Thottal Thodarum

Oct 5, 2016

கொத்து பரோட்டா 2.0 -2

Jio
ஊரெங்கும் ஜியோவின் பேச்சாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சதுரங்க வேட்டை படத்தில் வரும் “ஒருத்தன ஏமாத்தணும்னா அவன் ஆசைய தூண்டணும்” என்கிற விநோத்தின் வசனம். நான் இந்த பரபரப்புக்கு எல்லாம் முன்னாடியே ஜியோ போனை ரெபரல் ஸ்கீமில் வாங்கிவிட்டேன். மூன்று மாதம் எல்லாமே விலையில்லை என்பதாலும்,  அப்படி என்னதான் இருக்கிறது என்கிற ஆர்வமும் காரணம். ஆச்சர்யப்படுத்தியது  இண்டெர்நெட் தான் ஸ்பீட்நெட்டில் செக் செய்தால் போனை விட்டெல்லாம் முள் ஏறக்குறைய 50 எம்.பி.பிஎஸ் காட்டியது. கூப்பிட்டு பேசியவர் குரலெல்லாம் சும்மா கணீரென்ற ஹெச்.டி தரத்தில். ஜியோ டூ ஜியோ வாடிக்கையளர்கள் எல்லாம் வீடியோ காலைத் தவிர வேறேதும் பயன்படுத்துவதே இல்லை. ஒரு கட்டத்தில் இந்த அழுக்குணி மூச்சிகளை என்ன டேஷுக்கு பார்ப்பது என்று யாரும் வீடியோ காலை பயன்படுத்துவதில்லை. ரெண்டு நிமிஷம் பேசினால் லட்சத்து சில்லரை டேட்டா என வரும். என்னைக்கு நம்ம பய அம்பானி இதுக்கு காசு கேக்குறானோ அன்னைக்கு கட் பண்றோம் என்ற முடிவில் இருந்தாலும், சிக்னல் இல்லாத ஏரியக்களைப் பற்றி தகவல் கொடுத்தால் உடனடியாய் இன் ஜினியர் வந்து அந்த ஏரியா பிரச்சனைகளை தீர்ப்பது, கஸ்டமர் சர்வீசைக் கூப்பிட்டால் உங்களுக்காகவே படைக்கப்பட்ட்வர்கர்(ள்) போல பேசினார்கள். இண்டெர்நெட்  என் அலுவலகத்தில் ஆகட்டும் கும்பகோணம் போகும் வழியில் ஆகட்டும் குறைந்த பட்சம் ஐந்திலிருந்து எட்டு எம்பிபிஎஸ் கிடைத்தது. ஜியோ சர்வீஸ்கள் எல்லாம் அட்டகாசம். ஆப்பின் மூலம் எல்லா டிவி சேனல்கள், மூவி ஆன் டிமாண்ட் எல்லாம் இண்டெர்நெட் மயம். எல்லாம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆப் மைண்ட். காரணம் எவனுக்கு கூப்பிட்டாலும் உடனடியாய் நமக்கு கிடைப்பது, ஹெச்.டி துல்லியத்தில், கச முச தூய இந்தியில் நெட்வொர்க் பிஸி பிஸி எனும் பெண் குரல் தான். அதிலும் ஏர்டெல் என்றால் சுத்தம். பி.எஸ்.என்.எல் என்றால் எப்பவாவது கிடைக்கலாம். இருப்பதில் சோப்ளாங்கிகளான ஐடியா, விடியோகான் போன்றவர்கள் உடனடியாய் கிடைப்பார்கள். 
இத்தனை களேபரத்தில் இலவச சிம் வேறு கொடுக்க ஆரம்பித்திருக்க, எல்லா கஸ்டமர் சர்வீசும், குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் பிஸி. ஏண்டா சிம்மு கொடுத்து ஒரு வாரம் ஆச்சே இன்னும் ஆக்டிவேட் பண்ணலைன்னு கேட்டா? யாருக்கு தெரியும் என்பது போன்ற பதில்கள் எல்லாம் வரத் தொடங்கிவிட்டது. தொழில் போட்டி. சம்பந்தப்பட்ட எல்லா நெட்வொர்க்குகளும் சரியான கனெக்டிவிட்டியை கொடுத்துவிட்டால் ஜியோவுக்குத்தான் ப்ளஸ். கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்து வைப்பது போலத்தான் இது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், முடிந்தவரை இழப்பை தள்ளிப்போட, மாற்று வகையில் தங்களை தயார் செய்து கொள்ள செய்யும் முயற்சியாகவே படுகிறது. இவர்களுக்குள் இண்டர் கனெக்டிவிட்டி ப்ராப்ளம் மட்டுமில்லாமல் ஏகப்பட்ட கால் ட்ராப்புகள். டிராய் சொன்னது கால் ட்ராப்புக்கெல்லாம் மக்களுக்கு காசு கொடுத்துதான் ஆக வேண்டும் என்பது சட்டமாயிருந்தால் நாமெல்லாம் கிட்ட த்தட்ட கோடீஸ்வரன்கள்.
