Posts

Showing posts with the label டாஸ்மாக்

நடு நிசி கதைகள்-1

75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும்  வணக்கமும்.-கேபிள் சங்கர் நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா..(ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை)

Image
கொள்ளை, கொள்ளையாம் முந்திரிக்கா.. இது எழுத்து பிழையில்லை.. வேண்டுமென்றே எழுதப்பட்டதுதான். ஆம் கொள்ளை கொள்ளையாய் கொள்ளை அடித்து கொண்டிருக்கும் டாஸ்மாக் கடைக்காரர்களை பற்றி எழுத இப்படித்தான் தோன்றுகிறது. நான் சமீபத்தில் ஆந்திர மாநிலத்துக்கு போயிருந்தேன். அங்கே இருக்கும் ஓயின் ஷாப்புகளில் கூட்டமே காணவில்லை. இத்தனைக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் கடையில் கூட கும்பல் இல்லை.. அங்கொன்றும், இங்கொன்றுமாய் சில பேர் உட்கார்ந்திருக்கிறார்கள், சரி நம்ம ஊர் போல காலையில் அடிக்க மாட்டார்கள் போலிருக்கிறதே என்று ராத்திரியில் கூட சொற்ப கூட்டமே.. அதை விடுங்கள்.. அங்கே கடைகளில் எம்.ஆர்.பி என குறிப்பிட்டு இருக்கும் விலையை விட ஐந்து ரூபாய் குறைந்த விலையில், வாட்டர் பாக்கெட்டுகள், ஒரு சைட் டிஷ் இலவசமாய் கொடுக்கிறார்கள். இத்தனைக்கும் தனியார் கடைகள் தான்.. அதெப்படி இவர்களுக்கு சாத்தியமாகிறது..? என்ற கேள்வி என்னுள் ஓடியது.. விசாரித்த போது.. அங்கே பல இடஙக்ளில் சாராயம் கிடைக்கிறது என்று சொன்னார்கள்.. என்ன தான் சாராயம் கிடைத்தாலும், கீழ் நிலை மக்கள வேண்டுமானால் அங்கே போவார்களே அன்றி நடு நிலை மக்கள் போக...