Posts

Showing posts with the label Hindi film review

Forbidden Love - anthology stories from zee5

Image
நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது.  அனாமிகா பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர்.  ரூல்ஸ் ஆப் கேம்ஸ் பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவ...

Atkan Chatkan - Film Review

Image
  ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க. 1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட் 2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட் 3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட் 4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு. எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர...

Article 15

Article 15 ஆயுஷ்மான் குரானா. இந்தி திரையுலகில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஹீரோ. அதற்கு காரணம் இவர் தெரிந்தெடுக்கும் கதைகள். இவரது முதல் படமே கொஞ்சம் களேபரமான கதைக்களம் கொண்டதுதான். விந்து தானம் செய்கிறவரின் கதை. அதில் ஆரம்பித்து தொடர் வெற்றியில் இருக்கிற ஒர் நம்பிக்கைக்குறிய நாயகனாய் நான்கு ஹிட்டுக்கு பிறகு வரும் படம். இந்த ஆர்டிக்கள் 15. ஜாதியை வைத்து பாகுபாடு காட்டி ஒதுக்கி வைப்பது இந்திய அரசியல் அமைப்பின் படி குற்றம் என்றாலும் நம் நாட்டில் ஜாதி எப்படி புரையோடியிருக்கிறது என்பதை 2014ல் பதூனில் நடந்த கற்பழிப்பு வழக்கை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட மிகவும் தைரியமாய் சொல்லப்பட்டிருக்கும் கதை. மூன்று ரூபாய் கூலி அதிகம் கேட்டு போராட்டம் செய்ததற்காக இளம் பெண்கள் மூன்று பேர் கேங் ரேப் செய்யப்பட்டு அதில் இரண்டு பேர் கொல்லப்படுகிறார்கள். இன்னொரு பெண்ணை காணவில்லை. அவர்களை ஆணவக்கொலை செய்து தூக்கிலிட்டதாய் கேஸை ஜோடித்து அவர்களது பெற்றோர்கள் மீது கேஸ் போட்டு முடிக்க பார்க்கிறார்கள். லண்டனின் படித்த அப்பாவின் ஆசைக்காக இந்தியாவில் பணி செய்ய வந்து டெல்லியில் நோ சொன்னதினால் இந்த கிராமத்துக்க...

Manmarziyan

Manmarziyan சுவாரஸ்யமான கதைகள் என்று பார்த்தால் அது மனித உறவுகளிடையே ஏற்படும் புரிதல் சார்ந்த பிரச்சனைகள் தான் என்பேன். உறவுகளிடையே இருக்கும் முரண் தான் மிக சுவாரஸ்யம். அந்த வகையில் முன் காலத்தில் எல்லாம் நிறைய படங்கள் அம்மாதிரியான கதைக்களன்களை சார்ந்து வந்து கொண்டிருந்தது. இப்போது உறவுகள் சார்ந்த கதைகள் வராமல் இல்லை. அவையனைத்தும் இளைஞர்கள் சார்ந்த கதைக் களன்களாய் இருப்பதால், நெகிழ்ச்சிக்கோ, காதலைத் தவிர உணர்வு பூர்வமான விஷயங்களுக்கோ முக்யத்துவம் இல்லாமல் வந்து கொண்டுதானிருக்கிறது. அப்படியான இளைஞர்களின் வாழ்க்கை, காதல் கல்யாணம் சார்ந்த நெகிழ்ச்சியுட்டும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்கவை நெஞ்சத்தை கிள்ளாதே. பின்நாளில் மணிரத்னம் மெளனராகம் படம் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருப்பதற்கான காரணம் காதலும், அது பின் சார்ந்த உளவியம் குழப்பங்களும், அதனால் தற்காலத்தில் ஏற்படும் திருமண பந்த பிரச்சனைகளும் தான். கொஞ்சம் சென்சிபிளாக படமெடுக்க வேண்டி நினைக்கிறவர்கள் ஜாக்கிரதையாய் தொடுவார்கள். அப்படியான படங்கள் மிக சிலவே வெற்றி பெற்றிருக்கிறது. கொஞ்சம் காலமாய் டார்க் படங்களிலிருந்து விலகி, சீர...

Badrinath ki dulhania - Silent Review

Image

கொத்து பரோட்டா 2.0 -2

Jio ஊரெங்கும் ஜியோவின் பேச்சாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதுரங்க வேட்டை படத்தில் வரும் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டணும்” என்கிற விநோத்தின் வசனம். நான் இந்த பரபரப்புக்கு எல்லாம் முன்னாடியே ஜியோ போனை ரெபரல் ஸ்கீமில் வாங்கிவிட்டேன். மூன்று மாதம் எல்லாமே விலையில்லை என்பதாலும்,  அப்படி என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வமும் காரணம். ஆச்சர்யப்படுத்தியது  இண்டெர்நெட் தான் ஸ்பீட்நெட்டில் செக் செய்தால் போனை விட்டெல்லாம் முள் ஏறக்குறைய 50 எம்.பி.பிஎஸ் காட்டியது. கூப்பிட்டு பேசியவர் குரலெல்லாம் சும்மா கணீரென்ற ஹெச்.டி தரத்தில். ஜியோ டூ ஜியோ வாடிக்கையளர்கள் எல்லாம் வீடியோ காலைத் தவிர வேறேதும் பயன்படுத்துவதே இல்லை. ஒரு கட்டத்தில் இந்த அழுக்குணி மூச்சிகளை என்ன டேஷுக்கு பார்ப்பது என்று யாரும் வீடியோ காலை பயன்படுத்துவதில்லை. ரெண்டு நிமிஷம் பேசினால் லட்சத்து சில்லரை டேட்டா என வரும். என்னைக்கு நம்ம பய அம்பானி இதுக்கு காசு கேக்குறானோ அன்னைக்கு கட் பண்றோம் என்ற முடிவில் இருந்தாலும், சிக்னல் இல்லாத ஏரியக்களைப் பற்றி தகவல் கொடுத்தால் உடனடியாய் இன் ஜினியர் வந்து அந்த ஏரியா பிரச்சனைகளை தீர...