Posts

Showing posts with the label தொட்டால் தொடரும்

கொத்து பரோட்டா - 15/12/14

ஆவணப்படம் சினிமா வியாபாரம் புத்தகத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கவிருக்கும் ஆவணப் பட வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். இதைக் குறித்து நிறைய வி.ஐ.பிக்களிடம் பேசிய போது மனம் திறந்து வரவேற்று, உடனடியாய் எனக்கு பேட்டியெடுக்க அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. சினிமா வியாபாரம் ஆவணப்படமாய் சிறப்பாய் வெளிவருமென்ற நம்பிக்கை அதிகமாகியிருக்கிறது.  @@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -08/12/12

Image
நடு நிசி (பகல்) கதைகள் சென்ற வாரம் நண்பன் பெஸ்கியின் வீட்டு கிரகப்பிரவேசம். அதற்காக நானும் கே.ஆர்.பியும் சென்று கொண்டிருந்தோம். மீனம்பாக்கம் தாண்டியவுடன் சிக்னலைத் தாண்டி ஒர் இடத்தில் ரேபான் போட்ட ஓர் டிராபிக் கான்ஸ்டபிள் திடீரென புகுந்து வழி மறித்தார் அங்கே இருந்த மக்கள் கிராஸ் செய்வதற்காக, நாங்களும் நிறுத்தினோம். கொஞ்சம் அவரின் அருகில். ரேபானுள் வழியாய் என்னைப் பார்த்தவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கேயிருந்த பெண் காவலரைப் பார்த்து “ உங்க டீடெயில் கொடுத்துட்டு போங்க’ என்றார். “ஏன்?” என்று கேட்டதற்கு சும்மாதான் என்றார். வழக்கம் போல வந்த பெண் போலீஸிடம் “என் போன் நம்பர் தவிர எல்லா டீடெயிலும் கொடுப்பேன்”. என்றதும் வாழக்கம் போல அவரும் ஏன் என்று கேட்க என் பர்சனல் டீடெயிலை கொடுக்க, அல்லது கொடுக்க கட்டாயப்படுத்த உங்களுக்கு ரைட்ஸ் இல்லை என்றேன். அதை புரிந்து கொள்ளாமல் “பாருங்க சார்.. நமக்கு ரைட்ஸ் இல்லையாம்” என்று பொத்தாம் பொதுவாய் அங்கிருந்த ட்ராபிக் சார்ஜெண்டிடம் முறையிட, “சார்.. நான் உங்களுக்கு என் வண்டி பேப்பர், டீடெயில்ஸ், இன்சூரன்ஸ், என் லைசென்ஸ் எல்லாமே கொடுக்க கடமைப்பட்டிர...

கொத்து பரோட்டா -10/11/14

Image
தொட்டால் தொடரும் தொட்டால் தொடரும் படத்தின் புதிய 30 செகண்ட் டீசர். விரைவில் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்கப்படும். வரி விலக்கிற்காக காத்திருக்கிறோம்.உங்கள் கருத்துக்காக.. எங்களது புதிய டீசர் ####################################

தொட்டால் தொடரும் - தமன்

Image
தொட்டால் தொடரும் படத்தின் கதாநாயகன் தேடல் நடந்து கொண்டிருந்த நேரம். பெரிய நடிகர்கள் முதல் ரெண்டொரு படங்கள் நடித்த நடிகர்கள் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஹீரோக்களின் டேட்டும் சம்பளமும் பட்ஜெட்டுக்கு மேல் போக, அப் கம்மிங் ஹீரோக்களை பார்க்கலாம் என்று அலசிக் கொண்டிருந்த போது சட்டென என் மனதில் வந்தவர் இவர். மூன்று படங்களில் நடித்திருந்தார். இவரின் நடித்த முதல் படத்தில் இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த படம் பெரிய இயக்குனரின் படமாய் அமைந்தும் சரியாக போகவில்லை. மூன்றாவது படமும் அப்படியே. ஆனால் அவரிடம் ஒரு ஸ்பார்க் இருக்கிறது என்பது மட்டும் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. நண்பர் ஒருவர் மூலமாய் அவரைத் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றதும் நேரில் வந்து சந்தித்தார். மிகவும் ஹம்பிளாய், சாப்ட் ஸ்போக்கனாய் இருந்தார். 

