Thottal Thodarum

Aug 25, 2014

கொத்து பரோட்டா - 25/08/14

சேனல் எங்கும் யாராவது கோட்டு மாட்டிக் கொண்டோ, கொள்ளாமலோ பேசிக் கொண்டேத்தான் இருக்கிறார்கள். Donahue show தான் மெல்ல ஹிந்திக்கு போய் அரட்டை அரங்கம் ஆனது. பின்பு அதுவே நீயா நானா அது இது என ஏகப்பட்ட டாக்‌ஷோக்கள். இந்திய ஆங்கில சேனல்களில் அமீர்கான், சிமி, கரன் ஜோஹர் என பிரபலங்கள் எல்லாம் டாக் ஷோ நடத்தி வரும் வேளையில் சமீபத்தில் zcafe சேனலில் நிரஞ்சன் அய்யங்கார் என்பவரின் டாக் ஷோ பார்த்தேன். அந்த வாரம் அவர் காஜோலுடன் அளவளாவினார். அவர்கள் பேசியது மட்டுமில்லாமல். அதை படமாக்கிய விதமும் அட்டகாசமாய் இருந்தது. இரண்டு மூன்று கேமராக்கள், அதீத க்ளோசப்கள், வெவேறு லொக்கேஷன்கள் என விஷுவலாகவும் நன்றாக இருந்தது. மிக சுவாரஸ்யமான இரண்டு நண்பர்களிடையே நடைபெறும் பேச்சாய் அமைந்திருந்தது. நிரஞ்சன் அய்யங்கார் ஒர் “கே” வாம்.  கரன் ஜோகரின் நெருங்கிய நண்பர் என்ற சுவாரஸ்யமான பேச்சுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் நிறைய சொல்கிறார்கள். எனக்கு பிடித்த அந்நிகழ்ச்சியின் ஒர் எபிசோட் இங்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@


