Thottal Thodarum

Nov 13, 2013

B.A. Pass

 
தொட்டால் தொடரும் படப்பிடிப்பு காரணமாய் படம் பார்ப்பதற்கு நேரமில்லாமல் போய்விட்டது. இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் போனில் “தலைவரே நீங்க தொடரா எழுதிட்டு இருந்த கதை ஹிந்தியில படமா வந்திருச்சு” என்றார்.  நான் எழுதி வந்த நான் ஷர்மி வைரம் கதையைத்தான் சொல்கிறார் என்று புரிந்தது. ஆண் விபசாரனைப் பற்றிய கதை.  உடனடியாய் படத்தை தேடி டவுன் லோட் செய்து பார்க்க ஆரம்பித்தேன்.


முகேஷின் பெற்றோர்களின் மரணத்தில் படம் ஆரம்பிக்கிறது. வேறு வழியேயில்லாமல் உறவினரின் குடும்பத்துடன் அடைக்கலமாகிறான் முகேஷும், அவனது சகோதரிகளும். அவர்கள் குடும்பத்தோடு இணையவும் முடியாமல், ஆண்டியின் இம்சை தாங்காமல் தங்கைகளை ஒர் ஹாஸ்டலில் விட்டு விட்டு, காலேஜ் போய்க் கொண்டிருக்கிறான். செஸ்ஸில் ஆர்வமுள்ள முகேஷுக்கும் , சவப்பெட்டி செய்யும் ஜானிக்கும் நட்பு உண்டாகிறது. அச்சமயம் வீட்டிற்கு வரும் ஆண்டியின் தோழிகளில் ஒருத்தியான சரிகா முகேஷை தன் வீட்டிற்கு ஆப்பிள் வாங்கிக் கொண்டு போவதற்காக வரச் சொல்லி, அவனை கட்டாயப்படுத்தி உறவு கொள்கிறாள். அப்படி உறவு கொண்டதற்கு பணமும் கொடுத்து, எத்தனை நாள்தான் உன் ஆண்டியிடம் கையேந்திக் கொண்டிருப்பாய் என்று ஏற்றி விட்டு, அவளைப் போலவே ஆர்வமுள்ள ஆண்டிகளிடம் இவனை அனுப்பி வைத்து ஆண் விபச்சாரி ஆக்குகிறாள். கை நிறைய பணம் சம்பாதிக்க துவங்க, தங்கைகளின் வார்டனின் இம்சை வேறு இருப்பதால் மேலும் பணம் சம்பாதித்து, தங்கைகளை தனி வீட்டில் கொண்டு குடித்தனம் வைக்க முயலும் போது, அண்டியிருக்கும் ஆண்டியின் பையன் அவனின் ட்ராயரிலிருந்து பணம் திருட முயற்சிக்கிறான். அதை பத்திரப்படுத்த சரிகாவிடம் கொடுத்து வைத்துவிட்டு கிளம்பும் போது சரிகா அவனை உறவு கொள்ள அழைக்க, அச்சமயம் பார்த்து அவளின் கணவன் வந்துவிடுகிறான். அதன் பின் அவளை தொடர்பு கொள்ள முடியாமல் போக, அவனின் பணமும், அவளிடம் மாட்டிக் கொண்டுவிட, தங்கைகளை கொண்டு வந்து தனிக்குடித்தனம் நடத்த் பணமில்லாமல் அலைகிறான். வேறு வழியே இல்லாமல் தன்னை ஒரு கேவாக காட்டிக் கொண்டு போகக்கூட முயற்சிக்கிறான். பழைய கஸ்டமர்களை தொடர்பு கொள்ளும் போது சரிகாவின் நெட்வொர்க் மூலமாய் வராததால் அவாய்ட் செய்கிறார்கள். பின் என்ன ஆனது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

மேல் ப்ராஸ்டிடூஷனைப் பற்றிய படம் என்பதால் வெறும் செக்ஸ் படமாய் இருக்குமென்று நினைத்தீர்கள் என்றால் ஏமாந்து போவீர்கள். படம் ஆரம்பித்தது முதல், சரிகா அவனை செட்யூஸ் செய்யும் காட்சியில் ஆரம்பித்து, அவன் விபசாரனாய் வலம் வரும் காட்சி வரை எங்கேயும் கொஞ்சம் தப்பினாலும், படு ஆபாசமாய் போய்விடக்கூடிய காட்சிகளை மிக நாசூக்காக பெண்களின் எராட்டிசத்தையும், அவர்கள் இன்னொரு முகத்தையும் மிக இயல்பாய் காட்டியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாய் டிவி சீரியல் நடிகை ஒருத்தி முகேஷுடன் உறவு கொள்ளும் போது வேறொரு பெயரை சொல்லியபடியே செக்ஸில் ஈடுபட, ஆரவம் தாங்காமல் முகேஷ் அது யாரு? என்று கேட்க, “என் புருஷன் பேரு” என்று சிரித்துவிட்டு, கட்டுக்கட்டாய் பணத்தை அவன் மேல் வீசியெறிந்துவிட்டு போகும் காட்சி, இறந்துவிடுவான் என்று தெரிந்தே அவனின் சாவுக்காக காத்திருந்து வெறுத்துப் போய் இவனிடம் வரும் தீப்தி நவல் வரும் ஒரு காட்சி கிட்டத்தட்ட கவிதை. முகேஷ் நெருங்கி வருகையில் “வேண்டாம்” என்று விலக்கிவிட்டு, அவனிடன் தன் கதையை சொல்லி படுப்பவருக்கு வரும் போனில் அவரது கணவர் இறந்துவிட்டார் எனும் செய்தி வருகிறது. படுக்க வந்த பையனுடனேயே தன் கணவனின் உடலைப் பெற்றுக் கொண்டு, வீட்டிற்குள் இறக்கியவுடன், “நீ கிளம்பு.. உறவுக்காரங்க எல்லாம் வந்திருவாங்க” என்று சொல்லி அனுப்பும் இடம் க்ளாஸ். 

சரிகாவாக நடிக்கும் ஷில்பா சுக்லாவின் நடிப்பு அருமை. கையும் களவுமாய் கணவனிடம் மாட்டிக் கொண்டபின் என்ன செய்வது என்று பதறாமல் கதவு மூடியிருக்கு இல்லை இப்படி உடைச்சிட்டா வரது என்று கேட்குமிடத்திலாகட்டும்,  சரசரவென முகேஷை கட்டிலில் கிடத்தி, தன் உடைகளை அநாயசமாய் கழட்டி அவன் மேல் பரவுமிடமாகட்டும், க்ளைமாக்சில் வேறு வழியேயில்லாமல் செய்யும் காரியமாகட்டும், அருமை. முகேஷாய் நடித்திருக்கும் சதப் கமலின் நடிப்பும் பாராட்டப் பட வேண்டிய ஒன்று. இந்த வேலையை செய்ய முடியாது என்று பணத்தை திரும்பிக் கொடுத்துவிட்டு போய்விட்டு வேறு வழியேயில்லாமல் அதை தன் தங்கைகளுக்காக தொடர நேரும் வருத்தமும்,  அதே நேரத்தில் பணத்தை ஏமாற்றியதன் காரணமாய் சரிகாவின் மீது ஏற்படும் கோபமும், ஏதும் செய்ய முடியாமல் கையாலகத்தனமாய் உணரும் காட்சிகளில் அழகாய் சோபித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளராய் இருந்த இயக்குனராய் அடியெடுத்து வைத்திருக்கும் அஜய் பேல் இரண்டு நிலையிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாய் சரிகா வீட்டில் உள்ள கிழவி பேசும் பேச்சு.செஸ்ஸில் ஆர்வமுள்ள முகேஷின் வாழ்க்கையில் செய்த தவறான மூவ் எப்படியெல்லாம் அவனின் வாழ்க்கையை மாற்றியமைத்தது என்று ஒர் காட்சியில் ஜானியும், முகேஷும், செஸ் ஆடும் போது வைத்த காட்சி, இரவு நேர நியான் விளக்குகளின் இடையே ஓடும் முகேஷை துரத்தும் காட்சி, சரிகாவுக்கும், முகேஷுக்கும் இடையே நடக்கும் உடலுறவு காட்சி என  டபுள் செஞ்சுரி அடித்திருக்கிறார். ஏகப்பட்ட திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் படமாய் அமைந்திருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நிச்சயமாய் போல்டான, ஒரு டார்க் படம் பி.ஏ.பாஸ். தமிழில் எல்லாம் இந்தப்படம் இப்போதைக்கு சான்ஸ் இல்லை. அட்லீஸ்ட் நான் அந்த தொடரையாவது எழுதி முடிக்கிறேன். 
கேபிள் சங்கர்