Pink
ரொம்ப நாட்களாகிவிட்டது இவ்வளவு அழுத்தமான படம் பார்த்து. மூன்று இண்டிபெண்டண்ட் பெண்கள். தலைநகர் டெல்லியில் ஒரு ராக் பார்ட்டியில் தன்னிடம் தவறாய் நடக்க முயற்சித்தவனை பாட்டிலால் தாக்கிவிட்டு வந்துவிடுகிறார்கள். தாக்கப்பட்டவனுக்கு அரசியல் பின்புலமிருக்கிறது. மூன்று பேரில் தாக்கியவர்களை மனோரீதியாய் தாக்க ஆரம்பிக்கிறார்கள். வீட்டின் உரிமையாளரைக் கொண்டு அவர்களை காலி செய்ய சொல்வதில் ஆரம்பித்து, தப்ஸியை காரில் கடத்தி மீண்டும் மானபங்கம் செய்ய முயற்சிக்கும் வரை. ப்ரெஷர் தாங்காமல் பெண்கள் போலீஸுக்கு போக, பிரச்சனை அட்டெம்ப்ட் டூ மர்டர் கேஸாய் தப்ஸியின் மீது விடிகிறது. அவரளுக்கு ஆதரவாய் கிழட்டு சிங்கம் அமிதாப் மட்டுமே. என்னவாகிறது என்று போகிறது கதை. ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பை போலிஸிடம், கொண்டு போய் செல்லும் போது நடக்கும் அபத்தங்களும், மன ரீதியான இம்சைகள்பார்ட்டிக்கு போய் ஒரு ஆணுடன் அமர்ந்து ரெண்டு பெக் குடித்துவிட்டால் அவள் கூப்பிட்டால் வருவாள் என்று என்று நினைப்பதும், அப்படி குடித்ததால் அவளுடய கேரக்டரை கேள்விக்குறியாக்குவதும், என ஆண்கள் சூழ் உலகில் ஒரு பெண் தன் உரிமைக்காக, உண்மைகாக, போராடும் சூழ்நிலையில் அவளுக்கு ஆதரவாய், எதிராய், கோழையாய், அனுசரனையாய் இருக்கும் ஆண்களைப் பற்றி பேசுகிறது. விபசாரியாய், தோழியாய், காதலியாய், உடனிருந்து மது அருந்துகிறவராய், மனைவியாய், யாராக இருந்தாலும் ஒரு பெண் தனக்கு உறவு கொள்ள விருப்பமில்லைநோஎன்று சொன்னால் நோ தான் என்பதை அழுத்தமாய் சொல்லியிருக்கிறது. இம்மாதிரியான சட்டங்களை வைத்து ஆண்களின் வாழ்க்கையில் கபடி ஆடும் பெண்களைப் பற்றி படமெடுக்க நிறைய கதைகள் இருந்தாலும், இது  பேச வேண்டிய விஷயம் என்பதை படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடுத்தர வயது பெண்மணி ஒருவர் துப்பட்டாவால் வாய் பொத்தி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும், கண்கள் கலங்கியபடி, விதிர்க்க நின்றிருந்தது மனதை ஏதோ செய்தது. அமிதாப், தப்ஸி, எதிர்கட்சி வக்கீல், கட்டாயத்தால் பொய் கேஸ் எழுதும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், தப்ஸியின் தோழிகள் இருவர் என அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். வசனங்கள் பல இடங்களில் பட்டாசு. மிகச் சில விஷயங்கள் உறுத்தினாலும் பிங்க்.. அழுத்தம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