எனக்கு டாக் ஷோக்கள் பிடிக்கும். அதை விட அம்மாதிரியான டாக் ஷோக்களில் கலந்து கொள்வது மிகவும் பிடிக்கும். பேட்டிகளின் முக்கியமான விஷயமே கேள்வி கேட்பவரின் கேள்விகளும், அதை கேட்கும் விதமும் தான். அதற்கு நிகழ்ச்சியை நடத்துபவர் கலந்து கொள்பவரைப் பற்றி முழுமையாய் தெரிந்து கொண்டிருந்தால் ஒரு விஷயத்திலிருந்து அடுத்த விஷயத்திற்கு பேட்டி கொடுப்பவரை கடத்திக் கொண்டு போய் நிகழ்ச்சியை சுவாரஸ்யப் படுத்த முடியும். பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பேட்டியெடுப்பவருக்கு பேட்டி கொடுப்பவரைப் பற்றி எதுவும் தெரியாமல் பொத்தாம் பொதுவாய் கேள்விகள் கேட்பதால் நிகழ்ச்சி ட்ரையாக போவதை தவிர்க்க முடிவதில்லை. அதுவும் அரை மணி நேரத்திற்கு  என்றால் ரொம்பவே கஷ்டம். சில நிகழ்ச்சிகளில் நானே எந்த மாதிரி கேள்விகள் கேட்கலாம். அப்படியான கேள்விகள் கேட்பதால் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யப்படுத்தலாம் என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். ஒர் பிரபல டிவியில் ப்ளாக் பற்றி பேச அழைத்திருந்தார்கள். நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று ஒருவரை அறிமுகம் செய்தார். கேபிள் சங்கர் என்று பெயரை மட்டுமே நினைவில் வைத்து என்னை கரடு முரடான ஆளாய் எதிர்ப்பார்த்திருக்க, பார்த்த மாத்திரத்தில் என் பெயர் காரணம் மட்டுமே ஏன் என்று கேட்டு தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வம், ப்ளாக், ட்வீட்டர், ஷோசியல் நெட்வொர்க் என எதைப் பற்றியும் தெரியாமல் ப்ளாக் பற்றிய பேட்டிக்கு வந்திருந்தார். முதலில் அவருக்கு ப்ளாக் பற்றி விளகக்வே ஒரு மணி நேரம் ஆனது தனிக்கதை. அது போல இல்லாமல் சமீபத்தில் யூ ட்யூபில் Rumble in English  என்று ஆங்கிலத்தில் டாக்‌ஷோ நடத்தி வந்தவர்கள் என்னை அதில் பேசவும் அழைத்திருந்தார்கள். அதற்காக அவர்களின் ஷோவை பார்த்தேன்.  அதை தமிழில் செய்தால் நன்றாக இருக்குமே என்று யோசித்துக் கொண்டிருந்த போது தமிழில் ஆரம்பித்து மூன்றாவது எபிசோடில் என்னை பேச அழைத்தார்கள். பேட்டியெடுத்த தீபா என்னுடய தோழி என்பதால் எனக்கும் அவருக்குமான பேச்சு மிக சுவாரஸ்யமாக, இயல்பாக அமைந்தது என்றே நினைக்கிறேன். நான் முன் பத்தியில் எழுதியது போல, டெக்னிக்கலாய் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் இந்த எபிசோட் கண்டெண்டாக சுவாரஸ்யமாய் வந்திருக்கிறது என்பதை நான் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதை மீறி தெரிகிறது. உங்கள் பார்வைக்கு. விஷுவலாய் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம். பட்ஜெட்டும், நல்ல வீவர் ஷிப்பும் யுடியூபில் கிடைக்கும் பட்சத்தில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
தொட்டால் தொடரும்
பர்ஸ்ட் காப்பி பார்ப்பது என்பது ஒர் விதமான கிளுகிளுப்பான, த்ரில்லான பதட்டமான விஷயமும் கூட. எல்லா டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் இதைத் தாண்டித்தான் வர வேண்டும். டைரக்டரை பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளர் நிறைவாய் இருப்பது முதல் கட்ட திருப்தியை கொடுப்பது. அந்த படப்புடன்,  சென்ற வாரம் தொட்டால் தொடரும் படத்தின் பர்ஸ்ட் காப்பி ரெடியானதும், சிங்கப்பூரில் இருக்கும் தயாரிப்பாளருக்கு படம் போட்டுக் காட்டினேன். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த தயாரிப்பாளர் “நல்லா பண்ணியிருக்கீங்க சங்கர்” என்றார். சட்டென கொஞ்சம் ரிலாக்சானேன். உடன் படம் பார்த்த டெக்னீஷியன்களும் அதே கருத்தை சொன்னார்கள். தயாரிப்பாளரின் நண்பர் மகன்கள் இரண்டு பேர் தான் வெளி ஆட்கள். அவர்களின் கருத்து அறியத்தான் ரொம்பவும் ஆர்வமாய் இருந்தேன். வழக்கம் போல கை கொடுத்துவிட்டு நல்லாருக்கு என்று சொல்லிவிட்டு போனார்கள். தனியே அழைத்து நிஜமாத்தான் சொல்றீங்களா? என்று அஞ்சலி ரேஞ்சுக்கு கேட்டேன். அப்படி கேட்டதுதான் தாமதம் அரை மணி நேரத்தில் படத்தை பற்றி தெளிவாய் கூறி அதனாலத்தான் நல்லாருக்குன்னு சொன்னேன் என்றார்கள். ரிலாக்ஸ்ட்..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பஸ்களின் வருகை நேரங்களைப் பற்றி அறிய ஆப் தயாரிக்க போகிறார்களாம். முதல்ல நேரத்திக்கு பஸ்ஸை விட்டுட்டு ஆப்’பை விட்டா நல்லாருக்கும்

 • மை ப்ரொடியூசர் ஹேப்பி.. ஐயாம் ஹேப்பி..:)))) தொட்டால் தொடரும் #

  • சரியா வரலைன்னா தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருக்கணும்னு சொல்றவங்க யாரும் அவங்க ப்ராஜெக்டுக்கு அப்படி செய்வாங்களான்னு யோசிக்கிறேன்.

