Thottal Thodarum

Jan 13, 2009

வில்லு - திரைவிமர்சனம்

பதிவர்கள்.. வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..


போக்கிரி காம்பினேஷன்.. அதனால் எதிர்பார்ப்பும் அதிகம். வழக்கமான பார்முலா பழிவாங்கல் கதை. பில்லா போல ஸ்டைலாய் படமெடுக்க வேண்டிய கட்டாயத்தில் பல காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். ஆனால் பாவம் அவுட்புட்தான் சரியில்லை.

தேசதுரோகியின் மனைவி என்று நெற்றியில் பச்சை குத்தப்பட்ட தன் தாயின் பழியையும், தன் தந்தையை கொன்ற பழியையும், பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை.

முதல் பாதியில் எதோ ஜேம்ஸ்பாண்ட் பட கணக்காய் பயங்கராமாய் பில்டப் செய்திருக்கிறார்கள். வடிவேலு, விஜய், நயந்தாரா.. கல்யாண வீடு காம்பினேஷன் சூப்பர். அருமையாக க்ரியோகிராப் செய்யப்பட்ட காட்சிகள். அனால் தனியே வடிவேலு செல்ப் எடுக்கவில்லை. அதிலும் மாடுடன் சண்டையிடும் காட்சிகளில் நகைச்சுவைக்கு பதிலாய்.. கடுப்பையே ஏற்றுகிறது.

நயந்தாரா.. அழகாய் இருக்கிறார். கவர்ச்சியாய் இருக்கிறார். ரொம்பவும் ஒடிசலாகாமல் இப்போது கொஞ்சம் பூசினார் போல் இருக்கிறார். ம்ஹூம் நமக்கில்லை. அவருக்கு கொடுத்த வேலையை சரியாய் செய்திருக்கிறார்.

விஜய்.. சில காட்சிகளில் அழகாய் இருக்கிறார், சண்டை போடுகிறார். காமெடி செய்கிறார். வாயை திறந்து பேசத்தான் மாட்டேன்கிறார்.

பிரகாஷ்ராஜ், தேவராஜ், ஆனந்தராஜ் என்று ஏகப்பட்ட ராஜ்கள் வில்லனுங்களாம்..? அதிலும் பிரகாஷ்ராஜின் விக் செம காமெடி.. தேவராஜின் அடியாளாய் வரும் ஸ்ரீமனுக்கு பில்லா போலவே. இதிலும் ஒரு சொதப்பல் கேரக்டர்.. பிரபு தேவாவுக்கும், ராஜுசுந்தரத்துக்கு, வில்லன்கள் மேல் என்ன கோபம்..?

பாடல் காட்சிகளில் ஏனிந்த வறட்சி.. ஏதாவது பட்ஜெட் பிராப்ளமா? வழக்கமான துள்ளல் முதல் பாடலை தவிர மற்ற பாடல்களில் இலலை. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே எடுத்த படத்தை பார்த்து எடுப்பதில் பிரபுதேவா அவ்வளவாக பிரச்சனையில்லை. புதிதாய் எடுப்பதில் உள்ள பிரச்சனை இப்படத்தில் தெரிகிறது.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள் எல்லாமே தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த ‘ஜல்சா’ படத்தின் பாடல்களே. பாடல் வரிகள் அனைத்துமே டப்பிங் பட பாடல்களை நினைவூட்டுகிறது. அதையும் மீறி சில பாடல்கள் தாளமிட வைக்கிறது.

ஒளிப்பதிவு ரவிவ்ர்மன். க்ளைமாக்ஸ் செம்மண் சண்டையில் படப்பிடிப்பு அருமை. அந்த ராணுவ காட்சிகள் ரொம்பவே சொதப்பல்.

படத்தில் வடிவேலுவை தவிர பயங்கரமான காமெடி காட்சிகள் உள்ளது. முக்கியமாய் விஜயின் ராணுவ மேஜர் சீன்கள். அதிலும் விறைப்பாய் நடிக்கிறேன் என்று அவர் நடிக்கும் காட்சி செம காமெடி.. ஏணுங்கண்ணா.. நமக்குதான் நடிப்பு வராதுங்களே.. புறவு எதுக்கு..? வருவது கொஞ்சமே இருந்தாலும் சிரித்து, சிரித்து வயிறு புண்ணாகி போகிறது. நடு நடுவே பாட்லின் நடுவில் பாரதியார் வேறு.. மழலை நிகழ்ச்சிகளில் குழந்தைகள் வேடமிட்டு வருமே அந்த மாதிரி இருக்கிறது..

ஒப்பனிங் சாங்கில் குஷ்புவுடன் விஜய் ஆடுகிறார். போகிற போக்கில் பறவை முனியம்மாவுடன் ஒப்பனிங் சாங் வ்ரும்போல..

முதல் பாதியில் ஏதோ ஒப்பேத்தியிருந்தாலும், செகண்ட் ஹாப்.. ரொம்பவே சொதப்பல் அதிலும் 1980ன் கிளைமாக்ஸ் நம்மை ரொம்பவே சோதிக்கிறது.

வில்லு.. டார்கெட் இல்லாதது.Blogger Tips -நிதர்சன கதைகள் -1 “என்னை பிடிக்கலையா” வை படிக்க இங்கே அழுத்தவும்உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

52 comments:

முரளிகண்ணன் said...

விஜய்க்கு ஹேட்டிரிக்கா?

\\பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை\\

\\ம்ஹூம் நமக்கில்லை. \\

\\அதிலும் விறைப்பாய் நடிக்கிறேன் என்று அவர் நடிக்கும் காட்சி செம காமெடி.. \\

செம குத்து குத்தீட்டிங்க

Cable Sankar said...

//செம குத்து குத்தீட்டிங்க//

அவங்க குத்துன குத்துக்கு.. நான் குத்துனது ரொம்பவே கொஞ்சம்..

கூட்ஸ் வண்டி said...

/*போக்கிரி காம்பினேஷன்.. அதனால் எதிர்பார்ப்பும் அதிகம்*/

நாலாம் அப்படி எதிர் பார்க்கிறது இல்லை.

அதுவும் தமிழ் திரைப்படங்களில்...

நையாண்டி நைனா said...

/*தேசதுரோகியின் மனைவி என்று நெற்றியில் பச்சை குத்தப்பட்ட தன் தாயின் பழியையும், தன் தந்தையை கொன்ற பழியையும், பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை.*/

அப்படின்னா, என்று நம்ம நெற்றியிலும் "தேசதுரோகி" என்று பச்சை குத்துராங்கன்ணு சொல்லுங்க.

அக்னி பார்வை said...

எங்கள் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு முறையும் த்மிழ் படங்களை பார்த்து விமரிசனமெழுதி, விஷபரிட்சையில் இறங்கும், எங்கள் அண்ணன்,கொள்கை புயல், விவேக தளபதி, அடுத்த முதல்வர்

கேபிள் சங்கர் வாழ்க

நையாண்டி நைனா said...

/*ம்ஹூம் நமக்கில்லை.*/

இது அவரை பற்றியா, இல்லை அவரது நடிப்பை(..!..?) பற்றியா?

சத்தியமா சிம்புவுக்கு தான் என்று நான் சொல்லவில்லை, இணையமும், பத்திரிகையும் சொல்லிவிட்டன.

நையாண்டி நைனா said...

/*பிரபு தேவாவுக்கும், ராஜுசுந்தரத்துக்கு, வில்லன்கள் மேல் என்ன கோபம்..?*/

சிறு திருத்தம்...

"பிரபு தேவாவுக்கும், ராஜுசுந்தரத்துக்கும், தமிழ் சினிமா மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் என்ன கோபம்..?" என்று திருத்தி விடவும்.

KaveriGanesh said...

வில்லு வளைஞ்சிருச்சு அல்லது ஒடிஞ்சிருச்சு போடுவிங்கனு பாத்தா ( வில்லு.. டார்கெட் இல்லாதது)சாப்டா போட்டிருங்கிங்க தலைவா.


இந்த கருமத்துக்கு எதிர்மாறா நம்ம JKR படம் பற்றி என்னுடைய பதிவு பாருங்கள்

நையாண்டி நைனா said...

/*வில்லு.. டார்கெட் இல்லாதது.*/

தவறு..
தமிழனின் பணத்தையும், மனத்தையும் குத்திக் கிழிக்கிறது.

வெங்கடேஷ் said...

இவரு படத்தையே பாக்க முடியல இதுல கொடி கட்சி அலப்பரை எல்லாம் எதுக்கு..

நையாண்டி நைனா said...

ஏனுங்கண்ணா..... மருத்துவர் படத்துக்கு "கமெண்ட் மாட்ரேசன்" வச்சிருக்கீங்களே இது உங்களுக்கே நியாயமானுங்கண்ணா.....

வருத்தப்படாத வாலிபன். said...

ஒரே ஒரு பாடல் மட்டுமே ஜல்சா படப்பாடல்.FYI ஜல்சா படப்பாடல்கள் நன்றாக இருக்கும்.வில்லு படப்பாடல்கள் கண்றாவி:-)

நையாண்டி நைனா said...

தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Cinema Virumbi said...

கேபிள் சங்கர் அண்ணா,

எப்படிங்கண்ணா இவ்ளோ சீக்கிரம் படத்தையும் பார்த்துட்டு விமர்சனமும் எழுதறீங்க?!!! படம் இப்படி இப்படி இருந்தா இப்படி இப்படி எழுதலாம்னு நாலஞ்சு காம்பினேஷன் ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?!

சினிமா விரும்பி

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//தேசதுரோகியின் மனைவி என்று நெற்றியில் பச்சை குத்தப்பட்ட தன் தாயின் பழியையும், தன் தந்தையை கொன்ற பழியையும், பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை.//

குபீரென்று பொங்கவிட்டது சிரிப்பு.

கேபிள் ஸார்.. நீங்கள்லாம் ரொம்பப் பாவம்.. எங்களுக்காக இப்படி கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்க வேண்டியிருக்கு..

தியாகிகள் ஸார் நீங்கள்லாம்..

narsim said...

//இப்போது கொஞ்சம் பூசினார் போல் இருக்கிறார். ம்ஹூம் நமக்கில்லை//

//படத்தில் வடிவேலுவை தவிர பயங்கரமான காமெடி காட்சிகள் உள்ளது. முக்கியமாய் விஜயின் ராணுவ மேஜர் சீன்கள். அதிலும் விறைப்பாய் நடிக்கிறேன் என்று அவர் நடிக்கும் காட்சி செம காமெடி.. ஏணுங்கண்ணா.. நமக்குதான் நடிப்பு வராதுங்களே.. புறவு எதுக்கு..? //

//ஒப்பனிங் சாங்கில் குஷ்புவுடன் விஜய் ஆடுகிறார். போகிற போக்கில் பறவை முனியம்மாவுடன் ஒப்பனிங் சாங் வ்ரும்போல..
//
கலக்கல் வரிகள் தல‌

குடுகுடுப்பை said...

வில்லு.. டார்கெட் இல்லாதது.//

தவறு: பார்வையாளர்களை குறிவைத்து எறியப்பட்டது.

Rafiq Raja said...

சரியா குத்திடீங்க உங்க ஓட்ட கேபிள் சங்கரே... பாவம் விஜய், பிரபு தேவா தயவிலாவது ஒரு வெற்றி படம் கிடைக்காதா என்று ஏங்கினார்... ஆனால் அவர் இப்படி பட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் வரை வெற்றி எட்டா கணி தான்.

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

Anonymous said...

ajith padamngakira ethirpaarppu illama ponaal Aegan far better than Villu pola theriyuthae...

Vijay ippadi appa paechai kaettuttu ora route-la ponaal avlothaan

Cable Sankar said...

//நாலாம் அப்படி எதிர் பார்க்கிறது இல்லை.

அதுவும் தமிழ் திரைப்படங்களில்...//
நீங்க ரொம்ப தெளீவானவருங்க..

Cable Sankar said...

//அப்படின்னா, என்று நம்ம நெற்றியிலும் "தேசதுரோகி" என்று பச்சை குத்துராங்கன்ணு சொல்லுங்க.//

அதான் நம்ம பர்சை குத்திட்டானுங்களே..

Cable Sankar said...

//எங்கள் மகிழ்ச்சிக்காக ஒவ்வொரு முறையும் த்மிழ் படங்களை பார்த்து விமரிசனமெழுதி, விஷபரிட்சையில் இறங்கும், எங்கள் அண்ணன்,கொள்கை புயல், விவேக தளபதி, அடுத்த முதல்வர்

கேபிள் சங்கர் வாழ்க//

ரொம்ப நன்றிங்க.. அக்னிபார்வை..

Cable Sankar said...

//இவரு படத்தையே பாக்க முடியல இதுல கொடி கட்சி அலப்பரை எல்லாம் எதுக்கு..//

பாத்து சொல்லுங்க தலைவா.. திடீர்னு முதலமைச்சர் ஆயிர போறாரு..

Cable Sankar said...

//ஒரே ஒரு பாடல் மட்டுமே ஜல்சா படப்பாடல்.FYI ஜல்சா படப்பாடல்கள் நன்றாக இருக்கும்.வில்லு படப்பாடல்கள் கண்றாவி:-)//

:):)

Cable Sankar said...

