Posts

Showing posts with the label பிரியாணி

சாப்பாட்டுக்கடை - குடைக்கடை பிரியாணி -கே.கே.நகர்

Image
நண்பர் நல்ல பிரியாணி மாஸ்டர். நிறைய முறை அவர் வேலை செய்த ஓட்டலில் இருந்து பிரியாணி கொண்டு வந்து கொடுத்திருக்கிறார். நன்றாகவே இருக்கும். இவரின் முதல் அறிமுகமே இன்னொரு நண்பர் கடலூரில் ஆரம்பித்திருந்த பிரியாணி கடையில் மாஸ்டராய்த்தான். பின்பு பல வருடங்களுக்கு பிறகு தற்போது சொந்தமாய் பிரியாணிக்கடை போடப் போவதாகவும், அதுவும் மொபைல் கடையாய் போடப் போவதாய் சொல்லியிருந்தார். சொன்னது போலவே அமாவாசை அன்று கே.கே. நகர், பிரபா ஒயின்ஸுக்கு எதிரே உள்ள ப்ளாட்பாரத்தில் டி.வி.எஸ்.50யில், குடையோடு ஒரு பிரியாணி கடை அமைத்திருந்தார்.  நல்ல தரமான அரிசியில், நன்கு வெந்த சிக்கன் பீசுகளோடு பிரியாணி மணமாய் இருந்தது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குவாலிட்டி கண்ட்ரோல் செக் செய்து தர நிர்ணையம் கொடுத்துவிட்டேன். நல்ல தரமான சிக்கன் பிரியாணி வேண்டும் என்கிறவர்கள் நிச்சயம் ஒர் ட்ரை செய்ய வேண்டிய இடம்.  வழக்கமாய் கையேந்தி பவன் ஓட்டல்களில் குறித்தும் விலை குறைவான பிரியாணி என்றாலே காக்கா பிரியாணியாக இருக்குமோ என்கிற பொதுபுத்தி பயத்தை வேறு மீடியாக்கள் கிளப்பிவிட்டிருக்க, இந்த மொபைல் கடை அந்த நம்பத்தன...

சாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.

Image
இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று ஒரு தெருவுக்கு ரெண்டு பிரியாணி கடைகளாவது இருக்கிறது. எல்லாக் கடைகளிலுமே கிடைப்பது வழக்கமான பாஸ்மதி முஸ்லிம் பிரியாணி மட்டுமே.  பிரியாணிக்கென ப்ராண்டாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிறுவனமான ஆசிப் பிரியாணி போன்றோர்கள் தக்காளி சாதத்தை பிரியாணி என்று விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நம்மூர் ஸ்டைலில், மணக்கும் சீரக சம்பா அரிசியில், மணக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமே தருகிறது வெங்கீஸ் பிரியாணி. அதிக காரமில்லாமல், நன்கு வேகவைக்கப்பட்ட துண்டுகளோடு, உதிர் உதிராய் சமைக்கப்பட்ட சீரக சம்பா அரிசி. நெய், மசாலாவோடும், நல்ல தால்சாவுடனும் பட்டையை கிளப்புகிறது. இவர்களது பிரியாணி. கருப்பையா மூப்பனார் பாலத்துக்கு அருகே ஒர் ப்ராஞ்சும், வடபழனி அம்பிகா எம்பயர் பக்கத்தில் ஒரு ப்ராஞ்சும் செயல் படுகிறது. வடபழனியில் இரவு 11 மணி வரை பிரியாணி கிடைக்கும். பிரியாணியோடு கொடுக்கப்படும் தால்சாவும் நல்ல சுவை.  மணக்கும் சீரக சம...

கொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறைகள் - பிரியாணி - என்றென்றும் புன்னகை - Dhoom 3

Image
தலைமுறைகள் மூத்த கலைஞர் பாலு மகேந்திராவின் புதிய படைப்பு. இது நாள் வரை ஃபிலிமில் படமெடுத்துக் கொண்டிருந்தவர் கால மாற்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு டிஜிட்டலில் களமிறங்கியிருக்கிறார். புதிய பரிமாணமாய் நடிப்பு. ஒளிப்பதிவில் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் புதிய டெக்னாலஜியில் அவனவன் செல் போன் கேமராவில் எல்லாம் படமெடுத்துவிட்டு, அதை சினிமாஸ்கோபாக மாற்றி திரையெங்கும் க்ரெயின்ஸோடு வெளியிடும் வேளையில், இயல்பான வெளிச்சத்தில் சும்மா நச்சென “35 எம்.எம்”மில் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் ப்ரேம்களோடு படமாக்கியிருக்கிறார். இருந்தாலும் வீடியோ ஃபீலை மறைக்க முடியாததன் காரணம் டெக்னாலஜியா? அல்லது படத்தின் கதையா என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை. இளையராஜா தன் பழைய ஆர்கேவிலிருந்து நாலைந்து விஷயங்களை எடுத்து விட்டிருக்கிறார். இதை ஒரு அழகிய குறும்படமாய் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். @@@@@@@@@@@@@@@@@@@@