   • சமயங்களில் உரத்த குரலில் சொல்லப்படும் பொய்களை ஆமோதிக்க வேண்டியிருக்கிறது. #தட் எரிச்சல் மொமெண்ட்

    • கிண்டி அருகில் காலேஜ் பசங்க ஏதோ போராட்டமாம். கத்திபாரா ப்ரிட்ஜுலேர்ந்து சைதாப்பேட்டை வர, 2 மணி நேரம் ஆகியிருக்கிறது.

     • டொரண்டோ விழாவில் பங்கேற்கும் திரைப்படமான ”காக்கா முட்டை” இயக்குனர் மணிகண்டனுக்கு வாழ்த்துக்கள். சந்தோஷமாய் இருக்கிறது.

      • நாயோ, காரோ, நாம ஓடாம திரும்பி நின்னா.. அதுவும் நின்னுரும்.  அட அட அட என்ன ஒரு அவதானிப்பூஊஊஊ. நான் என்னையே மெச்சிக்கிறேன்.

       • இதுக்காடா தங்களைத் தானே எரிச்சிட்டு பிரிஞ்சோம்னு யோசிக்க வச்சிருவாங்க போல.. பாவம் அக்கட உன்னவாருலு..
        • @@@@@@@@@@@@@@@@@@@@@@
 வர வர நீங்க ஒழுங்கா விமர்சனமே எழுதறது இல்லை என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுப்பத் துவங்கி விட்டார்கள். ஆமாம் நான் என் திரைப்பட வேலை ஆரம்பித்ததிலிருந்து திரை விமர்சனங்கள் எழுதுவதில்லை.. அப்படியே எழுதினாலும், தமிழ் படங்களுக்கு ஒர் சிறிய பத்தி மட்டுமே எழுதுகிறேன். விமர்சனமாய் இல்லாமல் என் கருத்தாய் எழுதுகிறேன். மற்ற மொழி படங்களுக்கு எழுதும் போது விமர்சனமாய் எழுதினாலும், தற்போதைய என் வேலைகள் காரணமாய் வேற்று மொழி படங்கள் பார்ப்பது குறைந்துவிட்டது. என்னை பாதித்த படங்களைப் பற்றி எழுதிக் கொண்டுதானிருக்கிறேன். ஏன் நீங்க அஞ்சானைப் பத்தி எழுதலைன்னு கேக்குறவங்களுக்கு நான் இன்னும் பாக்கலை என்பதுதான் உண்மை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
EXPENDABLES 3
ஆர்னால்ட், சில்வஸ்டர் ஸ்டாலோன், மெல்கிப்சன், ஹாரிசன் போர்ட், ஜெட்லீ, வெஸ்லி ஸ்நைப், ஜேசன் சாண்டன், டால்ப் லண்ட்க்ரன், என ஒரு சில பேரைத் தவிர, நடிப்பே வராத சூப்பர் ஸ்டார்கள் எல்லாரும் சேர்ந்து நடித்த படத்தின் மூன்றாவது பாகத்தை வேறு வழியேயில்லாமல் பார்க்க வேண்டிதாய் போயிற்று. இதற்கு முன் வந்த இரண்டு பாகத்தை பார்த்ததில்லை. தெலுங்கு படமான அஞ்சலியின் கீதாஞ்சலியை பார்க்க போய், அது ஹவுஸ்புல்லானதால், வேறு வழியில்லாமல், சத்யம் போனால் அங்கேயும் எக்ஸ்பெண்டபில் மட்டுமே அதுவும் கவுண்டரில் இல்லாமல் வாங்கி வைத்துக் கொண்டு ஒருவர் கேட்க, 115 ரூபாய் டிக்கெட்டிற்கு 120 கேட்டு அநியாயம் செய்ததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சரி ஐநாக்சுல போய் சுத்திட்டு வருவோம் என்று கிளம்பி அங்கே போனால் வழிமறித்த தலைகலைந்த இளைஞன் ரெண்டு டிக்கெட் இருக்கு என்றான். என்ன படமென்றேன். எக்ஸ்பெண்டபிள்ஸ் என்றான். விடாது கருப்பு போல