கொத்து பரோட்டா - 25/08/14

Image
சேனல் எங்கும் யாராவது கோட்டு மாட்டிக் கொண்டோ, கொள்ளாமலோ பேசிக் கொண்டேத்தான் இருக்கிறார்கள். Donahue show தான் மெல்ல ஹிந்திக்கு போய் அரட்டை அரங்கம் ஆனது. பின்பு அதுவே நீயா நானா அது இது என ஏகப்பட்ட டாக்‌ஷோக்கள். இந்திய ஆங்கில சேனல்களில் அமீர்கான், சிமி, கரன் ஜோஹர் என பிரபலங்கள் எல்லாம் டாக் ஷோ நடத்தி வரும் வேளையில் சமீபத்தில் zcafe சேனலில் நிரஞ்சன் அய்யங்கார் என்பவரின் டாக் ஷோ பார்த்தேன். அந்த வாரம் அவர் காஜோலுடன் அளவளாவினார். அவர்கள் பேசியது மட்டுமில்லாமல். அதை படமாக்கிய விதமும் அட்டகாசமாய் இருந்தது. இரண்டு மூன்று கேமராக்கள், அதீத க்ளோசப்கள், வெவேறு லொக்கேஷன்கள் என விஷுவலாகவும் நன்றாக இருந்தது. மிக சுவாரஸ்யமான இரண்டு நண்பர்களிடையே நடைபெறும் பேச்சாய் அமைந்திருந்தது. நிரஞ்சன் அய்யங்கார் ஒர் “கே” வாம்.  கரன் ஜோகரின் நெருங்கிய நண்பர் என்ற சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். எனக்கு பிடித்த அந்நிகழ்ச்சியின் ஒர் எபிசோட் இங்கே.. @@@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா - 28/07/14

Image
கேட்டால் கிடைக்கும் எனக்கும் தலப்பாக்கட்டி ரெஸ்ட்டாரண்டுக்கும் ஏழரைப் பொருத்தம் ஏனென்றே தெரியவில்லை. ஆரம்ப காலத்தில் பிரியாணி நன்றாக இருந்தாலும், போகப் போக படு மோசமாய் போனது. அதுவும் 150 ரூபாய்க்கு  ரெண்டு கரண்டி பிரியாணியை கொடுத்துவிட்டு, பீசை தேடி கலைத்துப் போய் எங்கய்யா பீசு என்று கேட்டால் மட்டுமே நான்கைந்து பீஸை கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் வேறு வழியேயில்லாமல் நானும் எங்கள் ஹீரோவும் பெசண்ட் நகர் தலைப்பாக்கட்டியில் சாப்பிட போயிருந்தோம். இரவு நேரமாக இருந்தாலும் செம ஹூமிடிட்டி. வியர்த்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்ததும் ஏசியே இல்லை. ஏசி இல்லையா என்று கேட்டவுடன் மேல உக்காருங்க என்றார். அங்கிருந்தவர். மேலே ஏதோ ஒண்ணுத்துக்கில்லாத வகையில் குளூமை இருக்க, சாப்பிட வழக்கம் போல பிரியாணி ஆர்டர் பண்ணிவிட்டு காத்திருந்தோம். வியர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் தொப்பலாய் நனைய ஆரம்பித்துவிட்டோம். பிரியாணி வேறு சகிக்கவில்லை. பில் வந்தது 180 மேனிக்கு ரெண்டு பேருக்கு பிரியாணி பில்லோடு, சர்வீஸ் டேக்ஸ், மற்றும் வாட் போட்டிருந்தார்கள். இதற்குள் பக்கத்தில் சாப்பிட்டுக் கொ...

