Posts

Showing posts with the label Followers

என்னன்னு சொல்றது..?

Image
நான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான்.  இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம், திடீர்னு ஒரு நாள்  2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா  இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா)  அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி குடிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு. என்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா..? தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான். முதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜ...