Thottal Thodarum

Jan 16, 2009

படிக்காதவன் - திரைவிமர்சனம்.


கொடுமை, கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்கே ஒரு கொடுமை ஜிங்கு.. ஜிங்குன்னு ஆடிச்சாம். அது போலத்தான் வில்லுக்கு போய் நொந்து போய் படிக்காதவனுக்கு போனா அங்கெ அத விட கொடுமை.

எங்கேயிருந்துதான் யோசிக்கிறாங்களோ..? எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..?

படத்தோட கதை என்னன்னா..? மெத்த படிச்ச குடும்பத்தில படிப்பே வராதா கடைக்குட்டி தனுஷ். படித்த பெண்ணை காதலித்தால் தான் படிக்காததை சரி செய்துவிடலாம்னு நண்பர்கள் சொன்னதை கேட்டு லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல தமன்னாவை லவ் பண்ணுறார் தனுஷ். எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. அங்கே போனா ஓயிட் டிரஸ், ரெட் துப்பட்டா போட்ட சுமன் கும்பலுக்கும், அன்யூனிபார்ம்ல இருக்கிற சாயாஜி ஷிண்டே குருப்பும் ரெண்டு கேங்கு லீடரும் ஒருத்தரை ஒருத்தர் ‘வேசையிண்டிரா..” என்று சொல்லிவிட்டு பின்னால் போய்விடுகிறார்கள். இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார்கள். சரி ஹீரோயின் அப்பா ஒத்து கொண்டுவிட்டார் என்று பார்த்தால், கதையில் திருப்பமாம்.. தனுஷ் எப்போதோ திருநெல்வேலிக்கு போன போது ஒருவனை அடித்துவிட, அவன் இறந்தது தெரியாமல் தனுஷ் இருக்க, இப்போது இறந்து போனவனின் அண்ணன் பழி வாங்க அலைவது தெரிந்து, தமன்னாவின் அப்பா அவனை ஜெயிச்சு என் பொண்ணை கட்டிக்க.. என்றவுடன், பொல்லாதவன் போல் தனுஷ் நேரே போய் மன்னிப்பு கேட்க, அந்த முட்டாக்..கூ வில்லன் ஆளை வைத்து தனுஷை போடாமல் ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டு தோற்கிறார்.

படத்தில் ஒகே என்று சொல்லக்கூடியது தனுஷின் நடிப்பு மட்டும்தான். மனுசன் எக்ஸ்பிரஷனில் பின்னுகிறார். தமன்னா அழகாய் இருக்கிறார்.. ஆட்டம் ஆடுகிறார், போகிறார்.

விவேக் தனியே கண்ணாடியை பார்த்து அழும் காட்சியில் மட்டும் சிரிக்க வைக்கிறார். மற்ற காட்சிகளில் வடிவேலுவை மிமிக்ரி செய்கிறார். பாடல்கள் பரவாயில்லை. திரும்பவும் தெலுங்கில் ஹிட்டான சில பாடல்களை தமிழிட்டுருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு, எடிட்டிங்கில் ஏதும் குறையில்லை. படத்தின் கதையில் தான் குறை. டைரக்டரை பற்றி சொல்ல எதுவுமில்லை.

படிக்காதவன்.. சன் டிவி வழங்கிய குப்பைகளில் பெரிய குப்பை வேற ஒண்ணும் சொல்றதுகில்ல..


Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

36 comments:

முரளிகண்ணன் said...

\\படிக்காதவன்.. சன் டிவி வழக்கிய குப்பைகளில் பெரிய குப்பை வேற ஒண்ணும் சொல்றதுகில்ல..

\\

நச் கமெண்ட்.

ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கீங்க போல.

\\வெயிட் டிரஸ், ரெட் துப்பட்டா \\

\\சன் டிவி வழக்கிய \\

என எழுத்துப் பிழைகள். கோபத்தோடு அடித்தீர்கள் போலிருக்கே
:-))))))

வெண்பூ said...

//
மற்ற காட்சிகளில் வடிவேலுவை மிமிக்ரி செய்கிறார்
//

டிவில பாத்தப்பா நானும் இதேதான் நெனச்சேன். சொல்லப்போனா அந்த காட்சிகளை வடிவேலு பண்ணியிருந்தா இவரை விட பல மடங்கு பெட்டரா இருந்திருக்கும்..

Cable சங்கர் said...

//என எழுத்துப் பிழைகள். கோபத்தோடு அடித்தீர்கள் போலிருக்கே
:-))))))//

சரி பண்ணிட்டேன் முரளி.. நிஜமாவே கோபத்தோடத்தான் எழுதினேன்.

