Thottal Thodarum

Dec 29, 2014

கொத்து பரோட்டா - 29/12/14

தொட்டால் தொடரும்
வழக்கமாய் நான் கடந்து சென்ற வருடங்களை ரீவைண்ட் செய்து பார்க்கும் பழக்கமில்லாதவன். நல்லதோ கெட்டதோ எல்லாத்தையும், அனுபவிச்சு, உணர்ந்து, புரிந்து, திகைத்துதானே கடந்து வந்திருக்கிறோமென்பதால் கூட இருக்கலாம். ஆனால் 2013 ஜூலையில் கமிட் ஆகி,  பற்பல தடைகளைத் தாண்டி, படப்பிடிப்பு முடிந்து, பர்ஸ்ட் காப்பி தயாராகி, சரியான வெளியிடும் தருணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறது எங்களது ”தொட்டால் தொடரும்”. இது என் முதல் படமாதலால் இதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் அனைத்தையும் ஒர் பாடமாய்த்தான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். நல்லா எழுதுறவன், , அறிவா பேசுறவனெல்லாம் நமக்கு துணையாய் தோதா இருப்பாங்கன்னு  அவசியமில்லைங்கிறதை புரிஞ்சிக்க பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சும்மா வருவாளா சுகுமாரி?. எப்ப ரிலீஸ்? என்று கேட்பவர்களுக்கு, வரிசையாய் பெரிய படங்களின் அணிவகுப்பு இருப்பதாலும் ரிலீஸ் செய்வதற்கான சரியான நேரத்தை கணக்கிட்டு கொண்டிருக்கிறோம். வரும் ஜனவரி 2015 தொட்டால் தொடரும் உங்கள் பார்வைக்கு
@@@@@@@@@@@@@@@@@@

Dec 25, 2014

கோணங்கள் -12

கோணங்கள் 12 - பவன் குமார் எப்படிச் சாதித்தார்?

தமிழில் கிரவுட் ஃபண்டிங் சாத்தியமா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம்தான். ஸ்டூடியோ அமைப்பின் கீழ் இயக்கும் ஹாலிவுட்கூட ‘இண்டிபெண்டண்ட் சினிமா’ எனும் சின்னப் பட தயாரிப்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகளவில் கிரவுட் ஃபண்டிங் முறையில் படங்களைத் தயாரிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சமரசங்களுக்கு இடம்கொடுக்காத இண்டிபெண்டெண்ட் இயக்குநர்களே.

Dec 22, 2014

கொத்து பரோட்டா - 22/12/14

நடு நிசிக்கதைகள்
சென்ற வாரம் ஏதோ ஒரு படத்திற்கு போய்விட்டு அசோக்நகர் ரவுண்டானா அருகில் வந்து கொண்டிருந்த போது அங்கே ஒரு செக் போஸ்டை உருவாக்கியிருந்தார்கள். வழக்கமாய் உதயத்திற்கு முன் தான் நிற்பார்கள் இப்போது திடீரென இடத்தை மாற்றி, நின்றிருக்க, எனக்கு அப்போதுதான் திடீரென ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்ற நியாபகம் வர, எஸ்பிஐ ஏடி எம் ஒன்றிருக்க வண்டியை ஓரமாய் நிறுத்திவிட்டு, ஏடிஎம்மை நோக்கி நடந்தேன். பின்னாடியே போலீஸ் கான்ஸ்டபிள் மூச்சிரைக்க ஓடிவந்தார். “அலோ.. எங்க போறீங்க? வாங்க இங்க.. தண்ணியடிச்சிருக்கீங்களா?” என்று கேட்டார். ஒரு நிமிடம் அவரை ஏற இறங்க பார்த்துவிட்டு, ” இல்லை” என்றதும் அவர் முகம் வாடி வதங்கி விட,  ” நான் ஏடிஎம்முக்கு போறதுக்காக,  வண்டிய இங்க நிறுத்தினேன்.  ஸ்பாட்டுல நின்னு வண்டியை பிடிக்கிறத பாருங்க. அத்தோட தண்ணியடிச்சிட்டு வண்டி ஓட்டக்கூடாதுன்னுதான் ரூல்ஸ்.. நான் வண்டிய நிறுத்திட்டு நிக்கிறேன். என்ன?.’ என்றதும் அவர் முகம் போன போக்க பார்க்கணுமே.. ஆயிரம் கண் வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@

Dec 18, 2014

கோணங்கள் -11

கிரவுட் ஃபண்டிங் குட்டிக்கரணம்!