டிஸ்கி: என் நாவலில் வரும் பல காட்சிகள் இப்படத்தில் ஆங்காங்கே கோடி காட்டப்பட்டிருப்பது ஒரு விதத்தில் சந்தோஷமாய் தானிருக்கிறது. அதற்காக இது என் கதையென்று புலம்ப மாட்டேன் நான் நிஜத்தில் சந்தித்த சில மனிதர்களை வைத்துத்தான் எழுதினேன். அதே போல இது ரயில்வே ஆண்டி என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம். அந்த எழுத்தாளரும் இப்படிப்பட்ட ஒருவனை சந்தித்திருக்கலாம்.

Post a Comment

6 comments:

ராஜ் said...

நச் விமர்சனம்...
இந்த படம் The Railway Aunty என்கிற சிறுகதையை தழுவி எடுக்க பட்டது என்று தான் நினைத்து இருந்தேன்.
அந்த கதையை தமிழில் மொழிபெயர்த்து ஒரு பதிவர் எழுதி உள்ளார்..
The Railway Aunty சிறுகதையை தமிழில் படிக்க மதுரை மல்லி- The Railway Aunty

சரவணன் said...

மூனு மாத்த்துக்கு முன்னாடி நான் வெளியிட்ட மொழி பெயர்ப்புக் கதைக்குத் திடீரென்று இன்று 160 ஹிட்சும் புதிய பின்னூட்டங்களும் வந்திருக்கேன்னு ஆச்சரியப்பட்டேன்! முதலில் தோன்றியது சாரு இந்தப் படத்தைப் பற்றி எழுதியிருப்பாரோ என்று :)) பிறகுதான் தெரிந்தது நீங்கள் எழுதியிருப்பது! இப்பொழுதாவது தமிழ் ரசிகர்களுக்கும் வாசகர்களுக்கும் இந்தப் படமும் கதையும் அறிமுகமானதே. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்திருக்கும் அறிமுகம்! நன்றி!

kothandapani said...

உங்களை போன்ற சினி ஞானம் இல்லாத ஒரு சாதாரண layman நான் . என் மனத்தில் பட்டது இது.

ஒரு படத்தின் title ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தவேண்டும் , எங்கேயும் காதல் என்றெண்டும் புன்னகை போன்ற title எல்லாம் ஆனவரையும் குழப்பி புது படம் என்ற ஆவலையே ஏற்படுத்தவது இல்லை. அதே போல் உங்கள் தொட்டால் தொடரும் title ஒரு புத பட ஆவலை ஏற்படுத்தௌவாதாக இல்லை. முடிந்தால் வேறு ஒரு டைட்டிலை ட்ரை பண்ணவும்

யுவகிருஷ்ணா said...

கேபிள், ‘ரயில்வே ஆண்டி’ சிறுகதை வந்து ஒரு நாலு வருஷம் இருக்கும். அப்பவே ரொம்ப பரபரப்பா இருந்துச்சே?நினைவில்லையா?

Unknown said...

Vaalga cable, valarga cable..

k.rahman said...

long time. no padhivu? what happened sir