Posts

Showing posts with the label தமிழுக்கு எண்1ஐ அழுத்தவும்

கொத்து பரோட்டா - 23/02/15

எப்பவுமே நம்ம ஊர் ஆளுங்க எதையாச்சும் ஆரம்பிச்சாத்தான் பேரணி, ஊரணியெல்லாம் நடத்துவாங்க. வெளியூர்காரன் முக்கியமா வடநாட்டுக்காரன் ஆரம்பிச்சா சேட்டு கம்பெனின்னு வாயை மூடிட்டு போயிருவான். ஏன்னா பணத்தால அடிச்சிருவான் என கார்பரேட் கம்பெனிகளின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தினாலும், சென்னையின் இம்சையான ஆட்டோ மீட்டர் கட்டணத்தைப் பொறுத்தவரை, அட்ராசிட்டியாய் மாற்றியமைத்த பெருமை ஓலாவையே சேரும். இன்றைய போட்டி உலகில் பாஸ்ட்ட்ராக் போன்றோருக்கு  சிம்ம சொப்பனமாய் மாறி இருக்கும் இந்நிறுவனம், தற்போது ஆட்டோ சேவைகளையும் மீட்டர் காசுக்கு மேல் பத்து ரூபாய். அதுவும், நாம் இருக்கும் இடத்தில் வந்து பிக்கப் செய்து கொள்ளும் வசதிக்காகவே கன்வீனியன்ஸ் சார்ஜாக வாங்கிக் கொள்கிறார்கள். கார் போல ஆட்டோ இன்னும் மக்களுக்கு பழகவில்லை என்றாலும், இன்றைய தேதிக்கு மொபைல் ஆஃப்பில் பார்க்கும் போது எப்போதும் பத்திருபது ஆட்டோகள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் ஆட்டோக்கள் இருப்பதில்லை என்ற குறையைத் தவிர, பெரியதாய் குற்றம் குறையில்லை என்னளவில். நான்கைந்து முறை பயணித்திருக்கிறேன்.ஓலாவினால் வந்த ஒர் பெரிய நன்மை எ...