காவிரி நீர் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு திரைப்படத்தை இயக்க முன்வந்தார் சேரனின் உதவியாளரான சரச் சூர்யா. ‘பச்சை மனிதன்’என்று தலைப்பிடப்பட்ட இந்தப் படத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற படக் குழு விரும்பியது.ஆகவே படத்தின் நுழைவுச்சீட்டையும் திரைக்கதைப் புத்தகங்களையும் பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோரிடம் விற்றுத் திரட்டப்படும் பணத்தில் படத்தைத் தயாரிக்கப் போகிறோம் என அறிவித்தது படக்குழு. ஆனால் 13 லட்சத்துக்குமேல் பணம் வசூலாகவில்லை. இதனால் இரண்டு கட்டப் படப்பிடிப்பு நடத்தப்பட்டதோடு அந்தப் படத் திட்டம் கைவிடப்பட்டது.

Dec 15, 2014

கொத்து பரோட்டா - 15/12/14

ஆவணப்படம்
சினிமா வியாபாரம் புத்தகத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கவிருக்கும் ஆவணப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். இதைக் குறித்து நிறைய வி.ஐ.பிக்களிடம் பேசிய போது மனம் திறந்து வரவேற்று, உடனடியாய் எனக்கு பேட்டியெடுக்க அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சினிமா வியாபாரம் ஆவணப்படமாய் சிறப்பாய் வெளிவருமென்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@

Dec 13, 2014

எண்டர் கவிதைகள் -26

வேண்டாமென்று 
முடிவெடுத்திருந்தாலும்
காத்திருத்தல்
செய்யச் சொல்கிறது
நாளையேனும் சீக்கிரம் வா
கேபிள் சங்கர்

Dec 11, 2014

சாப்பாட்டுக்கடை - கண்ணப்பா - தட்டு இட்லி

பேலியோ டயட்டிலிருக்கும் என் வாயையும், வயிற்றையும் கிண்ட வைக்கும் ஒர் போட்டோவை தோழி சோனியா ட்வீட்டரில் போட்டிருந்தார். அட ஒரு நாள் ஒரே ஒரு நாள் சீட் செய்தால் தவறில்லை என்று பேலியோ சித்தாந்தத்தில் சொல்லியிருப்பதால் விட்றா வண்டிய என்று நேற்றிரவு விட்டோம் ஆர்ம்ஸ் ரோடுக்கு. 

Dec 9, 2014

கோணங்கள் -10

கோணங்கள் 10 - முகமறியா முதலீடு... தேவை உஷார்!

தமிழ் சினிமா உலகில் தற்போது அதிகம் அடிபடும் இரண்டு வார்த்தைகள் ‘கிரவுட் ஃபன்டிங்’. சினிமா என்பதே ரசிகர்கள் கூட்டமாகத் திரையரங்கிற்கு வந்து கொட்டிக் கொடுக்கும் விஷயம்தானே, இதில் என்ன ஸ்பெஷல் எனக் கேட்கும் வெள்ளந்திகளை விட்டு விடுங்கள். இது பற்றி அக்கறையுடன் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கட்டத்துக்கு நாம் வந்துவிட்டோம்.

