படிக்காதவன் - திரைவிமர்சனம்.
கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிச்சாம். அது போலத்தான் வில்லுக்கு போய் நொந்து போய் படிக்காதவனுக்கு போனா அங்கெ அத விட கொடுமை. எங்கேயிருந்துதான் யோசிக்கிறாங்களோ..? எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..? படத்தோட கதை என்னன்னா..? மெத்த படிச்ச குடும்பத்தில படிப்பே வராதா கடைக்குட்டி தனுஷ். படித்த பெண்ணை காதலித்தால் தான் படிக்காததை சரி செய்துவிடலாம்னு நண்பர்கள் சொன்னதை கேட்டு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல தமன்னாவை லவ் பண்ணுறார் தனுஷ். எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. அங்கே போனா ஓயிட் டிரஸ், ரெட் துப்பட்டா போட்ட சுமன் கும்பலுக்கும், அன்யூனிபார்ம்ல இருக்கிற சாயாஜி ஷிண்டே குருப்பும் ரெண்டு கேங்கு லீடரும் ஒருத்தரை ஒருத்தர் ‘வேசையிண்டிரா..” என்று சொல்லிவிட்டு பின்னால் போய்விடுகிறார்கள். இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார...