ராஜூ.....
ராஜூவை பார்த்ததுமே எனககு ரொம்ப பிடித்துவிட்டது..அப்பா,தம்பி, தங்கை என்று எல்லோருக்கும் பிடித்துவிட்டது அம்மாவை தவிர.. அம்மாதான் வேண்டா வெறுப்பாய் சரி என்று சொன்னாற் போல் தெரிந்த்து.. மெஜாரிட்டி வின்ஸ்.. ராஜூ என்று எதற்காக பெயர் வைத்தோம் என்று எனக்கு தெரியவில்லை..ஆனால் எல்லோருக்கும் ரொம்பவே பிடித்துவிட்டதால் அதையே வைத்து கூப்பிட.. ஆரம்பிக்க..முதல் முறை கூப்பிடும்போது அது எனக்கென்ன என்று உட்கார்ந்திருக்க.. ச்சூ..சுசூ ராஜூ என்று பேர் சென்னதும்.. அவன் திரும்பியது.. சூசூவுக்கா..இல்லை பேரை தெரிந்தா என்று பட்டிமன்றம் நடந்த்து.. அவனுக்கு பால் கொடுப்பது, வாக்கிங் போகிறேன் பேர்விழி என்று இரண்டொருநாள் அவனுடய கழுத்தில் பட்டை அதில் ஓரு மணி என்று ஜோடித்து போய் விட்டு வெளியே பீத்தி கொண்டவுடன், வாக்கிங் நின்று போயிற்று.. அவனுடய் வளர்ச்சி ரொம்ப சீக்கிரமே வளர்ந்துவிட்டான்.. ரொம்ப கோபக்காரனாயிட்டான்.. யாரையும் உள்ளே விடமாட்டான்.. நானோ..அலலது என் அப்பாவோ போய் அவனிடம் போய் காட்டி “ராஜு.. இவரு நம்ம ப்ரண்ட் “என்று அறிமுகத்துக்கு அப்புறமே போனால் போகிறதென்று பக்கத்தில் வந்து உட்கார்ந்து,வாலாட்டிய பிற்கும் சந்...