Posts

Showing posts with the label Good Night Good Morning

Good Night Good Morning

Image
  இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா? வெட்டியாய் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பேசிக் கொள்வதில் என்ன பெரிய சுவாரஸ்யமிருந்து விடப் போகிறது?. இம்மாதிரியான பேச்சில் அவ்விரண்டு பேருக்குத்தான் சுவாரஸ்யமான ஸ்வீட் நத்திங்காக இருக்குமேயன்றி, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமா? ஒரு நாள் இரவு போன் பேச்சில் கடலைப் போட்டு, காதல் சொல்லி, பிரிவு உண்டாகி, அந்த சிறிய பிரிவு மேலும் அவர்கள் உறவை நெருக்கமாக்க முடியுமா? சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா? இப்படியெல்லாம் தொடர்ந்து பல கேள்விகளை உள்ளடக்கியவரா நீங்கள் உங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும். பிரபல பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சுதீஷ்காமத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டியன் ஆங்கிலப் படம். அமெரிக்காவில் இதை இண்டிபெண்டட் மூவி என்று சொல்வார்கள்.