Dec 8, 2014

கொத்து பரோட்டா -08/12/12

நடு நிசி (பகல்) கதைகள்
சென்ற வாரம் நண்பன் பெஸ்கியின் வீட்டு கிரகப்பிரவேசம். அதற்காக நானும் கே.ஆர்.பியும் சென்று கொண்டிருந்தோம். மீனம்பாக்கம் தாண்டியவுடன் சிக்னலைத் தாண்டி ஒர் இடத்தில் ரேபான் போட்ட ஓர் டிராபிக் கான்ஸ்டபிள் திடீரென புகுந்து வழி மறித்தார் அங்கே இருந்த மக்கள் கிராஸ் செய்வதற்காக,
நாங்களும் நிறுத்தினோம். கொஞ்சம் அவரின் அருகில். ரேபானுள் வழியாய் என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கேயிருந்த பெண் காவலரைப் பார்த்து “ உங்க டீடெயில் கொடுத்துட்டு போங்க’ என்றார். “ஏன்?” என்று கேட்டதற்கு சும்மாதான் என்றார். வழக்கம் போல வந்த பெண் போலீஸிடம் “என் போன் நம்பர் தவிர எல்லா டீடெயிலும் கொடுப்பேன்”. என்றதும் வாழக்கம் போல அவரும் ஏன் என்று கேட்க என் பர்சனல் டீடெயிலை கொடுக்க, அல்லது கொடுக்க கட்டாயப்படுத்த உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்றேன். அதை புரிந்து கொள்ளாமல் “பாருங்க சார்.. நமக்கு ரைட்ஸ் இல்லையாம்” என்று பொத்தாம் பொதுவாய் அங்கிருந்த ட்ராபிக் சார்ஜெண்டிடம் முறையிட, “சார்.. நான் உங்களுக்கு என் வண்டி பேப்பர், டீடெயில்ஸ், இன்சூரன்ஸ், என் லைசென்ஸ் எல்லாமே கொடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் என் பார்சனல் தொடர்பு விஷயங்களை உங்களுக்கு தர தேவையில்லை” என்று விளக்கிக் கொண்டிருக்கும் போதே, ரேபான் கான்ஸ்டபிள் என் வண்டியிலிருந்து சாவியை எடுத்தார். சட்டென கோபம் வந்து “ அவர் கையிலிருந்து என் சாவியை புடுங்கினேன். அவர் என்னிடமிருந்து இந்த ரியாக்‌ஷனை எதிர்பார்க்கவில்லை. “என் வண்டியிலிருந்து என் அனுமதியில்லாமல் சாவியை எல்லாம் எடுக்க கூடாது” என்றேன். “நீ ஏன் வண்டியை நிறுத்தலை?” என்று மிரட்ட ஆரம்பிக்க “நான் நிறுத்தாமத்தான் நீ இவ்வளவு நேரம் பேசுறியா? மிரட்டிப் பாக்குறியா? மிரட்டு கேஸ் போடேன் நான் எங்க போய் என்ன பண்றதுன்னு தெரியும்” என்றவுடன் சார்ஜெண்ட் விடுங்க விடுங்க என்று அவரிடம் சைகை செய்ய, “நான் சாவியை எடுக்கவேயில்ல.. நீங்கதான் என் கிட்டேயிருந்த் புடுங்கினீங்க?” என்றார் முட்டாள் தனமாய். நான் சிரித்துக் கொண்டே.. கிளம்பினேன். கிளம்பும் போது அந்த கான்ஸ்டபிள் அம்மணியிடம் என் விலாசத்தை எழுதச் சொல்லி எழுதிய லட்சணத்தை பார்த்தால் “அய்யோடா.. என்ன கொடுமைடா சாமி” கோழி கிறுக்கல் பரவாயில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@

Dec 2, 2014

கோணங்கள் -9


கோணங்கள் - 9: கற்பனையை எதில் கலக்கலாம்?

திட்டமிட்ட பட்ஜெட்டைவிடத் தாறுமாறான செலவு எப்படி அதிகரித்தது என்று தயாரிப்பாளருக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு இயக்குநருக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது. இங்கே ஒரு இயக்குநர் தயாரிப்பு நிர்வாகியாகவும் இருந்துவிட்டால் அது தயாரிப்பாளருக்குப் பெரிய வரம். படத்தின் பட்ஜெட்டில், அது எடுத்து முடிக்கப்பட்ட பிறகு அதை மக்களிடம் கொண்டுசெல்லும் விளம்பர பட்ஜெட்டும் கண்டிப்பாகச் சேர்க்கப்பட வேண்டும். மொத்த பட்ஜெட்டுக்குமான முழுமையான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொண்ட பின்னரே, படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும். ஆனால் திரைக்கதையில் கலக்கும் கற்பனையை ஒரு இயக்குநர் பட்ஜெட்டில் கலக்கும்போதுதான் தயாரிப்பாளர் நடுத்தெருவில் நிற்க வேண்டிவருகிறது.

Dec 1, 2014

கொத்து பரோட்டா -1/12/12

காவியத்தலைவன்
மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டே நாடகம், நடிப்பு, சினிமா என ஆர்வம் கொண்ட இரு இளைஞர்கள்.  இருவரில் ஒருவருக்கு எழுதுவதோடு, நடிப்பும், கொஞ்சம் வியாபாரமும் வரும். எனவே ஒரு அமெச்சூர் நாடக அமைப்பை உருவாக்கி, அதை மார்கெட் செய்ய ஒரு சபாவை நடத்த ஆரம்பித்து, அதில் தானும், நண்பரும் எழுதிய நாடகங்களை கதாநாயகனாய் நடித்து, அரகேற்றி தன்னையும், தன் நண்பனின் எழுத்தையும் மேடையேற்றி அழகு பார்த்தவர். நடிகராய் அவருக்கு அந்நாளில் கிடைத்த வெற்றியும், அதை சந்தைப் படுத்தியதால் அவர் நஷ்டம் அடைந்தாலும் கிடைத்த புகழ் வெறும் எழுத்தாளராய் இருந்த நண்பருக்கு கிடைக்கவில்லை என்று ஃபீல் செய்ய அரம்பித்தார். இதனால் பொறாமை ஏற ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களில் நடிக, இயக்குனர் சினிமா எடுக்கும் அளவிற்கு அடுத்த கட்டத்தை நோக்கி நகர, எழுத்தாள நண்பருக்கு பொறாமை காரணமாய் பிரிவு ஏற்பட்டு பின்னடைவு.