கொத்து பரோட்டா -14/07/14- தொட்டால் தொடரும், நளனும் நந்தினியும், Dawn of the Planet of the Apes, C2H,

Image
தொட்டால் தொடரும் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியீடு கடந்த 4ஆம் தேதி சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. திரைப்பட தயாரிப்பாளர் கே.ஆர். வெளியிட தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பெற்றுக் கொண்டார். திரையுலக பிரபலங்கள், பதிவுலக நண்பர்கள் என கல்யாண களை கட்டியது காலை முதலே. இதற்கு முன்னர் படத்தின் டிசைனையும், ப்ரோமோ சாங்க் டீசரை வெளியிட்டிருந்தோம். அதற்கு கிடைத்த நல் ஆதரவு கொடுத்த தைரியத்தோடு ஒன்றுக்கு ரெண்டாய் ட்ரைலர்கலையும், பாஸு பாஸு பாட்டையும் சேர்த்து மூன்று பாடல்கள் பத்திரிக்கையாளர்கள் மற்றும் மீடியா நண்பர்களுக்கு போட்டுக் காட்டி, பாடல் சிடி வெளியிடப்பட்டது.  ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த பாராட்டு மிகுந்த மகிழ்ச்சியையும், படத்தின் மேல் எனக்கிருக்கும் நம்பிக்கையையும் அதிகப்படுத்தியுள்ளது. SS Media  என்கிற விநியோக நிறுவனம் படத்தை வெளியிட ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.  பர்ஸ்ட் காப்பி எடுக்கப்படாமல் இருக்கும் நிலையில், ரஷ்களையும், டப்பிங்கிலும் பார்த்த படத்தை வைத்து அவர்கள் ஒப்பந்தம் போட்டிருப்பது எனக்கும்,  தயாரிப்பாளருக்கு மிக்க மகிழ்ச்சியை தந்திருக்கிறது.  பாடல் மற்றும...

கொத்து பரோட்டா -8/7/2014

Image
தொட்டால் தொடரும் படத்தின் ஆடியோ, ட்ரைலர் வெளியீடு மிகச் சிறப்பாய் நடைபெற்றது. இரண்டு நாட்களாய் நகம் கடித்து மழுங்கிப் போன விரல் நுனிகளுடனேயே அலைந்து கொண்டிருந்தேன். விழா அழைப்பு, ட்ரைலர், பாடல்கள் விஷுவல்களின் டி.ஐ. செக்கிங், குவாலிட்டி, சிங்க்,என பல டென்ஷன்கள். பாடல்களையும், விஷுவலையும் வெளீயிட்டு கைதட்டல் கிடைக்கும் வரை பதட்டம் இருந்து கொண்டுதானிருந்தது. கமலின் வசனம் போல பயமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் எல்லோருக்கும் முன்னால் வந்திருந்து விழா ஆரம்பிப்பதற்காக காத்திருந்தார்.  அவரை காக்க வைத்து விழா ஆரம்பித்தமைக்கு என் மன்னிப்பை இப்பதிவின் மூலமாகவும் கேட்டுக் கொள்கிறேன். பாடல்களும் ட்ரைலர்களும் வந்திருந்தவர்கள் அத்துனை பேருக்கும் பிடித்திருந்தது சந்தோஷத்தை தந்தது. பாஸு பாஸு பாடலுக்கு கிடைத்த வரவேற்பு தொட்டால் தொடரும் படத்தை மேலும் பல வெற்றிகளை நோக்கி இட்டுச் செல்லும் என்பது பார்வையாளர்களின் கரகோஷ வரவேற்பின் மூலமாய் தெரிந்தது. உங்கள் ஆதரவை எங்களது ட்ரைலர், மற்றும் வெளியிடப்பட்டிருக்கும் பாடல்களுக்கு கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்காக.. ...

தொட்டால் தொடரும் -பாஸு..பாஸு

Image
தொட்டால் தொடரும் பட வேலைகள் ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது. இன்னும் சிஜியிலும், டிஐயிலும் சில சின்னச் சின்ன வேலைகள் தான் பாக்கி. டைகர் ஆடியோ நிறுவனம் எங்களது பட பாடல்களை வாங்கி வெளியிட இருக்கிறார்கள். எங்கள் படத்தின் முதல் டீசராய் பாடலுக்கான டீசரை நேற்று இணையத்தில் வெளியிட்டோம். பாடலை நாளை புதன்கிழமை ரேடியோவிலும், இணையத்தில் யூடியூபிலும் ஒரே சமயத்தில் வெளியிடுகிறோம். பாஸு .. பாஸு என்கிற இப்பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார். பாடலை கார்க்கிபவாவும், நானும் இணைந்து எழுதியிருக்கிறோம். உங்கள் பார்வைக்காக கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா - 07/04/14