//எப்படிங்கண்ணா இவ்ளோ சீக்கிரம் படத்தையும் பார்த்துட்டு விமர்சனமும் எழுதறீங்க?!!! படம் இப்படி இப்படி இருந்தா இப்படி இப்படி எழுதலாம்னு நாலஞ்சு காம்பினேஷன் ரூம் போட்டு யோசிப்பீங்களோ ?!//

நாங்க கஷ்டப்பட்டு படம் பாத்துட்டு உங்களையெல்லாம் காப்பாத்தினா.. ஏன் சொல்ல மாட்டீங்க..

Cable Sankar said...

//தங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.//

உனிக்கும் பொங்கல் வாள்துகள் நைனா..

Cable Sankar said...

//தியாகிகள் ஸார் நீங்கள்லாம்..//

யாராவது என்னை தியாகின்னு சொல்லி பென்சன் வாங்கி தாங்கைய்யா.. படம் பாக்கிறதுக்கு காசு குறையுது..

Cable Sankar said...

//கலக்கல் வரிகள் தல‌//

ரொம்ப நன்றி தல்..பொங்கல் வாழ்த்துகள்.

Cable Sankar said...

//தவறு: பார்வையாளர்களை குறிவைத்து எறியப்பட்டது.//

அதைத்தான் சொல்லியிருக்கிறேன் டார்கெட் இல்லாதது என்று.

Cable Sankar said...

//ஆனால் அவர் இப்படி பட்ட கதைகளை தேர்ந்தெடுக்கும் வரை வெற்றி எட்டா கணி தான்.//

கதைன்னா.. :):):)

நாடோடி இலக்கியன் said...

மேஜர் சீன்ஸ்தான் வலையுலகிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கு தீனியென்று நினைக்கிறேன்.
கலக்கலா எழுதியிருக்கீங்க சங்கர்.

Cable Sankar said...

மிக்க நன்றி நாடோடி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.

நிலா பிரியன் said...

Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள்.
http://www.focuslanka.com

ஷாஜி said...

// விறைப்பாய் நடிக்கிறேன் என்று அவர் நடிக்கும் காட்சி செம காமெடி//

--- விஜய்க்கு நடிக்க கூட தெரியுமா?

--அவரது "ஜேம்ச் பாண்ட்" பைட்டு சீன் பத்தி எதுவுமே சொல்லலையே கேபிள் சார்....

ஷாஜி said...

ஒரு பாடல் - ஜல்சா படம்(jalsa -song). இன்னொரு பாடல் - சங்கர் தாதா MBBS படம்.(Daddy mummy - song).

ஆனால் அனைத்து பாடல்களிலும் தெலுங்கு வாடை வீசுகிறது சாமியோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....

ஷாஜி said...

மொத்ததில் வில்லு - பார்கிறவன் தலயில பாராங்கல்லு.....(SUN Tv - top 10 style)

ஸ்ரீ..... said...

நல்ல வேளையாக , உங்கள் விமர்சனம் படித்தேன். (தப்பிச்சுட்டோம்ல!). மிகவும் நன்றி. பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீ...

Pattaampoochi said...

உங்க விமர்சனத்துல தெறிக்கற நக்கல படிச்சு சிரிச்சுகிட்டு வந்து பாத்தா கமெண்டு பக்கத்துல நம்ம மக்கள் குடுக்கற பஞ்ச் வசனம் அதுக்கு மேல இருக்குதுங்க.

ஜல்சா படத்து பாட்டெல்லாமே கேக்கற ரகம்.ஆனா வில்லு?copy-ஆ இருந்தாலும் ரொம்ப சுமாராதான் வந்திருக்கு.பொதுவா விஜய் படத்துல பாடல்கள் நிச்சயமா நல்லா இருக்கும்(even if not the complete album, ஒன்னு ரெண்டாவது கண்டிப்பா நல்லா இருக்கும்).இந்த படம்......ம்ஹூம் ஏமாற்றமே.பாட்ட கேட்டதுமே படம் பாக்கற ஆசையே போய்டுச்சு.உங்க விமர்சனம் படிச்ச பிறகு ரிஸ்க் எடுக்க நான் தயாரா இல்லைங்கோ.குருவில கொத்துன காயமே இன்னும் ஆறலைங்க.

இனிய பொங்கல் வாழ்த்துகள். :))))

Cable Sankar said...