சாப்பாட்டுக்கடை

Image
எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. சமீபகாலமாய் ஷூட்டிங்கிலேயே நம்ம சாப்பாட்டுக்கடை முடிந்துவிடுவதாலும், புதியதாய் எங்கேயும் போகாததினாலும். அப்படியே போனாலும் பெரிதாய் என் நாக்கின் சுவையை நாளங்களை சுருதி மீட்டாததாலும் எழுதவில்லை. கொஞ்ச காலம்  முன்பு பெரம்பூரில் செம்பியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகும் ரோட்டில் சர்சுக்கு எதிர்திசையில் ஹைதராபாத் பிரியாணி செண்டர் ஒன்று இருக்கிறது. அதை தாண்டும் போதெல்லாம் என் நாசியில் அந்த பிரியாணியின் மனம் ‘ஜிவ்’வென ஏறும். ஆனால்  எப்போது போனாலும் நல்ல கூட்டமிருக்கும். ஒரு பழைய கட்டிடத்தை அங்கே இங்கே நகாசு செய்யப்பட்ட கடை. ப்ளாஸ்டிங் மோல்டட் ப்ளேட்டுகளில் பிரியாணி சர்வ் செய்கிறார்கள். நல்ல குவாலிட்டியும், குவாண்டிட்டியும் இருக்கிறது. பிரியாணி மட்டுமில்லாமல் சைனீஸ், தந்தூரி, செட்டிநாடு என்றெல்லாம் மெனுகார்டில் போட்டிருந்தாலும் பிரியாணியை தவிர வேறெதையும் மக்கள் சாப்பிட்டதை பார்க்க முடியவில்லை. நல்ல பாஸ்மதி ரைஸில் செய்யப்பட்ட பிரியாணி. பட் ஸ்பைஸி. கூட தனியாய் ஆர்டர் செய்த சிக்கன் 65ஐ கொஞ்சம் தீய்த்து கொடுத்தார்கள். சொன்னவுடன் இல்ல சார் நல்லாத்தானிருக்கு என்...

ஹைதராபாதி பிரியாணியும், பதிவர் சந்திப்பும்..

Image
கடந்த முறை ஹைதராபாத் சென்ற போது வேலை பிஸியாய் இருந்ததால் லஞ்ச் டைம் தாண்டி சாப்பாடுக்காக அலைந்த போது திடீரென்று பிரியாணி ஞாபகம் வர, உடனிருந்த நண்பர் ஹைதராபாத்தில் இரண்டு மூன்று இடங்களை சொன்னார். பாரடைஸ், பாவார்சி, ஹைதராபாதி பிரியாணி, என்று பல இடங்களை சொன்ன்னார். எனக்கிருந்த பசியில் அவ்வளவு தூரம் போக முடியாது என்று சொல்லி இங்கேயே செகந்தராபத்தில் நல்ல கடை இல்லையா..? என்றதும் ஸ்டேஷன் எதிரில் உள்ள ஓரு கடைக்கு அழைத்து போன போது மணி நாலு இருக்கும். கடையின் பெயர் மறந்துவிட்டது. நானும் என் நண்பரும் ஆளுக்கொரு பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்தோம். ஓரு பெரிய பவுல் நிறைய வந்த பிரியாணியின் விலை 90 ரூபாய்தான். நான் இதுவரை இதுமாதிரியான சுவையான பிரியாணி சுவைத்ததேயில்லை. அதிலும் அந்த பிரியாணி அரிசியும், அந்த மசாலா கலவைகளும், எண்னையில்லாமல் சும்ம்மா சூப்பரப்பு..என் பக்கத்து டேபிளிலில் நாகேஷ் மாதிரி இருந்த ஓருவர் பக்கதில் ஓரு தம்ஸ் அப் வைத்து கொண்டு முழு ப்ளேட்டையும் காலி செய்தார். அவர் மாதிரி நாமும் செய்வோம் என்று தம்ஸ் அப்பை ஓரே அப்பில் குடித்ததில் வயிரு நிறம்பியதுதான் மிச்சம்.அப்புறம் தான் பார...