என்று நினைத்துக் கொண்டு, டிக்கெட்டை வாங்கினால் ஒரு பத்து ரூபா சேர்த்து கொடுங்க சார் என்றான். ஐஞ்சு ரூபா தர மாட்டேன்னுதான் இங்கே வந்தேன் என்றதும் எங்கே நான் எஸ்ஸாகிவிடுவேனோ என்ற பயத்தில் கொடுத்த காசை வாங்கிக் கொண்டு ஓடினான். அவன் ஓடிய காரணம் ஏன் என்று படம் பார்த்த பின் தான் புரிந்தது. வர வர ஹாலிவுட் படங்கள் தமிழ், தெலுங்கு சினிமா ரேஞ்சுக்கு போய்க் கொண்டிருக்கிறது. நம்ப முடியாத சிஜி, மற்றும் டெக்னிக்கல் சமாச்சாரங்களைத் தவிர. க்ளைமாக்ஸ் வரை நான் சொன்ன அத்துனை திருப்பங்களோடும், சீன் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். மிடில.. அப்புறம் யாராச்சும் இந்த படத்தோட கதையை சொன்னா நல்லாருக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழகமும் சாராயமும்
கேரளாவை பாருங்க.. அவங்களே மதுவிலக்கு கொண்டு வந்திட்டாங்க.. அப்படின்னு ரெண்டு மூணு நாளா எல்லா அரசியல்வியாதியும், சாரி வாதியும் சொல்லிட்டிருக்காங்க.. நேற்று மழைக்கு ஒதுங்கிக் கொண்டிருந்த நேரத்தில் கூதல் காற்று வேறு இருந்ததால், சரக்கு பற்றி எனக்கும் கே.ஆர்.பிக்கும் பேச்சு வந்தது. சுற்றி மழைக்கு ஒதுங்கியிருந்த அத்துனை பேரிடமும், சரக்கு வாசனை. எதனால் சரக்கடிப்பது தவறான செயல் இல்லை என்ற எண்ணம் மக்களிடம் வரத் தொடங்கியது என்று யோசித்து பார்த்த போது, அதை ஜனரஞ்சகமான, கொண்டாட்டமான ஒர் அனுபவம் என்று திரும்பத் திரும்ப சொல்லியும், காட்டியும் ஒரு பொது பிம்பம் ஏற்படுத்தப்பட்டதால் என்று தோன்றியது. கேரளாவில் மதுவிலக்கு என்பது கொஞ்சம் கொஞ்சமாய் தான் அமல் படுத்தப் போகிறார்கள். சென்னையை  பொறுத்தவரை தண்ணியடித்து விட்டு வண்டியோட்டுகிறவர்கள் கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தேவிட்டார்கள். காரணம் தொடர் செக்கிங் மற்றும் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்ஸ். இன்னும் சில பேர் தமிழ்நாட்டு சரக்குகளையே அடிப்பதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு இருப்பதற்கான காரணம் இங்கே கிடைக்கும் சரக்குகளின் குவாலிட்டி. டிவியில் கூட மது உயிருக்கும் நாட்டிற்கும் கேடு என்று போட்டு வீடு வரைக்கும் வர ஆரம்பித்துவிட்டது. நண்பர்கள் நாலு பேர் கூடி பேச ஒரு காலத்தில் டீக்கடையில் கூடுவார்கள் இன்று டாஸ்மாக் பாரைத் தவிர வேறு இடத்தை  யோசிக்க முடியாத சூழ்நிலை வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்


 • கேபிள் சங்கர்


Post a Comment

1 comment:

Nat Sriram said...

அஞ்சு ரூபாக்காக ஒரு தியேட்டர்லருந்து இன்னொரு தியேட்டர் போனீங்களா :o