கொத்து பரோட்டா - 11/08/14
சென்ற வாரம் பதிவர்கள் இணைந்து உருவாக்கிய பரோட்டா கார்த்தி எனும் குறும்பட விழாவிற்கு சென்றிருந்தேன். நான் போய் சேர்வதற்குள் குறும்படம் ஒளிபரப்பப்பட்டு, வெளியிட்டு விட்டார்கள். பதிவர்கள் மின்னல் வரிகள் கணேஷ் பெற்றுக் கொண்டாராம். தொட்டால் தொடரும் ஆரம்பித்ததிலிருந்து பதிவர்கள் யாரையும் சந்திக்க முடியவில்லை. சுரேகா, அவரது உதவியாளர், கே.ஆர்.பி, சிவகுமார், கோவை ஆவி, சீனு, சேட்டைக்காரன், மூத்த பதிவர் சுப்பு தாத்தா வந்திருந்து வாழ்த்தினார் என நண்பர்கள் பல பேர் வந்திருந்தது சிறப்பாக இருந்த்து விழா. குறும்படத்தை பார்த்துவிட்டு கருத்து சொல்வதாய் சொல்லியிருந்தேன். விழாவில் கலந்து கொண்ட பதிவர்களுக்காக தொட்டால் தொடரும் படத்தின் வெளிவராத ட்ரைலரையும், பெண்ணே.. பெண்ணே பாடல் காட்சியையும் போட்டுக் காட்டினேன். நன்றாக இருந்ததாய் சொன்னார்கள். வழக்கம் போல நிகழ்ச்சி முடிந்தும் வேடியப்பனின் கடையின் கீழ் கூட்டம் நடந்தது. நெடுநாள் கழித்து ஒர் சிறப்பான மாலையாய் அமைந்தது பரோட்டா கார்த்தி குறும்பட விழா. @@@@@@@@@@@@@@@@@@@