Cable சங்கர் said...

//டிவில பாத்தப்பா நானும் இதேதான் நெனச்சேன். சொல்லப்போனா அந்த காட்சிகளை வடிவேலு பண்ணியிருந்தா இவரை விட பல மடங்கு பெட்டரா இருந்திருக்கும்..//

படத்துல தனுஷ்கிட்ட அவரது நண்பர்கள் சொல்வார்கள். ‘யாருக்கு எது வருமோ அதைத்தான் பண்ணனுமின்னு..” அது படத்துல நடிச்ச எல்லாருக்கும் பொருந்தும் வெண்பூ..

பாலா said...

இப்பவே ‘நான் கடவுள்’-ல ரிலீஸ் பண்ணினாதான் உண்டு. இல்லன்னா இந்த சாக்குல ‘வில்லு’-வ ஹிட்-ன்னு சொல்லிடுவானுங்க..!!!!

நையாண்டி நைனா said...

/* எதை நம்பி இந்த நடிகர்கள் எல்லாம் இது எல்லாம் ஒரு கதைன்னு கேட்டு ஓகே பண்ணி.. அதுக்கு பல கோடி ரூபாய் செலவு செய்யுறாங்களோ..?*/
படம்பாக்க வருகிறவனும் "படிக்காதவன்" தான் என்ற நம்பிக்கை தான்.

Cable சங்கர் said...

//இப்பவே ‘நான் கடவுள்’-ல ரிலீஸ் பண்ணினாதான் உண்டு. இல்லன்னா இந்த சாக்குல ‘வில்லு’-வ ஹிட்-ன்னு சொல்லிடுவானுங்க..!!!!//

கடவுளே.. எது ஓடினாலும் வில்லும், படிக்காதவனும் ஓடக்கூடாது.. அப்படி ஓடிச்சின்னா தமிழ் சினிமாவை யாராலையும் இப்போதைக்கு காப்பாத்த முடியாது.. பாலா.. நன்றி..

Cable சங்கர் said...

//படம்பாக்க வருகிறவனும் "படிக்காதவன்" தான் என்ற நம்பிக்கை தான்.//

:):):)

அக்னி பார்வை said...

அப்ப இந்த படமும் டமாலா? ..என்ன கொடும சார் இது இந்த பொங்கலுக்கு வந்த படங்கள் நம்ம வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கின்றன

Cable சங்கர் said...

//அப்ப இந்த படமும் டமாலா? ..என்ன கொடும சார் இது இந்த பொங்கலுக்கு வந்த படங்கள் நம்ம வயிற்றில் புளியை கரைத்துக்கொண்டிருக்கின்றன//

நேத்தைக்கு என் சகோதரி தன் குடும்பத்துடன் படம் பார்த்துவிட்டு, நொந்து போய் முக்கால்வாசி படத்திலேயே எழுந்து வந்துவிட்டார்கள் என்றால் பார்த்து கொள்ளூங்கள்.

A N A N T H E N said...

//எல்லாம் கூடி வரப்ப தீடீர்னு அவங்க அப்பா.. ஹெலிகாப்டர்ல வந்து கூட்டிட்டு போயிடுறாரு. அதுக்கு அப்புறம் தமன்னாவை தேடி ஆந்திராவுக்கு விவேக்கோட போறாரு. //
இதென்ன "காதலன்" பட சீன் மாதிரி இருக்கு?

யேஹே யேஹே.. நான் படிக்காதவன படிச்சிட்டேன்

Cable சங்கர் said...

//யேஹே யேஹே.. நான் படிக்காதவன படிச்சிட்டேன்//

நீங்க படிச்சவராகறதுக்கு நான் தான் காரணம்.. நன்றி அனந்தீன்

A N A N T H E N said...

//நீங்க படிச்சவராகறதுக்கு நான் தான் காரணம்.. நன்றி அனந்தீன்//

அடடே என் அறிவு கண்ணைத் திறந்துட்டீங்க... நான்தான் நன்றி சொல்லோனும்

இல்ல இல்ல நான்தான் நன்றி சொல்லோனும்

Cable சங்கர் said...

