்க படிக்க செம இண்ட்ரஸ்டிங்கான நாவல்.திரையுலகில் திரைக்கு பின்னால்
நடக்கும் சம்பவங்களை ஒளிவுமறைவின்றி சொல்லி இருக்கிறார் நாவலின் இயக்குநர்.இந்த நாவலில் ஒரே ஒரு குறைதான்.நாவல் முழுக்க விரவிக்கிடக்கும் வாக்கிய எழுத்துப் பிழைதான்.தமிழை தப்பாகவே எழுதி இருந்தாலும் படித்துவிடக்கூடிய நிலையில் இருந்தாலும், எழுத்துப்பிழை இருப்பதால் கவனம் சிதறுகிறது. அதையும் தாண்டி இந்த நாவல் படிக்க படிக்க நன்றாகவே இருக்கிறது.
இந்நாவலை படித்து முடிக்கையில் வெள்ளித்திரை படம் கண்ணுக்கு முன்னால் வந்து செல்கிறது. வாழ்த்துக்கள் கேபிள் சங்கர்.
நன்றி கோவை நேரம்.

Post a Comment

No comments: