Posts

Showing posts with the label ஜெயா

செய்திகளை முந்தி தருவது ...சன், ராஜ், ஜெயாவா..?

Image
ராத்திரி சுமார் 11 மணி இருக்கும் இணையத்தில் உலாவி கொண்டிருந்தபோதுதான் தெரிய வந்தது. மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதல் பற்றி ஓருவர் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததும் உடனடியாய் நான் பழக்க தோஷ்த்தில் நம் தமிழ் செய்தி சேனல்களை பார்க்க ஆரம்பிக்க, சன்நியூஸ், ஜெயா, என்று எவ்ருமே தங்களுடய சேனல்களில் செய்திகளை அப்டேட் செய்யவில்லை. சாயங்காலம் தங்களது மெயின் சேனல்களில் மழை, புயல், தங்கள் சார்பு, ம்ற்றும் எதிர்ப்பு செய்திகள் என்று ஏற்கனவே காட்டபட்ட விஷயங்களையே திரும்ப, திரும்ப காட்டி கொண்டிருந்தார்கள். ஆனால் ஆங்கில, இந்தி செய்தி சேனல்கள் எல்லாமே பரபரப்பாய் சுடசுட செய்திகளை ‘நேரலை’யாய் தந்து கொண்டிருந்தார்கள். மும்பையின் சத்ரபதி சிவாஜி நிலையம், தாஜ் கொலாபா, ட்ரைடண்ட், காமா மருத்துவமனை என ஒரே சமயத்தில் தாக்குதல் தொடுத்திருக்கின்றனர், தீவிரவாதிகள். தாக்குதலின் தீவிரம் அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட ஓரு போர் நடப்பதை போன்றிருக்கிறது. நம் செய்தி சேனல்கள் இதை பற்றி சற்றும் கவலைபடாமல் இருந்தது அதிர்ச்சியையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. ஏன் ஓரு 12 மணிவாக்கில் டிவி9 என்கிற் தெலுங்கு செய்தி சே...