//அடடே என் அறிவு கண்ணைத் திறந்துட்டீங்க... நான்தான் நன்றி சொல்லோனும்

இல்ல இல்ல நான்தான் நன்றி சொல்லோனும்//

சரி.. சரி.. உங்க நன்றிய ஓட்டா தமிழ்மணத்திலேயும், த்மிலிஷிலேயும் போட்டுட்டு போங்க அனந்தீன்

Tech Shankar said...

ean ippadi?
romba kobama keeringa?

ada adhellam udunga sir.

padam nalla illai - adhai solliteenga

thiruttu DVD la kooda paarkka koodathundreenga.

saridhane?

A N A N T H E N said...

போட்டுட்டா போச்சு காசா பணமா

Cable சங்கர் said...

//ean ippadi?
romba kobama keeringa?

ada adhellam udunga sir.

padam nalla illai - adhai solliteenga

thiruttu DVD la kooda paarkka koodathundreenga.

saridhane?//

அதுல கூட ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க தமிழ்

அத்திரி said...

தமன்னா புள்ளக்காக பாக்க போலாமா

Karthik said...

படிக்காதவன்: பிடிக்காதவன்

நையாண்டி நைனா said...

/*அதுல கூட ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க தமிழ்*/

விட்டா "படிக்காதவன்" விமர்சனம் படிக்கிறது கூட வேஸ்ட் என்று சொல்லுவீங்க போல?

Ashok D said...

எல்லா புது படத்தையும் மொதல்ல பாத்துடவேண்டியது ... அப்புறம் நல்லாயில்ல ன்னு சொல்றது .... எங்கலாமாதிரி youngsters என்ன படம்தான் பாக்கறது???

அப்புறம் 'கருத்துள்ள' பாடல்களை சொல்ல மறந்திட்டிங்க....

உண்மைத்தமிழன் said...

அதுதான் உங்களுக்கு முன்னாடியே நாலைஞ்சு பேர் படத்தை பார்த்துட்டு எழுதித் தொலைச்சுட்டாங்களே..

அப்புறமும் படத்துக்கு போயிருக்கீங்கன்னா பலனை அனுபவிச்சுத்தான் ஆகணும்..

இப்ப போய் கோவம் வருது.. ஆத்திரம் பொங்குதுன்னா.. என்ன ஸார் அர்த்தம்?

குப்பன்.யாஹூ said...

கார்பரேட் நிறுவனங்கள் வந்ததும் படங்களின் தரம் குறைகின்றது.

இன்று ஜெயா டி வி யில் .ஒரு தலை ராகம் படம். நான் முதன் முறையாக பார்த்தேன்.
விளையாட்taai (கிண்டல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்) பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் பத்து நிமிடத்தில் என் எண்ண போக்கு மாறி விட்டது.

மிக மிக குறைந்த பட்ஜெட்டில் அற்புதமாக படம் பண்ணி இருக்கிறார்கள்.

இன்று பார்க்கும் போது கூட படம் அலுப்பு தட்ட வில்லை.

பாடல்கள், வசங்கள், எடிட்டிங், திரை கதை, dialogues என எல்லா துறையும் ஒன்றுடன் ஒன்று போட்டி போடுகின்றன படத்தில்.


மொத்தத்தில் இந்த பொங்கல் வேஸ்ட் போல.

குப்பன்_யாஹூ

Cable சங்கர் said...

//படிக்காதவன்: பிடிக்காதவன்//

சரியாத்தான் சொன்னீங்க.. கார்திக்..நன்றி

Cable சங்கர் said...

//தமன்னா புள்ளக்காக பாக்க போலாமா//

தமன்னா புள்ளையை பாக்கணுமின்னா தெலுங்கு ஹாப்பி டேஸ் பாருங்க.. அத்திரி..

Cable சங்கர் said...

//அப்புறம் 'கருத்துள்ள' பாடல்களை சொல்ல மறந்திட்டிங்க....//

அதான் நமக்கு படத்துல இருக்கிற கருத்தே புரியலையே.. அப்புறம் எப்படி கருத்துள்ள பாடல்கள் புரியும். அசோக்.. நன்றி உங்கள் முதல் வருகைக்கும், கருத்துக்கும்,

Cable சங்கர் said...

//விட்டா "படிக்காதவன்" விமர்சனம் படிக்கிறது கூட வேஸ்ட் என்று சொல்லுவீங்க போல?//

என்னா நைனா.. நம்மளையே கலாய்க்கிறியே..? நானே நொந்து நூலாகி போயிருக்கேன்.

Cable சங்கர் said...

//அப்புறமும் படத்துக்கு போயிருக்கீங்கன்னா பலனை அனுபவிச்சுத்தான் ஆகணும்..

