Thottal Thodarum

Nov 11, 2013

கொத்து பரோட்டா -11/11/13

”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள்  முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும்.  ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில் அவருடன் பயணிப்பதும், எல்லாவற்றிக்கும் “உம்” கொட்டுவதை தவிர்த்திருக்கலாம். பவா வேட்டை கதை சொல்லும் இடம் அருமை. பார்த்து கேட்டால் மட்டுமே அதன் சுகம் புரியும். நம் வாழ்நாளில் நம்முடன் இருக்கும் கதைசொல்லியை பற்றிய ஆவணப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டுமோ என்ற ஒர் சிறிய ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
ஒர் ஆவணப்பட வெளியீட்டுக்கு இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மைக்குக்கு பின்னால் கிடைத்த சீட்டில் படம் பார்த்தேன்.  பட ஒளிபரப்புக்கு பின் வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட, இயக்குனர் சேரன், நா.முத்துகுமார் ஆகியோர் அன்புடன் அழைத்து “தொட்டால் தொடரும்” பட வேலைகள் குறித்தும் பேசினார்கள். பார்க்கும் பத்திரிக்கை நண்பர்கள், திரைப்பட நண்பர்கள் அனைவரும் படம் குறித்து விசாரித்தது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளூர லேசான நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. வீரம்னா பயமில்லா நடிக்கிறதுன்னு கமல் சொன்னாரில்லை அதை பாலோ பண்ணிட்டிருக்கேன். 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@என் ட்வீட்டிலிருந்து.
கோபம் வன்முறையல்ல. கோபம் தோல்வியல்ல.. கோபம் உன் உணர்வுகளின் வெளிப்பாடு..
 • கூடவே இருந்து தப்பா பேசுறவனை விட விலகி நின்னு குத்தம் சொல்லுறவன் மேலு.
  • நல்லவனாயிருந்தா சர்வைவ் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்றவங்க அவளுக்கே தெரியாம நான் ரொம்ப கெட்டவன்னு சொல்லிடறாங்க # அவதானிப்பூ
   • சமயங்களில் விஜய் டிவி தன் நிகழ்ச்சிக்களுக்கென பிரத்யோகமாய் யோசிக்கத்தான் செய்கிறார்கள் # ஏர்டெல் சூப்பர் சிங்கர்.
    • happy days பாடல்களையும் விட்டு வைக்கவில்லை என்றென்றும் புன்னகையில்.. ம்ஹும்..
     • எல்லோரையும் அனுசரித்து இணைந்து பணியாற்றுவது ஆளுமையின் ஒர் அங்கம்தான். புரிஞ்சவன் பிஸ்தா

      டென்ஷனை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டேயிருப்பதால் ரொம்ப நல்லவன்னு பெயர் கிடைக்கிறது.

      அனைவரும் தன்னை பாராட்ட மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பது பேராசையைவிட மோசமான ஆசை

      என்னவோ தெரியலை கிரிஷ் 3 பார்க்கவே தோணலை.. ஏன்?

      சட்டம் போட்டதோடு சரி போல.. வழக்கம் போல் ஆட்டோக்கள்.

      தீபாவளி விடுமுறை எக்ஸ்டென்ஷனை கெடுத்த மழையை சபித்துக் கொண்டே குழந்தைகள்.

      சண்டியர்னு ஒரு பட விளம்பரம். கமலுக்கு மட்டும் ஏன் இப்படி?
           • @@@@@@@@@@@@@@@@@@@@
            தொட்டால் தொடரும்
            இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட படப்பிடிப்புக்கு வருகிற 18 ஆம் தேதி முதல் கிளம்புகிறோம். எடுத்தவரை எடிட்டிட்டு பார்த்ததில் வேலை பார்த்தவர்கள் அனைவருக்கும் திருப்தியாய் இருக்கிறது. மிச்சமும் அதே போல வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
            @@@@@@@@@@@@@@@@@@
            அடல்ட் கார்னர்
            A drunk guy walks into a bar and walks up to a guy and says, “I just had sex with your mom!” The guy walks away angrily.
            A few minutes later the drunk guy comes up to the guy again and says, “I just had great sex with your mom!” The guy walks away angrily.
            A few minutes later the drunk guy comes up to him again and says, “I just had the best sex ever with your mom!” The guy now says, “Shut up dad! You’re drunk again!”
            கேபிள் சங்கர்

Post a Comment

7 comments:

காவேரிகணேஷ் said...

hearty wishes to your entire team.. your hard work will fetches superb results..

R.Gopi said...

//சண்டியர்னு ஒரு பட விளம்பரம். கமலுக்கு மட்டும் ஏன் இப்படி?//

உத்தம வில்லன் கமல் 59 வயதில் சிறு வயது காஜல் அகர்வால் ஜோடியாக .... ஏன் ? முன்பு ஸ்ரேயாவை சிவாஜியில் ரஜினி ஜோடி சேர்த்ததும் இந்த வயதில் இவருக்கு ஸ்ரேயா ஜோடியான்னு கேட்ட அந்த மகானுபாவு ஜூனியர் ஆண்டவர்ஸ் எங்கே?

சக்தி முருகேசன் said...

Elloorutaiya patathyum kuththam solreengalla..i am waiting for your film..best of luck...

Vadivelan said...

All the best :)

'பரிவை' சே.குமார் said...

கொத்துப் பரோட்டா சுவையாய்...

Unknown said...

In your description you used some known personalities name. Please let me know whether you use their names just to show that you have links with big people . Please correct me if I am wrong

ம.தி.சுதா said...

////மிச்சமும் அதே போல வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்////

என் பிரார்த்தனைகளும் அண்ணா.. காத்திருக்கிறோம்