சாப்பாட்டுக்கடை- ரஹமாஸ் பிரியாணி.

பிரியாணியை கண்டுபிடித்தவர்களை விட நமக்கு பிரியாணி ஒர் எமோஷன் என்பதை மறுக்க முடியாது. அதனால் தான் சென்னையில் உள்ள அத்தனை தெருக்களிலும் ரெண்டு பிரியாணி கடை திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு பிரியாணிக்கடை  மூடப்படுகிறது. இத்தனை பிரியாணிக்கடைகள் இருந்தாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தான் நல்ல பிரியாணிகடைகள் இருக்கிறது. 

என்னதான் சிக்கன், சிக்கன் 65, எறா, பிஷ், என பிரியாணி வகைகள் நிறைய வந்திருந்தாலும், என்னை பொறுத்தவரை பிரியாணி என்றால் அது மட்டன் பிரியாணிதான். சீரகசம்பா ஒரு வகையான சுவை என்றால் நல்ல பாஸுமதி ரைசின் சுவை வேற லெவல். அப்படி சமீபதத்தில் நான் சாப்பிட்ட நல்ல பிரியாணியைப் பற்றித்தான் இங்கே சொல்லப் போகிறேன். 

சென்னை கோடம்பாக்கத்தில் ரஹமாஸ் பிரியாணி என்று போர்ட்டை பார்த்து பல முறை கடந்து போயிருக்கிறேன். அக்கடை பற்றி பல முறை நண்பர்கள் சொல்ல கேட்டும் சாப்பிட வாய்க்கவில்லை. போன வாரம் பார்சலில் வந்தது ரஹமாஸ் பிரியாணி. பெட்டியை திறந்தவுடன் கிடைத்த ஆரோமாவை சொல்வதா?. காரம், மணம் குணத்தோடு, நன்கு வெந்த மசாலாவில் தோய்ந்த மட்டனை சொல்வதா?. பல சமயங்களில் பிரியாணியை தால்சாவோடோ, அல்லது தயிர் வெங்காயம் இல்லாமல் சாப்பிட முடியாத வகையில் இருக்கும். ஆனால் இவர்களின் பிரியாணியை அதில் இருக்கும் கறியை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு முழு பிரியாணியை சாப்பிட முடியும். அத்தனை ஜூஸி, அண்ட் டேஸ்டி. இவர்கள் கொடுக்கும் கத்திரிக்காய் எண்ணைய் தொக்கை சாப்பிடாமல் வராதீர்கள். அத்தனை அட்டகாசம். கூடவே தால்சாவும் தருகிறார்கள். எனக்கு தால்ச்சா அத்தனை உசிதமாக ஐயிட்டம் அல்ல. அதனால் நோ ரெக்கமெண்டேஷன். 



கூடவே மரக்காயர் நெய் சோறு, மட்டன், சிக்கன் வறுத்தகறி, கிரேவி, ஒரு அட்டகாசமான தக்காளி சாஸ்  போன்ற ஸ்வீட் தருகிறார்கள். அதை நெய்ச்சோற்றோடு கலந்து சாப்பிட்டால் வேறு ஒரு விதமான சுவை. 

மட்டன் பிரியாணி ரூ.199, நெய் சோறு பேக்கேஜ் ரு.170, பரோட்டா வித் சால்னா செட் ரூ.32. அட்டகாசமான, ஒர் டிவைன் மட்டன் பிரியாணி வேண்டுவோர் உடன் செல்லவும் ரஹமாஸ் பிரியாணி. டோண்ட் மிஸ்

ரஹமாஸ் பிரியாணி.
101, 4th Ave, Sarvamangala Colony, 
Dr.Subbaraya Nagar, 
Ashok Nagar, 
Chennai, Tamil Nadu 600083

Comments

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.