B.A. Pass
தொட்டால் தொடரும் படப்பிடிப்பு காரணமாய் படம் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் போனில் “தலைவரே நீங்க தொடரா எழுதிட்டு இருந்த கதை ஹிந்தியில படமா வந்திருச்சு” என்றார். நான் எழுதி வந்த நான் ஷர்மி வைரம் கதையைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது. ஆண் விபசாரனைப் பற்றிய கதை. உடனடியாய் படத்தை தேடி டவுன் லோட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.