தேர்தல் நெருங்க.. நெருங்க.. எல்லா இடங்களிலும், அவரவர் ஆதரவு கட்சிகள்தான் பெரும்பான்மையான இடங்களை வெல்லும் என்ற பேச்சுக்கள் சண்டைகளாய் மாறிக் கொண்டிருக்கிறது. யார் எவ்வளவு ஜெயிச்சா என்ன நாம இப்படியேத்தான் இருக்கப் போறோம்னு புலம்பிட்டிருக்கிறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், இவர்களுடய பேச்சும் சண்டையும் தான் மக்களின் மனநிலையை வெளிக் காட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கென்னவோ இவர்களின் பேச்சின் வழியாய் புரிவது தமிழ் நாட்டை பொறுத்த வரை முதலிடம் அதிமுகவும், இரண்டாவதாக ப.ஜ.க கூட்டணியும், மூன்றாவதாய் தான் திமுக வருமென்று தெரிகிறது. நாற்பதும் நமதே என்பதெல்லாம் எந்த கட்சிக்கும் உய்யலாலாதான். இங்கே யாரும் ஒழுங்கில்லை என்பதையும், பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட் என்ற ப்ளஸ் பாயிண்டை எல்லா அரசியல் வாதிகளும் தெளிவாய் உபயோகிக்கிறார்கள்.  இல்லாவிட்டால் எந்த தேசிய கட்சியுடனோ, அல்லது திராவிட கட்சிகளுடனோ கூட்டணி வைக்க மாட்டேன்னும், என் வீட்டுலேர்ந்து யாராச்சும் அரசியலுக்கு வந்தா என்னை சாட்டையால அடிங்கன்னு சொன்ன ராமதாஸ். மின் வெட்டேயில்லை என்று மாறி மாறி கூறினாலும், தொடர்ந்து தமிழகத்தில்  பல இடங்களில் மின் வெட்ட...

தொட்டால் தொடரும் - ஒர் ஜாலி இண்டர்வியூ

Image
கேபிள் சங்கர்

கொத்து பரோட்டா -27/01/14 - கோலி சோடா, தொட்டால் தொடரும், நடு நிசிக்கதைகள், மணிரத்னம் படைப்புகள், A Separation, Serbian Film, மல்ட்டிப்ளெஸ்கள்.

Image
தொட்டால் தொடரும் தினசரி விளம்பரம் நேற்று வெளியானதிலிருந்து வந்த போன்கால்களை வைத்து பார்க்கும் போது, பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருப்பதையும் உணர முடிந்தது.  ஒவ்வொரு போன் காலிலும், அவர்கள் குரலில் தெரிந்த சந்தோஷம், என்னுள் மேலும் உற்சாகத்தையும் பயத்தையும் கொடுத்தது. நிச்சயம் எல்லாம் வல்ல இறைவனின் துணையோடும், உங்கள் அன்பின் துணையோடு சிறப்பாய் வர உழைக்கிறேன்.  @@@@@@@@@@@@@@@@@@@@

கொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானைக்கூட்டம், விழா, அடல்ட் கார்னர், கங்காரு

Image
இணைய உலகில் 2006 முதல் இயங்கி வந்தாலும், வலைப்பதிவராய் தீவிரமாய் ஆரம்பித்தது 2008லிருந்துதான். அப்போதிலிருந்து என் வாழ்கையில் நோ லுக்கிங் பேக் என்றே சொல்ல வேண்டும். அதற்கு காரணம் வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களாகிய நீங்கள். இதில் 2010 ஆண்டு என் வாழ்க்கையில் ஒர் முக்கியமான வருடம் அவ்வருடத்தில் தான் என்னுடய முதல் சிறுகதை தொகுப்பான  லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் வெளியானது. அதன் பிறகு  இந்த நான்கு வருடங்களில் சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, கொத்து பரோட்டா, சினிமா என் சினிமா, தெர்மக்கோல் தேவதைகள்,  கேபிளின் கதை, என அடுத்தடுத்து புத்தகங்கள் வெளியாயின. எல்லா புத்தகங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவு அபாரம். முதல் புத்தகமே போட்ட ஆயிரம் காப்பி விற்பது என்பது கனவான விஷயம். அக்கனவும் பலித்தது. அடுத்த வெளிவந்த சினிமா வியாபாரம் புத்தகம் என் வாழ்க்கையில் இன்னொரு கதவை திறந்துவிட்ட புத்தகம். கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, இரண்டாம் பதிப்பாய் மதி நிலையம் மூலம் வெளிவந்து இன்றும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்ற புத்தகம். இப்படி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின...

கொத்து பரோட்டா -16/12/13

Image
தொட்டால் தொடரும் வெள்ளியன்று இணையத்தில் முதல் முறையாய் “தொட்டால் தொடரும்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசைனை அறிமுகப்படுத்தினோம். திரையுலக நண்பர்கள், விமர்சகர்கள, பதிவர்கள், வாசக நண்பர்கள் என அனைவராலும் பெரும் வரவேற்பை பெற்றது. கல்யாண சமையல் சாதம் தயாரிப்பாளர், அருண் வைத்தியநாதன், சி.வி.குமார், ரவீந்தர் சந்திரசேகரர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்,  அழைத்து பாராட்டி வாழ்த்தினார்கள். எல்லோருக்கும் இப்படத்தின் மீது ஒர் எதிர்பார்ப்பு இருப்பதை நினைத்து ஒர் பக்கம் சந்தோஷமாய் இருந்தாலும், இன்னொரு பக்கம் பொறுப்பு அதிகமாகவது நினைத்து லேசாய் மிக லேசாய் நடுக்கம் வரத்தான் செய்கிறது. எனினும் உங்களின் மேலான ஆதரவில் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கையோடு உங்களின் பார்வைக்கு.. ஒர் வேண்டுகோள். பதிவுலக நண்பர்கள் அவரவர் வலைப்பூக்களில் “தொட்டால் தொடரும்”  டிசைனை போட்டு உங்கள் ஆதரவை நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும் ஃபேஸ்புக், டிவிட்டர் தொடர்புக்கு   https://www.facebook.com/ThottalThodarum  ,  https://twitter.com/thottalthodarum   @@@@@@@@@@@@@@@@@@@@@@ ...

கொத்து பரோட்டா - 25/11/13

Image
தொட்டால் தொடரும் 42 நாட்கள் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில தினங்களில் கதைக்கு முக்கியமான காட்சிகளையும், ஒரு பாடல் காட்சிகளையும் எடுத்துவிட்டால் எல்லாம் சுபம். இச்சமயத்தில் என் படத்தின் நாயகனைப் பற்றி ஒன்று சொல்லியாக வேண்டும். இரண்டாம் கட்ட பாண்டிச்சேரி படப்பிடிப்பின் போது ஒரு ஆக்‌ஷன் ப்ளாக்கிற்க்காக குதித்த போது அவருக்கு வலது கால் முட்டியில் லிகமெண்ட் டேர் ஆகிவிட்டது.  கதையில் முக்கியமான நேரம் அது. வலியில் துடித்தார். தயாரிப்பாளர் துவார் சந்திரசேகர்  அன்றைக்குத்தான் சிங்கப்பூருக்கு கிளம்பியிருந்தார். விஷயம் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாய்  ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று ஆக வேண்டிய காரியங்களை பாருங்கள் என்று சொல்ல, தமன் சற்று நேரம் யோசித்து,.. இருக்கட்டுங்க.. “என் ஒருத்தனால ஷூட்டிங் பாதிக்கக் கூடாது என்று சொல்லி, அன்றைக்கு மட்டுமில்லாமல் இன்றைக்கு வரை அதற்கான பிஸியோ ட்ரீட்மெண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். அவரின் டெடிக்கேஷனுக்கு என் நன்றிகள். @@@@@@@@@@@@@@@@@@@@@@