கும்பகோணப் பயணமும், டிகிரி காப்பியும்.
ஹைவேயில் கார் ஓட்டுவது எனக்கு பிடித்தமான விஷயம். குலதெய்வம் கோயிலுக்கு என்றால் இன்னும் விஷேஷம். எத்தனை அவசரமென்றாலும் இரவு பதினோரு மணிக்கு மேல் ஹைவேயில் வண்டியோட்ட மாட்டேன். பகல் தான் சுவாரஸ்யம். இருட்டும், எதிர் வண்டியின் வெளிச்சமும், கொடுக்கும் களேபரங்களை விட, பகல் பொழுதில் அரை நாள் பயணத்தில் போவது என்பது பற்றியெல்லாம் யோசிக்காமல் சென்றால் ரசனையாய் காரோட்டலாம். சரி.. அதை விடுங்கள் ஒரு வருடம் முன்பு போன போது நெய்வேலிக்கு பிறகு ரோடு மிக மோசமாய் இருந்தது. தற்போது ஓகே. அணைக்கரையில் தான் பாலம் ரிப்பேர் என்று டேப் தங்கராசு கடை வழியாய் ஒரு பத்து பதினைந்து கி.மீட்டர் சுற்றி கும்பகோணம் அனுப்பினார்கள். டேப் தங்கராசுவின் கடை என்றதும் நாக்கில் எச்சிலூறுகிறவர்கள் நிச்சயம் அவ்வூர்க்கார்கள். அணைக்கட்டு மீனும், மீன் குழம்பும் பற்றி தனியாய் ஒரு முறை சொல்கிறேன். ஆலயம் நிறைந்த ஊரில் உள்ள அனைத்து ஆலையங்களின் சுவர்களிலும் சினிமா போஸ்டரோ, அரசியல் போஸ்டரோ ஒட்டி நாசமாகியிருந்தை அவ்வப்போது சுட்டிக் காட்டிக் கொண்டேயிருப்பேன். இம்முறை எல்லாம் கோயில் சுவர்களும் பளிச். நிச்சயம் நான் சுட்டிக் காட்டியதால் என்று சொல்ல வரவில்லை. சென்னையிலிருந்து போகிற வழியெல்லாம் கும்பகோணம் டிகிரி காப்பிக்கடைகள் வலதும் இடதுமாய் முளைத்துக் கொண்டேயிருக்கிறது. சரி கும்பகோணம் போகிற வழி கடையிருக்கிறது என்று நினைத்தால் பெங்களூர் போகிற வழியில், ஏன் திருப்பதிக்கு போகும் வழியில் கூட திவ்யமான கும்பகோணம் காப்பி கிடைக்கிறது. சேலம் ஈரோடு பக்கம் பார்த்தால் ஆவினின் பார்லர் ஹைவே எங்கும்.  கும்பகோணத்துக்கே போய் கும்மோணம் காப்பி சாப்பிடவில்லையென்றால் சாமி குத்தமாகிவிடுமென்று கும்பேஸ்வரர் கோயிலுக்கு முன்னால் உள்ள ஆர்யாஸில் காப்பி ஆர்டர் செய்தேன். பித்தளை டம்ளரில் கொண்டு வந்து வைத்தார். ஆவலுடன் ஒரு வாய் எடுத்து மடக்கிட்டேன். வா சிவாஜி நாம திரும்ப ஹைவேக்கே போயிரலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Jyo Achyutananda
  சமீபகாலமாய் தெலுங்கில் வழக்கமான துண்மார்குடாசம்பேஸ்தா என அலறல் இல்லாமல் நல்ல ஃபீல் குட் படங்கள் வெற்றி பெற ஆரம்பித்திருக்கிறது. சேகர் கம்மூலாவின் ஆனந்த, கோதாவரி, ஹேப்பி டேஸுக்கு பிறகு  ஸ்லீக் த்ரில்லரான ஷணம் படத்தின் வெற்றி. புதுமுகங்கள் நடித்து சமீபத்தில் ஹிட்டடித்த பெல்லி சூப்புலு வரை நிறைய நம்பிக்கைகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படியொரு சுவாரஸ்ய ஃபீல் குட் மூவி தான் ஜோ அச்சுதானந்தா. அச்சுவும் ஆனந்தாவும் சகோதரர்கள். அவர்களின் வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வருகிறவள் ஜோ எனும் ஜோஸ்தனாஇருவரும் அவள் மேல் காதல் வயப்படுகிறார்கள் இதில் என்ன இருக்கிறது? என்கிறீர்களா? இவர்கள் இருவரும் காதல் வயப்பட்ட கதையை அண்ணனும் தம்பியும் தம் தம் மனைவியர்களிடம் அண்ணன் காதலித்தாய் தம்பியும், தம்பி காதலித்தாய் அண்ணனும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆளாளுக்கு ரோஷமான் ரேஞ்சுக்கு  கதை சொல்லி அப்பாடா என பெருமூச்சு விட்டு படுத்தால் அமெரிக்கா போன ஜோ திரும்பி வருகிறாள். அப்புறம் என்ன கந்தரகோலம்தான். சாதாரண லைனை சுவாரஸ்யமாக்குகிறது ப்ரதர்சுகளான நர ரோகித், நாக சவுரியாவின் நடிப்பு. ஸூத்திங்கான விஷுவல்கள், இனிமையான ஸ்ரீ கல்யாண ரமணாவின் பாடல்கள், பின்னணியிசை. கதை திரைக்கதை வசனம், இயக்கம் ஸ்ரீனிவாஸ் அவசரலா.  திரைக்கதையும் ஸ்பாண்டேனிட்டியான வசனங்களும் படத்தின் பலம்.. இரண்டாம் பாதியில் ரெஜினாவை வைத்து வழக்கமான தெலுங்கு பட க்ளீஷேக்களோடு ஆடியிருந்தாலும் ப்ரெஷான முதல் பாதியும், நகைச்சுவையும் பட த்தை காப்பாற்றுகிறது. இவரின் முதல் படமான ஊகாலு குச குசலாண்டே படமும் பீல் குட் படம் தான் ஒக்க சாரி சூடொச்சு J
