Thottal Thodarum

Jul 17, 2018

சாப்பாட்டுக்கடை - வெங்கீஸ் பிரியாணி.

இருபது வருடங்களுக்கு முன்னால் பிரியாணி கடை என்பது பெரும் பாலும் மிலிட்டரி ஓட்டல்களிலோ, அல்லது மல்ட்டி க்யூசெயின் ரெஸ்டாரண்ட்களிலோ மட்டுமே கிடைக்கும். இன்று ஒரு தெருவுக்கு ரெண்டு பிரியாணி கடைகளாவது இருக்கிறது. எல்லாக் கடைகளிலுமே கிடைப்பது வழக்கமான பாஸ்மதி முஸ்லிம் பிரியாணி மட்டுமே. 

பிரியாணிக்கென ப்ராண்டாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நிறுவனமான ஆசிப் பிரியாணி போன்றோர்கள் தக்காளி சாதத்தை பிரியாணி என்று விற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், நம்மூர் ஸ்டைலில், மணக்கும் சீரக சம்பா அரிசியில், மணக்கும் மட்டன், சிக்கன் பிரியாணி மட்டுமே தருகிறது வெங்கீஸ் பிரியாணி.


அதிக காரமில்லாமல், நன்கு வேகவைக்கப்பட்ட துண்டுகளோடு, உதிர் உதிராய் சமைக்கப்பட்ட சீரக சம்பா அரிசி. நெய், மசாலாவோடும், நல்ல தால்சாவுடனும் பட்டையை கிளப்புகிறது. இவர்களது பிரியாணி.

கருப்பையா மூப்பனார் பாலத்துக்கு அருகே ஒர் ப்ராஞ்சும், வடபழனி அம்பிகா எம்பயர் பக்கத்தில் ஒரு ப்ராஞ்சும் செயல் படுகிறது. வடபழனியில் இரவு 11 மணி வரை பிரியாணி கிடைக்கும். பிரியாணியோடு கொடுக்கப்படும் தால்சாவும் நல்ல சுவை. 

மணக்கும் சீரக சம்பா மட்டன், சிக்கன் பிரியாணிக்காக தலைப்பாக்கட்டிக்கும் ஜூனியர் குப்பாண்ணாவுக்கும் படையெடுத்து, மொக்கை வாங்கி, பெரிய பில்லை கொடுத்து நொந்து போயிருக்கும் பிரியாணி ரசிகர்களுக்கு இது ஒர் விருந்து.  முயன்று பாருங்கள்.


Post a Comment

No comments: