Posts

Showing posts with the label க்ளைமேக்ஸ்

மீண்டும் ஒரு காதல் கதை -10

Image
”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? நான்கைந்து  வருடங்கள் இருக்குமா? “யெஸ்” “ஹாய்.. ஐம் ஷ்ரத்தா ஹியர்..” என்ற சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தாள். ஷரத்தா.. ஆம ஷரத்தாவேதான். அவளுக்குத்தான் இந்த பெயரை இவ்வளவு ஸ்டைலாய் உச்சரிக்க முடியும். கர்வமாய், மந்தஹாசமாய்.. அவளால் மட்டுமே முடியும்.   அன்று போனவள்தான், அதற்கப்புறம் இப்போதுதான் பேசுகிறாள். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவளின் குரலை கேட்கும் போதும் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடத்தான் செய்கிறது. “யெஸ்.. ஷ்ரத்தா.. ஷங்கர் ஹியர்.. குட் டு ஹியர் யுர் வாய்ஸ்..” “இன்னும் என்னை மறக்கவில்லை இல்லையா..?. நான் உன்னை சந்திக்க வேண்டுமே..? உன்னால் ட்ரைடண்டுக்கு வரமுடியுமா?” நான் என் செல்லில் மணி பார்த்தேன். மதியத்துக்கு மேல் பெரிதாய் வேலையேதும் இல்லை. நாளை தான் ஒரு க்ளையண்டிடம் ஒரு விளம்பர பட விஷயமாய் பேச வேண்டும். “ஷ்யூர்.. ஷ்ரத்தா.. நிச்சயமா.. என்ன ரூம் நம்பர்?” “208.. உனக்காகத்தான் ...