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சாப்பாட்டுக்கடைசேட்டு சப்பாத்திக்கடை
சேட்டுக்கடை சப்பாத்தி என்றால் தெரியாதவர்கள் சைதாப்பேட்டையில் இருக்க முடியாது. இருபது வருட த்துக்கு முன் சின்ன கடையாய் இருந்த தற்போது சற்றே பெரிய சின்ன கடையாய் மாறியிருக்கிறது. சாப்டான சப்பாத்தி, சோளாபூரி, இட்லி, வெஜிட்டபிள் ரைஸ், தோசை அயிட்டங்கள், ராகி தோசை, சாம்பார் சாதம், தயிர் சாதம் என அயிட்டங்கள் நிறைய இருந்தாலும் சப்பாத்தி என்றால் சைதையில் இவரை அடிச்சிக்க ஆளேயில்லை. சப்பாத்தியோடு கொடுக்கப்படும் சென்னா தால், தக்காளி சட்னி இரண்டையும் கலந்தடித்து ஒரு வாய் சப்பாத்தியோடு வாயில் போட்டால் டிவைன். https://www.youtube.com/watch?v=RY0jA9ZVkhc
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
The ‘Other’ Love Story
ஆங்கிலத்தில் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் சேனல்கள் தங்கள் வீயூவர்களுக்காக அட்டகாச சீரியஸ்கள் எல்லாம் எடுத்துக் கொண்டிருக்க, இந்திய அளவில் நெட் சீரீஸ் கொஞ்சம் கொஞ்சமாய் முகம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. ”உன் குடும்பத்தை நிம்மதியா இருக்க விடமாட்டேன்என்பது போன்ற டெம்ப்ளேட் வசனங்களோடோ, பெண்ணை நாய், பேய், பூதம், பாம்பாக மாற்றிக் கொண்டிராமல், போல்டான தீம்களோடும், ப்ரெஷ்ஷான நடிகர்கள், என கலக்க ஆர்மபித்திருக்கிறார்கள். சமீபத்தில் பார்க்க ஆர்மபித்திருக்கும் நெட் சீரிஸ் “The ‘Other’ Love Story” இரண்டு பெண்களுக்கிடையே ஆன காதல் கதை. ரூபா ராவ் எனும் பெண் தான் இயக்குனர். ஹரிணி தத்தாலா எனும் இன்னொரு பெண் தான் தயாரிப்பாளர். ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் ஒரு எபிசோட் முடிந்துவிடுகிறது. இது வரை ஐந்து எபிசோட் வந்திருக்கிறது. பார்த்தவரை சுவாரஸ்யம்தான் பட்ஜெட் இவர்களுக்கான பெரிய இடர்பாடு தான் என்றாலும் டிவி சீரியல்கள் போல ஒளிபரப்பாகிவிட்டால் காலாவதியாகிவிடுகிற கண்டெண்ட் இல்லையென்பதால் இணையம்  உள்ள வரை வருமானம் இருக்கிறது. இங்கேயும் மார்க்கெட்டிங் முக்கியம். இவற்றுள் மிக முக்கியம் கண்டெண்ட். வரவேற்போம் புதியவர்களை  https://www.youtube.com/watch?v=r6IHJ3SD4Ik&list=PL-4pzkZvByqe_3pFPUisHE8U_WvYUOa3U&index=1
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
When is a man most intelligent, before, after or during sex?

During sex cuz he's plugged up to the knowledge source =:)


குமுதம் -5-10-16

Post a Comment

3 comments:

Unknown said...

check out my first review

http://hollywoodkallan.blogspot.com/2016/10/project-almanac2015-tamil-review.html

”தளிர் சுரேஷ்” said...

ஜியோ வாங்கி ஒரு மாசம் ஆகிறது! இன்னும் ஆக்டிவேட் ஆகவில்லை! போனுக்கு வேறு 6500 தண்டம் ஆகிவிட்டது. கேட்டால் கிடைக்குமா? எப்படி மூவ் செய்வது?

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா கலவையாய்...