இப்ப போய் கோவம் வருது.. ஆத்திரம் பொங்குதுன்னா.. என்ன ஸார் அர்த்தம்?//

தப்போ.. ரைட்டோ.. நாமே அனுபவிச்சி புரிஞ்சிக்கணும்னு நினைச்சு.. போயிட்டேன். இனிமே மத்தவங்க மாதிரி நாமளும் ஆயிரனும் போலருக்கு தமிழன் சார்.

Cable சங்கர் said...

//மிக மிக குறைந்த பட்ஜெட்டில் அற்புதமாக படம் பண்ணி இருக்கிறார்கள்.//

நிச்சயமாய் குறைந்த பட்ஜெட்டில் பல பேர் அற்புதமான கதை, மற்றும் திரைகதைகளை வைத்துக் கொண்டு அலைகிறார்க்ள். கார்பரேட் நிறுவனங்கள் பெரிய நடிகர்களின் பின்னால் அலைந்தே அழிந்து போனது..

butterfly Surya said...

சன் டீவி வெளியிடும் அனைத்தும் டூபாகூர் ரகம் தான். இது அவர்க்ளுக்கே நன்றாக தெரியும். வெற்று விளம்பரத்தால் காசு பார்க்கலாம் என்ற வியாபார தந்திரம் தான்.

தமிழனை விட இளிச்சவாயன் வேறு யார்..???

வேறு எந்த புண்ணாக்கும் இல்லை.

வேத்தியன் said...

//இருவர் கும்பலும் குருஷேத்திர போர் போல கத்தி, கபடா, துப்பாக்கி என்று அடித்து கொள்கிறார்கள்.//

ஆமாங்க...
ஒவ்வொருத்தனும் பார்க்க காக்கா,குருவி சுட போறவன் மாதிரி இருக்கான்.ஏன்னா தூக்கிட்டு போற துப்பாக்கியைப் பார்த்தா அப்பிடித்தான் இருக்கு...

Anonymous said...

information about animation film about MGR.


mgr's first 3 D animated film

http://puratchithalaivan.com/


Contact Us At:
Mayabimbham Media (P) Ltd.
Plot No. 6/1,
Nakkeeran Street,
Valasaravakkam,
Chennai - 600 087.
Phone No : 91-44-24866149
: 91-44-65877828
E Mail ID : info@mayabimbham.com

தேவன் மாயம் said...

காலைவணக்கம்!
கவித்தேநீர் அருந்த
என் வலை
வருக.
அன்புடன்,
தேவா..

priyamudanprabu said...

....படிக்காதவன்.. சன் டிவி வழக்கிய குப்பைகளில் பெரிய குப்பை வேற ஒண்ணும் சொல்றதுகில்ல..
....

...படம்பாக்க வருகிறவனும் "படிக்காதவன்" தான் என்ற நம்பிக்கை தான்.
....

shabi said...

padam release aana first day sun music la vivek vachu oru nadhatri petti edutthuchu first day padam mihapperiya vetrinnu in nadharingala thirutthave mudiyadha/vivek nadiccha character la first vadivelu than nadiccharu directorukkum vadivelukkum sandai athanala than viveka potturukkar

Rafiq Raja said...

சமீபத்தில் பார்த்த மொக்கை படத்தில் No.1 வில்லு தான் என்று எண்ணி இருந்த என் என்னத்தை மற்ற வைத்த முதல் படம்..... சும்மா சொல்ல கூடாது கிட்ட தட்ட 10 வருடங்கள் பின் தங்கி போன சினிமா ட்ரெண்டை மீண்டும் பார்க்க வைத்த சன் டிவி கூட்டணிக்கு நன்றி....

மாயாஜாலில் துப்பாக்கி சண்டையாம், ஹெலிகாப்டரில் சாட் கன் shot ஆம், நாடு நடுவே அர்த்தம் இல்லாத தனுஷ் வசங்கள் வேற.... போத குறைக்கு முன் இருந்த காமெடி கலைஞர் விவேக் இவரா என்று என்ன தோன்றும் அளவுக்கு மொக்கை காமெடி'ச.... இந்த படத்தை பற்றி சொல்லனும்னா.... காலையில் கொள்ளை புறம் போன தெரியும் மேட்டர் நு சொல்லி முடிக்கலாம்.

இப்படி படங்கள் தத்து எடுபதிற்கு பதிலாக, எத்தனையோ நல்ல கதைகளை வைத்து கொண்டு அலையும் புதுமுக டைரக்டர் க்குக்கு சன் டிவி வாழ்வு கொடுக்கலாம்... ஆனால் அவர்களவாது மண்ணாவது :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்