தொட்டால் தொடரும் -குட்டியண்ணன் ஜம்ப்

Image
ஒரு வண்டிக்கு குறுக்கே இன்னொரு கார் நுழையுது. அதைப் பார்த்த வண்டிக்காரன் சடன் ப்ரேக் அடிக்கிறான். அது ஸ்கிட் ஆகி அப்படியே வண்டி மேல இடிச்சி பறந்து போய் விழுது. இப்படி எழுதும் போதும், சொல்லும் போது சுலபமாய் இருக்கும் விஷயம் காட்சிப் படுத்தும் போது சுலபமாய் இருப்பதில்லை. அப்படி இருக்காது என்று  கேட்டு, பார்த்தறிந்திருந்தாலும் அதை நாமே நம் படத்திற்காக செய்யும் போது புதிய அனுபவமாய்த்தான் இருக்கிறது.

கொத்து பரோட்டா - 14/09/13

Image
Gravity விண்வெளியில் உள்ள சாட்டிலைட்டை ரிப்பேர் செய்ய  போன மூன்று பேர், பூமியைப் போலவே விண்வெளியிலும் நாம்  சாட்டிலைட்விட்டு, போட்டிருக்கும் சாட்டிலைட் கார்பேஜுகளால் ஏற்படும்  புயலில் மாட்டிக் கொண்டு தாய்கலத்திலிருந்து விடுபட்டவர்கள் எப்படி தப்பினார்கள் என்பதே கதை.  ஏற்கனவே இது மாதிரி நிறைய கதைகளில், அப்பல்லோ 13 போன்ற படங்களில் வந்த விஷயம் தான் என்றாலும், அதை எடுத்த விதம் வாவ்.. அதுவும் 3டியில்.. மறக்க முடியாத ஒர் அனுபவம். மூன்று நடிகர்கள். அதில் ரெண்டு பேர் பாதி படத்திற்குள் காலி. மிச்சமிருக்கிற சாண்ட்ரா புல்லக்கை மட்டுமே வைத்துக் கொண்டு, அவர் மிதந்தால் நாம் மிதந்து, அவர் பல்டி அடித்தால் நாமும் அடித்து, அவருக்கு மூச்சு முட்டினால் நமக்கு முட்டி.. அவர் தீயில் மாட்டிக் கொண்டு வெந்தால் நாம் வெந்து.. வாவ்..வாவ்..  படம் ஆரம்பிக்கும் ஷாட் ஒன்றே போதும் இவர்களின் டெக்னாலஜி பிரில்லியன்ஸை பாராட்ட.. மொத்த தியேட்டரும் பின் ட்ராப் சைலன்ஸில் பார்த்தார்கள். Being there  என்பதற்கு ஒர் சிறந்த உதாரணம் இந்த படம். ஐமேக்ஸில் பார்த்தவர்கள் பாக்யவான்கள். Don't Miss @@@@@@@@...

உங்கள் வாழ்த்துக்களையும் அன்பையும் வேண்டி.. தொட்டால் தொடரும்..

இன்றைய நாள் என் வாழ்நாளில் ஒர் முக்கியமான நாள். துவார் ஜி. சந்திரசேகரனின் FCS Creations தயாரிப்பில் என் முதல் படமான “தொட்டால் தொடரும்” திரைப்படத்திற்கான ஆரம்ப நாள். நடிப்பு, எழுத்து, வசனம், உதவி இயக்குனர் என்ற பல படிகளைத் தாண்டி இயக்குனர் என்கிற நிலைக்கு என்னை உயர்த்தப் போகும் நாள். இந்த வாய்ப்பை நல்கிய தயாரிப்பாளர் துவார்.ஜி.சந்திரசேகரனுக்கு என் நன்றிகள். இந்த இனிய நாளில் என் தந்தையில்லாததை நினைத்து வருத்தமிருந்தாலும், எங்கிருந்தாலும் அவரின் கனவை நினைவாக்கும் எந்தன் முயற்சியை ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையோடு, நண்பர்களாகிய உங்கள் அன்பையும், ஆசியையும் வேண்டி.. தொட்டால் தொடரும்... உங்கள் கேபிள் சங்கர்