//மொத்ததில் வில்லு - பார்கிறவன் தலயில பாராங்கல்லு.....(SUN Tv - top 10 style)//

:):):)

Cable Sankar said...

//குருவில கொத்துன காயமே இன்னும் ஆறலைங்க.
//

அப்படின்னா நோ ரிஸ்க்.. பட்டாம்பூச்சி..

வண்ணத்துபூச்சியார் said...

அப்பா... முடியலை...

மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????

கடவுளே... எனக்கு இந்த 2009ல் நல்ல புத்தி கொடுப்பா..

செவ்வானம் said...

அப்ப சங்கரன்னா,
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக-- எதிர் பார்க்கலாம்......

Cable Sankar said...

//மேஜர் சரவணன்... என்ன கொடுமை சார் இது.... ?????//

கொடுமையில்லங்க அது.. காமெடி.. இந்த வருடத்தின் முதல் சூப்பர் காமெடி..

Cable Sankar said...

//அப்ப சங்கரன்னா,
இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக-- எதிர் பார்க்கலாம்.//

நிச்சயமாய் கலைஞர் டிவியில் ஒரு வருடத்துக்குள் வரும்.

Anonymous said...

nayantharavoda kajini jollu ithula illa polirukku

Cable Sankar said...

//nayantharavoda kajini jollu ithula illa polirukku//

யாரு சொன்னது.. படம் பாக்கிறதுக்கு இருக்கிற ஒரே நல்ல விஷயம் நயந்தாராதான்..

பிரபு said...

.////
பார்க்க வந்த நம் பழியையும் வாங்கும் கதை.
///

செம பன்ச்

வண்ணத்துபூச்சியார் said...

எச்சரிக்கை:

பார்க்காதவர்கள்: புது வருடத்தின் அதிர்ஷ்டசாலிகள்..

மீறி ரிஸ்க் எடுப்பவர்கள் மிகுந்த தைரியசாலிகள்..

பார்த்தவர்கள்: துரதிருஷ்டசாலிகள்.


இதற்கு மேல் விமர்சனம் தேவையில்லை.

Cable Sankar said...

//செம பன்ச்//

நன்றி பிரபு.. உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்.

அத்திரி said...

ஒரு பன்ச் டயலாக்.......

வில்லு..........பவரு டல்லு......ஆங்ங்ங்ங்ங்ங்ன்..............

கண்ணன் said...

தலைவா...வாடா மாப்பிள்ளை பாட்டுல..வடிவேல் கலக்கல் கிரப்பிக்ஸ் பத்தி ஒன்னும் சொல்லுலியெ??..தாங்க முடியலை சாமியோவ் :((

Rafiq Raja said...

இந்த படங்களை பார்த்த துரதிர்ச்டாசளிகளில் நானும் ஒருவன் ஆகி விட்டேன் என்பதால், நானும் கருத்தை பதிகிறேன்.

// அதிலும் விறைப்பாய் நடிக்கிறேன் என்று அவர் நடிக்கும் காட்சி செம காமெடி.. //
செம்ம காமெடி ங்க...

// அதிலும் 1980ன் கிளைமாக்ஸ் நம்மை ரொம்பவே சோதிக்கிறது //
அப்படி சொல்ல முடியாது, பாபி தியோல் நடித்த வெற்றி படமான் soldier படத்தின் அப்பட்டமான காப்பி இது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும் ..... கதையில் இருந்த கிளைமாக்ஸ் சீன் வரை.... அந்த படத்தில் இது மிக நன்றாவாக எடுக்க பட்டது... காப்பி அடிச்சே வாழ்கை ஓடும், பிரபு தேவா இம்முறை அந்த காப்பியில் கூட கோட்டை விட்டு இருக்கிறார் என்று நன்றாக தெரிகிறது.

// வில்லு.. டார்கெட் இல்லாதது. //
அட அம்பே இல்லேங்குறேன்....

வடிவேலு காமெடியும் சமீப காலங்களாக விவேக் மாறி சொதப்ப ஆரம்பித்து விட்டது என்பதற்கு இது ஒரு சான்று..... திரும்ப வர முயற்சிக்கும் கவுண்டமணி ஆவது காமெடி சீன்களை தூக்கி நிறுத்துவார் என்று நம்புவோமாக.

நயன்தாரா ஏனோ அவளவு அழகாக இல்லை என்று ஒரு எண்ணம்... maybe Over-Exposed face (including body ;)) என்ற காரணமாக இருக்குமோ :)

ரஃபிக் ராஜா
காமிக்கியல் & ராணி காமிக்ஸ்