சாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி.
பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கடை மூடப்படுகிறது. இத்தனை பிரியாணிக்கடைகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தான் நல்ல பிரியாணிகடைகள் இருக்கிறது. என்னதான் சிக்கன், சிக்கன் 65, எறா, பிஷ், என பிரியாணி வகைகள் நிறைய வந்திருந்தாலும், என்னை பொறுத்தவரை பிரியாணி என்றால் அது மட்டன் பிரியாணிதான். சீரகசம்பா ஒரு வகையான சுவை என்றால் நல்ல பாஸுமதி ரைசின் சுவை வேற லெவல். அப்படி சமீபதத்தில் நான் சாப்பிட்ட நல்ல பிரியாணியைப் பற்றித்தான் இங்கே சொல்லப் போகிறேன். சென்னை கோடம்பாக்கத்தில் ரஹமாஸ் பிரியாணி என்று போர்ட்டை பார்த்து பல முறை கடந்து போயிருக்கிறேன். அக்கடை பற்றி பல முறை நண்பர்கள் சொல்ல கேட்டும் சாப்பிட வாய்க்கவில்லை. போன வாரம் பார்சலில் வந்தது ரஹமாஸ் பிரியாணி. பெட்டியை திறந்தவுடன் கிடைத்த ஆரோமாவை சொல்வதா?. காரம், மணம் குணத்தோடு, நன்கு வெந்த மசாலாவில் தோய்ந்த மட்டனை சொல்வதா?. பல சமயங்களில் பிரியாணியை தால்சாவ...